( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மூன்று மூர்த்தியும் ஒரே மூர்த்தியா...?


சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளின் வடிவம் முருகன் என்று சொல்கிறார்களே அது எப்படி?
சுடலை முத்து மஸ்கட்

     நமது தமிழ் புலவர்கள் எல்லாம் முருகு என்றால் அழகு என்று சொல்வார்கள்.  ஆறுமுகப் பெருமானின் அங்க லாவண்யத்தை அணு அணுவாக வர்ணித்து அனுபவித்த அருணகிரி நாதரும், முருகு என்ற வார்த்தையை பல முறை சொல்லி மெய்யுறுகி பாடுகிறார். 

  முருகு என்பது அழகை மட்டும் குறிக்கவில்லை.  அதில் உள்ள மு என்ற முதல் எழுத்து திருபாற் கடலில் அனந்த சயனத்தில் இருக்கும் நாரயணனின் திவ்ய நாமங்களில் ஒன்றான முகுந்தனை குறிக்கும்.  முகுந்து என்றால் காப்பவன் எனப்பொருளாகும்.  திருமால் காக்கும் கடவுள் தானே.  அதனால் முருகன் காக்கும் கடவுளாகவும் இருக்கிறான்.

     முருகுவில் அடுத்த எழுத்து ரு வாகும்.  இது சிவபெருமானுக்குரிய ருத்திரன் என்ற பெயரை குறிப்பதாகும்.  ருத்ரன் என்ற வார்த்தைக்கு நேரடி பொருள் அழிப்பவன் என்பதாகும்.  சிருஷ்டியின் முடிவில் பிராளயம் என்ற சம்ஹாரம் வருவது இயற்கை.  அந்த சம்ஹார மூர்த்தியாகவும் முருகன் இருப்பதனால் அவனிடம் சிவத்தன்மையும் இருக்கிறது.  கடைசியாக உள்ள எழுத்து கு வாகும்.  கு என்றால் படைத்தல் எனப்படும்.  அதனால் முருகன் பிரம்மனாகவும் இருக்கிறான்.
 
+ comments + 4 comments

Anonymous
11:55

முருகன் என்பவர் ஒரு சித்தர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

Anonymous
17:00

ஏசுநாதன் என்பவர் ஒரு ஆவி.. இன்றும் பரலோகத்தில் பாவியாய் அலைந்து கொண்டிருக்கிறார்

Anonymous
10:37

இயேசு நாதரும் ஒரு சித்தரே அவரும் தமிழ்நாட்டில் பிறந்தவரே

14:56

sabash sariyaga koorineer


Next Post Next Post Home
 
Back to Top