Store
  Store
  Store
  Store
  Store
  Store

போலி வேஷத்தை கலைக்க வேண்டும் !


      ந்தியா மத சார்பற்ற நாடு நமது அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் இப்படி எல்லோருமே மேடையில் வாய்வலிக்க கூவுகிறார்கள் மதசார்பற்ற நாடு என்றால் என்ன? அதன் தாத்பரியம் என்ன என்பது இவர்களில் யாருக்காவது தெரியுமா? யாராவது ஒருவர் அந்த உண்மையை உணர்ந்திருக்கிறார்களா? அல்லது அதன் உண்மை பொருளை ஒத்துக்கொள்வார்களா?

ஒரு அலுவலகத்தில் நாலுபேர் வேலை செய்கிறார்கள் நாலு பேரும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள் பல பண்பாடுகளை உடையவர்கள் அவர்களுக்கு அதிகாரியாக இருக்கும் ஒருவர் எப்படி நடந்து கொள்வார் அவர் இவர்களிலிருந்து வேறுபட்ட மொழி கலாச்சாரம் கொண்டவராக இருந்தாலும் தனக்கு கீழ் உள்ள நாலு பேரையும் சமமாக நடத்துவார் அவர்களிடம் பாகுபாடு அற்ற உறவு நிலையையே பாராட்டுவார் அப்போது தான் அந்த அலுவலகம் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாக இயங்கும் மாறாக யாரவது ஒரு ஊழியரிடம் தனிக்கவனம் செலுத்தபடுமேயானால் மற்றவர்கள் போர்க்கொடி தூக்குவார்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள் அமைதியான அலுவலகம் போர்களமாக மாறிவிடும்


   நமது நாடும் இன்று ஏறக்குறைய இப்படி பட்ட நிலையில் தான் இருக்கிறது மத சார்பற்ற என்ற வார்த்தைக்கு நமது அரசியல் தலைவர்கள் கொள்கின்ற பொருள் முற்றிலும் மாறுபட்டதாக விந்தையானதாக வேடிக்கையாக ஏன் சில நேரம் விசமதனமாகவும் இருக்கிறது மத சார்பற்ற என்றால் கடவுள் நம்பிக்கையே இல்லாத நாத்திக நிலை என்று பொருள் கொள்கிறார்கள் அல்லது சில நேரம் எதாவது ஒரு மதத்தாருக்கு மட்டுமே சலுகைகளை வழங்கி மற்ற மதத்தினரை நோகடிக்க செய்து தங்களது மதசார்பின்மையை வெளிக்காட்டி கொள்கிறார்கள்

எங்கேயும் இல்லாத கொடுமை இந்த நாட்டில் மட்டும் தான் இருக்கிறது இங்குள்ள மக்கள் பெருவாரியானவர்கள் இந்துக்கள் இவர்களில் ஓட்டுகளை பெற்று தான் பதவிக்கு வருகிறவர்கள் அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள் அதிகாரம் கைக்கு வந்ததும் தனக்கு யார் ஒட்டு போட்டார்களோ அவர்களுக்கு விரோதமாக நடப்பது தான் தங்களது கடமை என்பது போல நடந்து கொள்கிறார்கள் இந்து மதத்தை தாக்குவதிலும் கேலி செய்வதிலும் இவர்களே முன்னிற்கிறார்கள்

ஒரு அரசியல் தலைவர் எந்த அளவு இந்து மதத்தை தாக்குகிறாரோ அந்த அளவே அவர் முற்போக்குவாதி என்றும் சமூக நீதி காவலர் என்றும் வர்ணிக்கப்படுகிறார் திரைக்கு பின்னால் கோயில் கோயிலாக ஏறி இறங்குபவர்களும் குலதேவதை கோயில்களுக்கு அபிசேக ஆராதனை செய்கிறவர்களும் மத குருமார்களின் பாதங்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குபவர்களும் திரைக்கு முன்னால் வருகிற போது தாங்கள் என்னவோ பரம்பரை பகுத்தறிவு வாதிகள் என்பது போல நாடகம் ஆடுகிறார்கள் இந்த நாடகம் மனசாட்சிக்கு விரோதமானது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ஆனாலும் மனம் என்பதே தேவையற்ற பொருள் என்று கருதிவிட்ட அவர்கள் அதன் சாட்சிக்கு பயப்படவா போகிறார்கள்


