( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தபால் தீட்சை கொடுக்கபடுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நான் காதலிக்கலாமா...?


  • யா நான் ஒருவரை மனதார காதலிக்கிறேன் அவரோடு எனக்கு திருமணமாக வாய்ப்பு இருக்கிறதா?

மைதிலி,பெங்களூர்


    ன்புள்ள மைதிலி உன் ஜாதகத்தை தெளிவாக பார்த்தேன் பதினெட்டு வயது கூட பூர்த்தியாகாத உனக்கு ஒருவன் நல்லவனா கெட்டவனா என்று முடிவு செய்வது மிகவும் சிரமம் அவசரத்தில் ஆசைப்பட்டு விட்டு நிதானமாக கஷ்டப்படுவது புத்திசாலிக்கு அழகல்ல நீ புத்திசாலி பெண் உன் வாழ்வில் சாதிக்க வேண்டிய எதிர்கொள்ள வேண்டிய விசயங்கள் இன்னும் எத்தனையோ இருக்கிறது இப்போது தான் நீ முட்டைக்குள் இருந்து வெளிவந்த கோழி குஞ்சி போன்றவள் இப்போது உனக்கு ஏற்பட்டு இருப்பது காதலல்ல ஒரு விதமான ஈர்ப்பு இதில் ஒரு மனிதனிடமுள்ள சாதக அம்சங்கள் தெரியுமே தவிர பாதக அம்சங்கள் கண்ணில் படாது

இந்த வயதில் படிப்பின் மீதும் அறிவு வளர்ச்சியின் மீதும் ஆர்வம் வரவேண்டுமே தவிர இத்தகைய காதல் போன்ற விவகாரங்களில் ஆர்வம் வரக்கூடாது ஆனாலும் உனக்கு வந்துவிட்டது அதை மாற்றுவது கடினமாக தோன்றும் மாற்ற சொல்பவர்களை எதிரியாகவும் பார்க்க்க தோன்றும் ஆனால் அப்படி சொல்பவர்கள் யாரும் உனக்கு எதிரானவர்கள் அல்ல மாறாக உனது நலனில் அக்கறை கொண்டவர்களே ஆவார்கள்

உன் ஜாதகத்தில் புதனும் சுக்கிரனும் நல்ல நிலையில் இல்லை மேலும் நீ சுக்கிர ஆதிக்கத்தோடு பிறந்திருக்கிறாய் இதனால் உனது நற்பெயருக்கும் ஒழுக்கத்திற்கும் களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே நீ இந்த மாதிரியான விசயங்களில் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் காதல் கல்யாணம் என்பதெல்லாம் இப்போது உனது சிந்தனைக்கே வரக்கூடாது படிப்பில் கவனம் செலுத்து சரஸ்வதி தேவியை துதிக்கும் சகலகலாவல்லி மாலையை தினந்தோறும் படித்து வா புத்தியில் தெளிவும் நடத்தியில் விழிப்புணர்வும் ஏற்படும் வருங்காலத்தில் வரப்போகும் ஒளிமயமான வாழ்வுக்காக தற்போது படி அதுவே உன்னை உயர்த்தும் வாசல்படி.

+ comments + 6 comments

Anonymous
05:58

superb!!!!!!!!

Great fatherly and safely advice!

unmai thaayin anpu aatharavaana vaarthhaikal.............

Anonymous
17:24

Nice advice

jayan
20:15

vanakkam guruji nalla arivurai.maithili veelithukkol,nantraga padithukkol valkkai sugamaga irukkum

Anonymous
10:19

Great advice..


Next Post Next Post Home
 
Back to Top