Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஈழ மக்களுக்கு அனுதாபம் வேண்டாம்...?


கருணைமிகுந்த சுவாமிஜி

     ல நாட்களாக என்னை தூங்க விடாமல் செய்கின்ற ஒரு விசயத்தை பற்றி தாங்கள் கூறினால் மிகுந்த நன்றியுடையவனாக இருப்பேன்.

அதாவது சமீபத்தில் ஒரு நாட்டில் பல  லட்சக்கணக்கான மக்கள் கொடுரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள்.  மரணம் பெரிதல்ல ஆனால் மரணத்திற்கு முன்பு அவர்கள அனுபவித்த அனுபவங்களை எவரேனும் பத்துநிமிடம் பார்த்தால் ஒன்று அவர் மனநோயாளியாக மாறிவிடுவார் அல்லது அவ்வாறு பார்ப்பவர் மிகுந்த அழுத்த நெஞ்சக்காரர்களாக இருப்பார்கள்.  ஆனால் நான் அதைப் பார்த்த முதல் திடீரென்று தனிமையில் அழுகிறேன்.  நான் எந்த சக்தியும் இல்லாதவன் என்ற எண்ணத்தோடு வாழும் தகுதியற்ற மனிதன் என்று எண்ணிக்கொண்டே இருக்கிறேன்.  இவ்வளவுக்கும் எனக்கும் அவ்வாறு இறந்தவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.  மேலும் இதனை நேரிடையாகச் கொடுரமனத்தோடு செய்த உள்நாட்டுத் தலைவர்களின் சந்ததிகளும், அந்த நாட்டவரும் பெரும் ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதித்து சந்தோசமாகத் தான் இருக்கின்றனர்.  இது என்ன முரண்பாடு என்று, இறை சக்தி என்று ஒன்று இருக்கிறாதா, இல்லையா.  தயது செய்து ஏன் இந்த முரண்பாடு என்று விளக்கினால் ஓரளவு எனது மனம் சமாதானம் அடையும் என்று நம்புகிறேன்.

Arumugam Govindan

வாடிய பயிரை கண்டபோது வாடினேன் என்று வள்ளலார் சொல்வார் ஓரறிவு உயிரான சின்னஞ்சிறிய செடி தண்ணீர் இல்லாமல் வாடி வதங்குவதை கூட காணசகிக்காத கருணை மனம் கொண்ட முன்னோர்களின் வாரிசுகள் நாம் சில நேரங்களில் நமக்குள் இருக்கும் அற்ப விஷயங்களுக்காக சண்டை போடுவோம் ஒருவர்க்கொருவர் முட்டி மோதியும் கொள்வோம் ஆனால் எந்த நேரத்திலும் எவருடைய சரிரத்திற்கோ உயிர்க்கோ வலி ஏற்படுவதை நம்மால் தாங்கி கொள்ள இயலாது

சில மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு பிறரை இம்சை செய்து பார்ப்பதில் ஆனந்தம் வருகிறது மற்றவர்கள் வடிக்கும் கண்ணீரும் ரத்தமும் இவர்களுக்கு பன்னீராக தெரிகிறது வேதனையில் மற்றவர்கள் முனுமுனுப்பது கூட சங்கீதமாக இவர்கள் காதுகளில் விழுகிறது இவர்களை மிருகங்கள் என்று அழைத்தால் கூட அவைகளுக்கு கோபம் வரும் நாங்கள் பசிக்காகத்தான் வேட்டை ஆடுகிரோமே தவிர ருசிக்காக மற்ற ஜீவன்களை அடிமைபடுத்த வேண்டும் என்பதற்காக வேட்டை ஆடுவதில்லை அப்படிப்பட்ட எங்களை போய் இறக்கமற்ற மனித கும்பலோடு சேர்க்கிறீர்களே என்று கண்டன குரல் எழுப்பும்

ஆக மிருகமாக கூட வாழ தகுதியில்லாத அந்த மனித ஜென்மங்கள் ஆதிக்க வெறியால் ஊராரின் சதையை கிழித்து வெற்றி பெற்று விட்டதாக ஊளையிட்டு திரிகிறார்கள் இப்படிப்பட்ட மனிதர்களை இன்று மட்டுமல்ல வரலாறு தொன்று தொட்டே கண்டு வருகிறது ஆனால் அந்த கும்பல் அடையும் வெற்றி நிரந்தரமானது அல்ல தற்காலிகமானது ஒரு நீர்க்குமுழி போல நிலையற்று போய்விடும் என்பதையும் வரலாறு நமக்கு தெளிவாக காட்டுகிறது

தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்று பாரதி சொல்வான் ராவணன் பெற்ற வெற்றி துரியோதனன் அடைந்த வெற்றி இரணியன் அனுபவித்த வெற்றி நிரந்தரமாக நிலைக்கவில்லை இவர்களின் முடிவுகள் மிக கொடூரமாக இருந்ததோடு அல்லாமல் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு தக்க பாடமாகவும் இன்றுவரை இருந்து வருகிறது ஆக உப்பை நீங்கள் தின்றாலும் நான் தின்றாலும் என்றாவது ஒரு நாள் தண்ணீர் குடித்துதான் ஆகவேண்டும் ஆதிக்க வெறியால் கொக்கரிக்கும் கும்பல் தடையம் இல்லாமல் அழியபோவதை காலம் நமக்கு காட்டத்தான் போகிறது

இந்த உலகில் விடுதலை வேள்வி நடத்துகின்ற எந்த இனமும் உயிர் தியாகம் செய்யாமல் இருந்ததில்லை நீங்கள் குறிப்பிடும் அல்லது மனதில் நினைத்து வெளியில் சொல்லாமல் தவிர்த்த இலங்கை தமிழரின் உயிர் தியாகம் என்பதும் விடுதலைக்கான வேள்வியின் ஆகுதியே ஆகும் லட்சகணக்கான ஜனங்கள் அராஜக அரசாங்கத்தால் கொல்ல பட்டிருக்கலாம் அந்த படுகொலைகளை தடுக்கவேண்டிய வலிமையுள்ள அரசாங்கம் தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கலாம்

இந்த படுகொலைகளை பார்ப்பவர்களின் மனது துக்கத்தால் பாரமாகவேண்டிய அவசியமில்லை கோபம் வரவேண்டும் இன ஒதுக்கலுக்காக கொலைபுரியும் கொடூர மனிதர்களின் மீது ஆத்திரம் வரவேண்டும் இந்த கொடுமைகளை கண்டும்காணமல் இருந்த சதிகாரர்களின் மீது ஆத்திரம் வரவேண்டும் நமக்குள் பொங்கி வழியும் ஆக்ரோசம் பாதிக்கப்பட்ட ஜனங்களுக்கு பக்கபலமாக உதவி ஒத்தாசை செய்யும் துணிச்சலை தரவேண்டும் அப்படி வந்தால் தான் நமது மனம் நிச்சையமாக கருனையுடையதாக இருக்கிறது என்று அர்த்தம் இல்லாமல் இறக்கம் மட்டும் படுவேன் என்று சொன்னால் அது மனிதாபிமானம் அல்ல

இனப்படுகொலையை இறக்கமே இல்லாமல் நிகழ்த்திய இலங்கை அரசாங்கத்தின் மார்ப்கை கிழிக்க முதல் ஈட்டி வந்திருக்கிறது அந்த ஈட்டியை வீசி இருப்பது உலக யுத்தங்களுக்கு கிரியா ஊக்கியாக இருக்கும் அமெரிக்கா சர்வதேச கலவரத்தின் காவலனான அமெரிக்காவே இத்தகை இனபடுகொலையை கண்டிக்க எழுந்து வரும்போது ஊரல்லாம் சக்தியும் நேர்மை சகவாழ்வு என்று பேசும் காந்தி தேசம் இலங்கையை கண்டிக்க ஏனோ தயங்குகிறது

நீங்கள் உண்மையில் இலங்கை மக்களுக்காக அவர்களின் கொடுமையான வாழ்வுக்காக கண்ணீர் வடிப்பவராக இருந்தால் இந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையை அது உணர்ந்து கொள்ள எதாவது உரக்க செய்யுங்கள் காரணாம் ஈழந்மக்களுக்கு உங்களது அனுதாபம் தேவையில்லை அந்த அனுதாபம் அவர்களின் விடுதலை பசியை போக்காது உங்கள் ஆதரவு தேவை அறிவு தேவை உழைப்பு தேவை இவை எல்லாவற்றிகும் மேலாக செவிடான இந்திய அரசாங்கத்தின் காதுகளை கேட்க்க செய்யும் ஒருங்கிணைந்த போராட்டம் தேவை அத்தகைய ஆக்க பூர்வமான காரியங்களில் ஈடுபடுங்கள் உங்கள் துயரம் போகும் நிம்மதியான உறக்கம் வரும்.


Contact Form

Name

Email *

Message *