ஒரு மனிதனிடமுள்ள கடவுள் நம்பிக்கையும் மத ஈடுபாடும் அவனை குற்றங்கள் செய்ய அச்சப்படுத்தும் சிறிதளவாவது நியாய தர்மங்களுக்கு கட்டுப்பட்டவனாக இருப்பான் என்று உளவியல் சாஸ்திரம் சொல்கிறது அப்படி இல்லாதவர்கள் எதை பற்றியும் கவலை இல்லாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று எத்தகைய பாதக செயலையும் செய்ய துணிவார்கள் என்றும் சொல்லப்படுகிறது இதன் அர்த்தம் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் தீமை செய்ய மாட்டார்கள் என்பதல்ல செய்வதற்கு சிறிதாவது தயங்குவார்கள் என்பது தான்

மற்ற மாநிலங்களை விட நமது தமிழ் நாட்டில் நாத்திகம் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகம் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொள்வது பெருமை என்று சில மேதாவிகள் நினைக்கிறார்கள் மேடையில் ஏறிவிட்டால் நாத்திகம் பேசினால் தான் கைதட்டல் கிடைக்குமென்று பலர் தப்புகணக்கு போடுகிறார்கள் இதனால்தானோ என்னவோ மற்ற மாநிலங்களை விட நமது தமிழநாட்டில் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது பல நேரம் இங்குள்ள அரசியல்வாதிகளை பார்த்து தான் மற்ற அரசியல் வாதிகள் முறைகேடு செய்வதற்கே பழகி கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது அந்த கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை

நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு அனைத்து மதத்தையும் சமமாக பார்க்கும் உயர்ந்த மனப்பான்மை எப்போதுமே கிடையாது சிறுபான்மை மக்களுக்கு அதிகப்படியான தனிச்சலுகைகள் கொடுப்பதாக சொன்னால் அவர்கள் அனைவரும் தனக்கு பின்னால் அணிவகுத்து நிற்பார்கள் என்ற எண்ணத்திலும் அனைத்து ஓட்டுகளும் தனக்கு மட்டுமே கிடைக்குமென்ற ஆசையிலும் போலியான கரிசனத்தை அந்த மக்கள் மீது காட்டுவது மட்டுலமல்ல அவர்கள் இந்து மதத்தை தாக்க வருகின்ற போது கூட கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள்


ஒரு கிறிஸ்தவனுக்கோ அல்லது இஸ்லாமியனுக்கோ தீங்கு ஏற்படுகின்ற போது தலைவர்கள் ஓடிவருகின்ற வேகம் இந்துக்கு ஏற்படும் போது இருப்பதில்லை மாறாக தனக்கு வந்த துயரை வாய்திறந்து சொல்ல கூட ஒரு இந்து குடிமகனுக்கு முழுமையான உரிமையில்லை அவன் உரக்க சொன்னாலும் அது யார் காதிலும் விழாது அப்படியே விழுந்தாலும் அது ஒரு மத வெறியனின் ஆவேச கூவல் என்று தான் மற்றவர்களால் விமர்சிக்க படுகிறது

உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் தனிதன்னமை என்பது இயற்கையாக அமைந்துள்ளது அல்லது அந்த தனித்தன்மை இறைவன் கொடுத்த வரம் என்றே சொல்லலாம் மனிதனுக்கு எப்படியோ அப்படியே ஒவ்வொரு தேசத்திற்கும் தனிதன்ம்மை இருக்கிறது எந்த தேசம் தனது தனித்தன்மையை விட்டு விடுகிறதோ அல்லது அந்த தனி தன்ம்மையை போற்றி பாதுகாக்க தயங்குகிறதோ அந்த தேசம் நாளடைவில் அழிவு பாதையை நோக்கி விரைந்து சென்று விடும்

