( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )மிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

புரோகிதர் இல்லாத பூஜை !


  •    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் எனக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் கடந்துவிட்டது இன்னும் குழந்தை பாக்கியம் எனக்கு கிடைக்க வில்லை அனைத்து விதமான மருத்துவ சோதனை எங்கள் இருவருக்கும் எந்த வித பிரச்சனையும் இல்லை என்று சொல்கின்றன இருந்தாலும் குழந்தை இதுவரை இல்லை எங்கள் ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பியுள்ளேன் அதில் ஏதாவது தோஷம் இருக்கிறதா என்பதை பார்த்து சொல்லவும் நீங்கள் சொல்லுகிறபடி செய்தால் நிச்சயம் குழந்தை இருக்குமென்று நம்புகிறேன்

கெளரி,மீனம்பாக்கம்


   குழந்தை பாக்கியம் இல்லாத துயரம் குழந்தை பெறாதவர்களுக்கு தான் தெரியும் சம்மந்தப்பட்டவர்கள் அமைதியாக நமக்கு விதித்தது இது தான் என்று மனதை சமாதானபடுத்தி கொண்டு வாழ முயன்றாலும் வெளியில் உள்ளவர்கள் உறவீனர்கள் விடுவதில்லை அனுதாபம் தெரிவிக்கிறேன் பேர்வழி என்று வார்த்தைகளால் காயப்படுத்தி விடுவார்கள் உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும் போதும் திருமணம் போன்ற சுப காரியங்களில் கலந்து கொள்ளும் போதும் இத்தகைய கடுமையான வார்த்தைகள் பலவற்றை அனுபவிக்க முடியும்

ஆண்களை விட பெண்கள் தான் குழந்தை இல்லாத குறைக்காக அதிகமாக தாக்கப்படுகிறார்கள் பாதிக்கவும் படுகிறார்கள் உடல் ரீதியான குறைகள் ஆண்களுக்கு இருந்தாலும் கூட அதனால் பெண்கள் தான் சமூதாயத்தால் குற்றவாளியாக பார்க்கப்படுகிறார்கள் ஆனால் உங்கள் கதையில் இருவருக்குமே பிரச்சனைகள் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது ஆயினும் உங்கள் ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடம் ராகுவால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது அதனால் தான் குழந்தை பாக்கியம் உங்களுக்கு தடைபட்டு வருகிறது

இந்த குறை தீர தம்பதிகள் இருவரும் ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடி கடற்கரை மணலில் உங்கள் கைகளால் சிவலிங்கம் பிடித்து நந்தியாவட்டை மலரால் ஓம் நமச்சிவாய என்ற சிவமாக மந்திரத்தை 108 முறை சொல்லி அர்ச்சனை செய்து வழிபடவும் இதை செய்வதற்கு எந்த புரோகிதரையும் நியமிக்க கூடாது நீங்களே தான் மனமுருகி செய்யவேண்டும் இந்த சடங்கு முடிந்த பிறகு தீர்த்தமாடல் மற்றும் சாமி தரிசனத்தை வைத்து கொள்ளலாம்

நான் சொல்கிறப்படி நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் கண்டிப்பாக ஒரு வருடத்திற்குள் நல்ல பலன் கிடைக்கும் அழகான குழந்தையின் மழலை மொழி கேட்டு இன்புற போகிறீர்கள் இறைவனின் பரிபூரணமான அருளும் ஆசிர்வாதமும் உங்களுக்கு எப்போதும் உண்டு.


Next Post Next Post Home
 
Back to Top