Store
  Store
  Store
  Store
  Store
  Store

திருநீறு செய்ய எளிய வழி


  • யா எனக்கு வெகுகாலமாக சிவபெருமான் மீது மிக தீவிரமான ஈடுபாடு உண்டு கூடியமானவரை பஞ்சாசர மந்திரமும் சிவ பூஜையும் தவறாமல் செய்துவருகிறேன் சைவ மதத்தில் விபூதி என்ற திருநீற்றின் மகிமை வெகுவாக பேசப்படுகிறது இன்றைய சூழலில் கடைகளில் விற்கப்படும் திருநீறு சாஸ்திர முறைப்படி செய்யபடுவது அல்ல என்பது எனக்கு தெரியும் என்னால் முழுமையான சாஸ்திரப்படி திருநீரை உருவாக்க இயலாது ஆனாலும் ஓரளவு எளிமையாக திருநீரை நானே தயாரித்து பயன்படுத்த விரும்புகிறேன் எனக்கு ஏற்றவாறு அதை செய்யும் முறையை உங்களால் கூற முடியுமா? அப்படி நீங்கள் கூறினால் அது என்னை போன்ற பலருக்கும் உதவியாக இருக்கும்

ஆறுமுகம்,கடையநல்லூர்



   டை சார்ந்த மன்னரும் பிடிசாம்பல் ஆவார் என்பது ஆன்றோர் வாக்கு செல்வம் செல்வாக்கு பதவி என்று சுகபோகத்தோடு வாழ்ந்தாலும் முடிவில் ஒவ்வொரு மனிதனும் சாம்பலாக வேண்டும் அல்லது மண்ணாக வேண்டும் இந்த தத்துவத்தை விளக்க வந்தது தான் திருநீறும் திருமண்ணும்

நீரில்லாத நெற்றிபாழ் என்பதும் ஆன்றோர் வாக்கு காலையில் எழுந்து நீராடி இறைவனை வணங்கி நெற்றி நிறைய நீறு பூசிகொள்பவனே நிறைமனிதன் என்பது இதன் கருத்து நெற்றியில் பூசப்படும் நீறு சிவசின்னம் மட்டுமல்ல அது மனிதனை மாற்று மனிதர்களின் எதிர்மறை சிந்தனையிலிருந்து காக்கும் கவசமாகவும் மருத்துவ பொருளாகவும் இருக்கிறது

முறைப்படி செய்த திருநீறு சகல வியாதிகளையும் குணமாக்கும் என்பது ஐதீகம் அதனால் தான் மந்திரமாவது நீறு என்று சமய அடியார்கள் போற்றி பாடினார்கள் அப்படிப்பட்ட சகல செளபாக்கியம் நிறைந்த திருநீறும் நவீனகாலத்தின் தனது இயற்கை தன்மையை துறந்து செயற்கையான முறையில் மாறிவிட்டது இது காலத்தின் கொடுமையல்ல மனித ஆசையின் விவரீத விளைவாகும்

நீங்கள் நிஜமான திருநீரை அணியநினைப்பது பாராட்டுகுறியதாகும் சமய சந்தர்ப்பம் அமையுமானால் வேறொரு பதிவில் சாஸ்திரப்படி திருநீறு செய்யும் முறையை விரிவாகவும் விளக்கமாகவும் சொல்கிறேன் இப்போது மிக எளிமையான முறையில் ஓரளவு நல்ல விபூதியை எப்படி தயாரிப்பது என்பதை எனக்கு தெரிந்த வரையில் சொல்கிறேன்

கன்று ஈனாத தரமான பசும்சானத்தை எடுத்து கொள்ளுங்கள் அதை அறுகம்புல்லோடு கலந்து சிறிய சிறிய உருண்டைகளாக்கி வெயிலில் சில நாட்கள் நன்றாக உலர விடுங்கள் சாணம் நன்றாக காய்ந்த பிறகு உலர்ந்த அரசமர குச்சி எடுத்து நெய் விட்டு நெருப்பு மூட்டுங்கள் அந்த நெருப்பில்சான உருண்டைகளை பஸ்பமாகும் படி எரியவிடுங்கள் எரிந்து தணிந்த பிறகு கிடைக்கும் சாம்பலை வெள்ளை கதர் துணியில் போட்டு சலித்து பத்திரபடுத்தி கொள்ளுங்கள்

அப்படி பத்திரபடுத்தபட்ட பஸ்பத்தை சிவபெருமான் திருவுருவ படத்திற்கோ லிங்க திருமேனிக்கோ நமச்சிவாய மந்திரம் சொல்லி அர்சனை செய்யுங்கள் இப்போது நீங்கள் விரும்பிய சக்தி மிக்க புனிதமான திருநீறு தயாராகி விட்டது இதை பக்தி பூர்வமாக தினசரி அணிந்து வாருங்கள் பிட்டுக்கு மண்சுமந்த பெருமான் உங்கள் பக்திக்கு உருகி உங்களையும் சுமப்பான்.


Contact Form

Name

Email *

Message *