இன்று உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் சிறப்பான தனித்தன்மைகள் உண்டு அமெரிக்காவின் தனித்தன்மை மற்றவர்களை ஆளுமை செய்வது இங்கிலாந்தின் தனித்தன்மை சட்டங்களையும் பாரம்பரியத்தையும் மதித்து நடப்பது ஜப்பானின் தனித்தன்மை அயராத உழைப்பு சீனாவின் தனித்தன்மை தன்னலத்தை மட்டுமே பேணி காப்பது அதே போல இந்தியாவுக்கு என்று தனிதன்னமை இருக்கிறது அது தான் இந்து மதம் இதை நான் சொல்லவில்லை சிக்காகோ நகரில் சுவாமி விவேகானந்தர் வீர முழக்கம் செய்து சொல்லியிருக்கிறார் இந்த தனித்தன்மையை இந்தியாவின் ஆத்மா மதமென்று அழாகான மொழி நடையில் வர்ணனை செய்கிறார்


ஒரு உடம்பில் இருந்து ஆத்மா வெளியேறிய பிறகு அந்த உடம்பு அழுகி நாரி போய்விடும் இந்தியாவின் ஆத்மாவான மதத்தை நமது அரசியல்வாதிகள் சிறிது சிறிதாக சித்தரவதை செய்து வெளியேற்றி கொண்டிருக்கிறார்கள் அதன் விளைவு தான் நமது நகரங்களும் கிராமங்களும் கலாச்சார சீரழிவால் மிகப்பெரும் அபாயத்தை நோக்கி போய்கொண்டிருக்கிறது ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகளான செல்போனும் இன்டர்நெட்டும் நமது இளைஞர்களின் பாலியல் வக்கிரங்களை சுமந்து செல்லும் சாதனமாக ஆகிவிட்டது பதினைந்து வயது பையன் பாடம் எடுக்கும் ஆசிரியை குத்தி கொலை செய்கின்ற அளவிற்கு நமது பண்பாடு கெட்டு போய்கிடக்கிறது என்றால் அதற்கு காரணம் தேசத்தின் ஆத்மாவான மதம் மறக்கப்பட்டு போனதே ஆகும்

நான் கிறிஸ்தவம் இஸ்லாம் ஆகிய மதங்களை சார்ந்தவர்களுக்கு அரசாங்கம் எந்தவகையிலும் உதவ கூடாது அவர்களுக்கு சலுகைகள் வழங்க கூடாது என்று ஒரு போதும் சொன்னதில்லை கிறிஸ்தவர்களை விட இஸ்லாமியர்கள் வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் பின்தங்கி இருக்கிறார்கள் அவர்களை கைதூக்கி விடவேண்டியது அரசாங்கத்தின் மிக முக்கிய கடமை அதே போலவே வறுமையில் கிடக்கும் கோடான கோடி கிறிஸ்தவர்கள் உண்டு அவர்களுக்கும் அரசாங்கம் உதவி செய்யலாம் அதில் தவறில்லை அதே நேரம் ஒரு இந்துவுக்கு இந்த தேசத்தில் என்ன மாதிரியான உரிமைகள் இருக்கிறதோ அதே உரிமை தான் மற்றவர்களுக்கும் இருக்க வேண்டும் இந்துவை தாழ்த்தி மற்றவர்களை உயர்த்தும் எந்த கருத்துக்களுக்கும் அரசாங்கமோ அரசு தலைவர்களோ இடம் தரக்கூடாது

ஆனால் நமது தலைவிதி வேறுவிதமாக இருக்கிறது கிறிஸ்மஸ் அன்று கிறிஸ்தவ பாதிரிகளை இல்லத்திற்கு அழைத்து கேக் வெட்டி கிறிஸ்மஸ் கொண்டாடுவதும் ரம்ஜான் அன்று நோம்பு கஞ்சி இஸ்லாமியர்களோடு அருந்துவதும் நமது தலைவர்களின் தலையாய கடமையாக இருக்கிறது உண்மையில் இவர்களிடம் மாதசார்பற்ற தன்மை அனைத்து மதத்தையும் சமமாக பார்க்கும் தன்மை இருக்குமேயானால் இந்து பண்டிகைகளையும் பாரபட்சம் இல்லாமல் கொண்டாடுவார்கள் அல்லது எந்த மத பண்டிகைகளையும் கொண்டாடாமல் சமமாக இருப்பார்கள் இவர்கள் அனைவருமே ஓட்டுக்காக ஓடு ஏந்துபவர்கள் என்பதனால் தான் ஒரு மதத்தை புறக்கணித்து மற்ற மதத்தை அரவணைத்து கொள்கிறார்கள்


