Store
  Store
  Store
  Store
  Store
  Store

பிராமணர்களே உஷார் !


    திராவிட இயக்கங்கள் தோன்றி நூறு வருஷமாக போகிறதாம் அந்த நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய மாபெரும் திராவிட தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் நாட்டை கெடுத்தது பிரமணர்கள் என்றும் அப்படி கெட்டுபோகாமல் காப்பாற்றியது காப்பாற்றி வருவது திராவிட இயக்கங்கள் என்றும் மிக அருமையான வரலாற்று பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுருக்கிறார் இது அவருக்கு வழக்கமான ஒரு பொழுது போக்கு தனக்கும் தன் குடும்பத்திற்கும் எப்போதெல்லாம் ஆபத்தும் அபாயமமும் வருமோ அப்போதெல்லாம் ஆரியம் திராவிடம் என்று பேச ஆரம்பித்து விடுவார் இதை கேட்டு தமிழ் நாட்டின் மக்களின் காதுகள் எப்போதோ புளித்து விட்டது

தெருக்கூத்தில் கட்டியக்காரன் பேசுவதை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் சிரிப்பாகத்தான் எடுத்து கொள்வார்கள் நமது கலைஞர் அவர்கள் அவ்வபோது அரசியலில் பபூன் வேஷம் போடுவார் அப்போது தமாசாக இப்படி எதையாவது சொல்வார் இந்த வழக்கம் தமிழ்நாடு பிராமண சங்கத்திற்கு தெரியவில்லை போலும் அவர் என்னவோ பிராமணர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடுகிறார் கலவரத்தை ஏற்படுத்த போகிறார் என்று கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்


பிராமணர்களை பற்றி கலைஞர் சொல்வதை பெரிது படுத்துவதே தவறு என்பது எனது கருத்து நமது தமிழ் நாட்டில் சில நடிகர்கள் திரைப்படம் எடுப்பார்கள் அதற்கு விளம்பரம் வர பலவித ஏற்பாடுகளில் ஈடுபட்டு கடைசியில் யாரையாவது விட்டு வழக்கு போட செய்வார்கள் காரணம் இது இன்னார் கதையாமே யாரோ வழக்கு போட்டு இருக்கிறாராமே என்று மக்கள் பரபரப்பாக பேசுவார்களாம் படமும் நல்ல விளம்பரத்தை பெறுமாம் கலைஞர் கூறியதற்கு கண்டனம் தெரிவிப்பது கூட இப்படி ஒரு வேடிக்கையாக போய்விட கூடும்

கலைஞர் யாரை தான் குறை சொல்லவில்லை பிறகு யாரைத்தான் புகழாமல் இருந்திருக்கிறார் காரியமாக காலில் விழுவதும் காரியம் ஆனவுடன் கழுத்தை நெரிப்பதும் அவருக்கு கைவந்த கலை இன்று அவர் கர்மவீரர் காமராஜரை வானளாவ புகழ்கிறார் கல்வி தந்தவர் நேர்மையாளர் உத்தமர் சத்திய சீலர் என்றெல்லாம் போற்றி பாராட்டுகிறார் ஆனால் அதே காமராஜர் வாழ்ந்த போது அவர் மீது கருணாநிதியை போல் புழுதி வாரி தூற்றியவர்கள் யாருமே கிடையாது

சென்னையில் ஏழை பங்காளன் லஞ்ச பணத்தில் மாளிகை கட்டியிருக்கிறார் அயல் நாட்டு வங்கிகளில் கோடி கோடியான பணத்தை மறைத்து வைத்திருக்கிறார் தேசிய தலைவராக இருந்தவர் ஜில்லா போர்டு தலைவராகி வட்டார தலைவராக மாறி விட்டார் என்று இதற்கு மேலும் அசிங்கமான வார்த்தைகளால் கர்ம வீரரை வசைமாரி பொழிந்த கருணாநிதிதான் இன்று போற்றி புகழ்கிறார்

மூதறிஞர் ராஜாஜியை பார்ப்பன பூண்டு தர்ப்பை பிடித்த குள்ளநரி என்று எவ்வளவோ தரம்கெட்ட வார்த்தைகளால் விமர்சனம் செய்த கருணாநிதிதான் ராஜாஜியை அரசியல் மேதை என்றும் சாணக்கியன் என்றும் பாராட்டி கொண்டு திரிகிறார் இந்திராகாந்தியை சர்வதிகாரி சதிகாரி என்று பேசியவர்தான் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சியை தருக என்று பாமாலை சூடினார் அவ்வளவு தூரம் போவானேன் காலம் முழுவதும் எதிரியாகவே பாவித்த எம்ஜியாரை அவர் மறைவுக்கு பிறகு நண்பர் என்றார் உறவு என்றார் அவரின் அடுத்த வாரிசு நான் தான் என்று கூட சொல்லி கொண்டார் இப்படி பட்ட கருணாநிதியின் பேச்சை பொருட்டாக கருதுவது புத்திசாலி தனமல்ல

கருணாநிதி மட்டுமல்ல அவரை போன்ற திராவிட பரிவார கூட்டத்தாரும் பிராமண ஆதிக்கத்தை பற்றி வாய்கிழிய பேசுவார்கள் ஆனால் தங்களது நிஜ வாழ்க்கையில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட அப்பாவி மக்களை பக்கத்தில் கூட வரவிட மாட்டார்கள் எத்தனையோ திராவிட தலைவர்களின் வீடுகளிலும் தோட்டங்களிலும் வேலை செய்யும் கூலி ஆள்களை மாட்டு தொழுவத்தில் அமரவைத்து கஞ்சி உட்ருவதை என் கண்களால் பார்திருக்கிறேன் இதே தவறை ஒரு பிராமணன் செய்தால் அது தீண்டாமை என்று கத்துவார்கள் இவர்கள் செய்தால் இது எங்கள் குடும்பத்து மரபு என்று மழுப்புவார்கள்

கலைஞர் சொன்னவுடன் தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் பிராமணர்களுக்கு எதிராக திரண்டு விடுவார்கள் என்று நம்புவது போல பிராமண சங்கத்தார் பேசி வருகிறார்கள் இவர்களை அப்பாவி என்று சொல்வதா அல்லது உலகம் தெரியாதவர்கள் என்று சொல்வதா என்பது புரியவில்லை பெரியார் வாழ்ந்த போதே வெறும் மேடை பேச்சி வீரர்களாக இருந்த இவர்களை செயல் வீரர்களாக மக்கள் பார்த்தது இல்லை வாயால் காட்டுகின்ற பூச்சாண்டிக்கு மாலைபோட்டு விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமில்லை

கலைஞர் கொண்டாடுவது திராவிட இயக்கத்தின் நூற்றாடு விழா அல்ல ஓரங்கட்டப்பட்ட அரசியல்வாதிகளின் முதியோர் விழா நகைச்சுவையாக அவர்கள் பேசுவதை ரசிப்போம் அவர்களுக்கு பேச உரிமை இல்லையா என்ன? பேசட்டும் வாய்வலிக்க பேசட்டும் யார் கேட்க போகிறார்கள்!.


Contact Form

Name

Email *

Message *