( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கேட்டதை தருபவன் கடவுள் அல்ல


  ண்டியிட்டேன் அழுதேன் தொழுதேன் கரம்கூப்பி கண்ணீர் மல்கிட என் வேண்டுதலை அவரிடம் தெரிவித்தேன்

ஊரிலுள்ளோர் துயரமெல்லாம் அவருக்குத் தெரிகிறது

என் கஷ்டம் மட்டும் அவர் கண்ணில்பட மாட்டேன் என்கிறது

என்னைப் பொருத்தவரை கடவுள் செவிடு குருடு இதயமே இல்லாத கற்சிலை

என்று நாமும் நம்மில் பலரும் பல சமயங்களில் விரக்தியின் எல்லைக்கே சென்று அங்கலாய்க்கிறோம்

இது சரியான அனுகு முறையா?

மின்சார சக்தி மனிதனுக்கு பல விதத்திலும் பயன் தருகிறது.

ஒரு இயந்திரத்தில் மின்சாரம் பாய்ந்து விசிறியாக சுத்துகிறது.

வேறொரு இயந்திரத்திலோ நீரை இறைத்து தருகிறது.

தண்ணீரை சூடாக்கவும், காற்றை குளிர வைக்கவும் மின்சாரம் பயன்படுகிறது.

அதே போல தான் கடவுள்.

அறிவை வேண்டும் போது கலைமகளாகவும்,

செல்வத்தை வேண்டும் போது அலைமகளாகவும்,

வீரத்தை வேண்டும் போது மலைமகளாகவும் காட்சி தருகிறாள்.

முக்தி மட்டும் தந்தால் கடவுளின் பேரருளுக்கு இது தான் எல்லை என முடிவு கட்டியது போல ஆகிவிடும்.

கடவுளின் கருணை எல்லையற்றது. அவரிடம் எது வேண்டுமென்றாலும் கேட்பதற்கு மனிதனுக்கு உரிமை உள்ளது.

ஆனால் கேட்டதை எல்லாம் தந்து விட வேண்டுமென்ற அவசியம் கடவுளுக்கு கிடையாது.

காரணம் அவர் கருணை நிரம்பியவர் மட்டுமல்ல அறிவு மயமானவரும் ஆகும்.

எதை எப்போது தரவேண்டுமென்பது அவருக்கு நன்றாக தெரியும்.

ஒரு குழந்தை பனிகாலத்தில் ஐஸ்கீம் கேட்டாலோ வெயில் காலத்தில் கம்பளி சட்டை கேட்டாலோ பொறுப்பான பெற்றோர்கள் கொடுத்து விட மாட்டார்கள். கடவுளும் அப்படி தான்.

     மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும் 


+ comments + 5 comments

Anonymous
05:32

NANDRI GURUVE

அருமை!
பகிர்வுக்கு நன்றி Sir!

கடவுள் எல்லோரையும் சமமாக இடை போடும் கருனை வள்ளல் அவன் அவனுக்கு வேற்றுமை ஆக்கி வேதனைப்படுத்தத் தெரியாது. அவன் மனிதன் அல்ல. நாம் செய்த விணைப் பயனே இன்பமும் துன்பமும் அதை அனுபவிப்பதே பிறவியின் பயன் இறை அருன் குருவருள் அதை உணர்ந்து அடைந்தாலே திருவருள் அதுவே அவன் அருள் . இருளை அகற்றுபவன் குரு.

RANGAN
19:34

ஒரே ஒரு முறை கேட்டேன் அய்யா. ( ஒருவர் சொல்லிய ஒரு எளிய முறை மூலம்) கிடைத்தவிதம் !!! என் வாழ்வில் சந்தோஷமான திருப்பம் !!! ஆனா அப்புறம் வந்தது பாருங்க ஒரு ஆப்பு !! - வேண்டாம் சாமி - அது அது கிடைக்கும்போது கிடைக்கட்டும்.

மிக அருமையான வாழ்வியல் த்த்துவம் நன்றி குருஜி


Next Post Next Post Home
 
Back to Top