கற்பனையாக ஒரு சம்பவத்தை நினைத்து பார்ப்போம் நமது சட்ட சபையிலோ பாராளுமன்றத்திலோ ஒரு உறுப்பினர் எழுந்து நின்று நான் இந்து இந்து என்பதனால் பெருமைகொள்கிறேன் இந்து மதத்திற்காக இந்து மக்களுக்காக உயிரையும் கொடுப்பேன் என்று பேசுகிறார் என்பதாக வைத்து கொள்வோம் இதை கேட்கும் மற்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என்ன செய்வார்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட உறுப்பினரை வார்த்தைகளால் வறுத்து எடுப்பார்கள் நாற்காலி மேஜைகளை அவர்மீது தூக்கி எறிவார்கள் எல்லோரையும் சட்டப்படி சமமாக நடத்த வேண்டிய சபாநாயகர் கூட கண்டித்து அவையிலிருந்து வெளியேற்றுவார் இது தான் இந்தியாவின் இன்றைய எதார்த்த நிலை

ஆற்று மீனை கடலில் கொண்டு போட்டால் அது வாழமுடியாமல் செத்து போகும் அதே போலதான் இந்தியாவில் இந்து மதத்தை தொடர்ந்து புறக்கணித்தால் இந்த நாடு ஒரு போதும் நல்லரசாக வளரவே வளராது நாடு முன்னேற வேண்டுமென்றால் நாட்டு மக்கள் நாட்டு தலைவர்கள் ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் ஒரு நாடு நியாயமான வழியில் முன்னேற முடியும் ஒழுக்கமும் பண்பாடும் ஒரு மனிதனுக்கு வரவேண்டுமென்றால் அவன் நிச்சயமாக எதாவது ஒரு மதத்தை சார்ந்தவனாக இருக்க வேண்டும் நமது அப்பாகாலத்தில் இருந்த சமூக அமைதி இப்போது கெட்டுபோனதற்கு மிக முக்கிய காரணம் மத நம்பிக்கை மக்களிடம் குறைந்து போனதேயாகும் இந்நிலை மாற நமது தலைவர்கள் போலி வேஷத்தை களைந்து விட்டு உண்மையை ஒத்துகொள்ள முன்வர வேண்டும்

சமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் கிங்ஜேம்ஸ் பைபிளின் நானுராவது ஆண்டுவிழாவில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் நான் ஒரு கிறிஸ்தவன் அதில் நான் பெருமையடைகிறேன் இங்கிலாந்து ஒரு உண்மையான கிறிஸ்தவ தேசம் என்று உறுதிபட பேசி இருக்கிறார் இன்று நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு திரிகின்ற பல முற்போக்கு வாதிகளின் கனவு பூமியான வெள்ளைக்கார பூமிதான் இங்கிலாந்து வெள்ளைக்காரன் மட்டுமே புத்திசாலி விஞ்ஞானி என்று நம்மில் பலரும் நம்பி கொண்டிருக்கிறார்கள் அப்படிப்பட்ட வெள்ளைக்கார தேசமே அதன் தலைவரே தான் ஒரு மதத்தை சார்ந்தவன் தனது நாடும் மதம் சார்ந்த நாடு தான் என்று தைரியமாக ஆண்மையோடு சொல்லி இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்

இங்கிலாந்தின் ஆத்மா எப்படி கிறிஸ்தவமோ அரபு நாடுகளின் ஆத்மா எப்படி இஸ்லாமோ அப்படியே இந்தியாவின் ஆத்மா இந்து மதமாகும் இதை இந்தியா என்று உணர்ந்து உலகிற்கு ஓங்கி உரைத்து ஒத்துக்கொள்கிறதோ அன்று தான் இந்த நாடு முன்னேற்ற பாதையில் முதல் படி எடுத்து வைக்கும்.

Contact Form

Name

Email *

Message *