( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )15 ஞாயிறு செப்டம்பர் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

மாயவலையின் மற்றொரு வடிவம் !


       னது நண்பர் ஒருவருக்கு ஏகப்பட்ட சந்தோசம் பத்து நாட்களாக இருட்டாக இருந்த வானம் திடீரென வெளிச்சமானால் பயிர் பச்சைகள் எப்படி சந்தோசப்படுமோ அப்படி இருந்தது அவருடைய மகிழ்ச்சி ஒருவேளை அவர் பெண்ணுக்கு நல்ல வரன் கிடைத்திருக்குமோ அல்லது மகனுக்கு சிறந்த கல்லூரியில் இடம் கிடைத்திருக்குமோ என்று எனக்கு தோன்றியது அதனால் அவரிடம் உங்கள் சந்தோசத்திற்கு காரணம் என்ன குடும்பத்தில் எதாவது நல்ல விஷேசங்கள் உண்டோ என்று கேட்டேன்

அதற்கு அவர் குடும்பத்தில் நல்லது நடந்தால் தான் சந்தோசப்பட வேண்டுமா? நாடும் ஒரு குடும்பம் போல தானே நாட்டில் நல்லது நடந்தால் சந்தோசப்பட வேண்டியது ஒரு நல்ல குடிமகனுக்கு அழகு தானே என்றார் அப்படி என்ன தீடிர் என்று நமது நாட்டில் நல்லது நடந்துவிட்டது ஒரு நாளைக்கு பாதினாறு மணி நேரம் இல்லாத மின்சாரம் நாள் முழுவதும் தங்கு தடையில்லாமல் கிடைக்க ஆரம்பித்து விட்டதா? கார்பரேசன் குழாயில் நல்ல தண்ணீர் தினசரி வர துவங்கி விட்டதா? என்று எனக்கு சந்தேகம் பிறக்க ஆரம்பித்து விட்டது நீங்கள் இவ்வளவு ஆனந்த கூத்தாடும் அளவிற்கு அப்படி என்ன நல்லது நாட்டில் நடந்து விட்டது என்று அவரிடம் கேட்டேன்

வேறொன்றும் பெரிய விஷயம் இல்லை உத்திரபிரேதேச மாநிலத்தில் புதிய முதல்வராக பதவி ஏற்றிருக்கும் முலயாம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் நல்ல தனமாக பேசுகிறார் நல்லதனமாக செயல்படவும் துவங்கி இருக்கிறார் அவர் நடவடிக்கையை பார்த்தால் சென்ற தலைமுறை அரசியல்வாதிகளை போல இந்த தலைமுறை அரசியல்வாதிகள் இருக்க மாட்டார்கள் ஓரளவு நாகரீகமான முறையில் நடந்து கொள்வார்கள் என்று தோன்றுகிறது என்று சொன்னார்

அத்தோடும் அவர் நிற்கவில்லை மாயாவதி ஜாதியை அடிப்படையாய் வைத்து அரசியல் நடத்துகிறவர் அவரை இதுவரை நேருக்கு நேராக எதிர்த்து வந்த முலயாம் சிங் யாதவும் ஒன்றும் குறைந்தவர் அல்ல மாயாவதிக்கு இணையாக ஜாதியையும் மதத்தையும் தூண்டி விட்டு குளிர் காய்கிறவர் ஆனால் அவர் மகன் முற்றிலும் மாறுபட்டு நல்லவர் போல் தோற்றமளிக்கிறார் இப்படியே இளைய அரசியல்வாதிகள் பலர் உருவாகி விட்டால் நம் நாடு மிக சிறந்த நாடாக உலக அரங்கில் உயர்ந்து விடும் என்ற நம்பிக்கையில் தான் சந்தோசப்படுகிறேன் என்றும் சொன்னார்

இவரை நான் அப்பாவி என்று சொல்லி இறக்கபடுவதா? அடபாவி என்று சொல்லி கோபப்படுவதா? என்று புரியவில்லை அரசியல் வாதிகளின் போலி நாடகங்களை இன்னும் நாட்டு மக்கள் நம்புகிறார்களே நல்லது கெட்டதை பகுத்தறிய தவறி இருக்கிறார்களே என்று நினைக்கும் போது வேதனை படுவதை தவிர வேறு வழியில்லை ஒரு காலத்தில் கலைஞர் கருணாநிதி அவர்கள் முரசொலியில் தனது உடன் பிறப்புகளுக்கு எழுதும் கடிதங்களை படித்தால் நமக்கே சிலிர்ப்பு ஏற்படும் வாரிசு அரசியலால் ஏற்படும் சீர்கேடுகளை மிக நீளமாக பட்டியல் போட்டு விலாவாரியாக விமர்சனம் செய்வார் நேருவின் மகள் நேருவின் பேரபிள்ளைகள் இந்தியாவை குடும்ப சொத்தாக பாவித்து அரசாள்வதை மிக கோபமாக சாடி இருப்பார்

ஆனால் அதே கலைஞர் இன்று தனது மகன்கள் மகள் பேரபிள்ளை அனைவரும் அரசியலில் வந்து கும்மாளம் அடிப்பதை பார்த்து மகிழ்ச்சி கடலில் மூழ்கி இருந்தார் குடும்ப அரசியலை குறைசொல்லும் மற்ற அரசியல் வாதிகளுக்கு பருக் அப்துல்லாவின் குடும்பம் காஷ்மீரை ஆளலாம் அது ஜனநாயகம் இந்திரா காந்தியின் வாரிசுகள் இந்தியாவை ஆளலாம் அதுவும் ஜனநாயகம் எனது பிள்ளைகள் மட்டும் அரசியலுக்கு வந்தால் அது சர்வாதிகாரமா? அது குடும்ப அரசியலா? இது என்ன நியாயம் இதில் எங்கே நீதி என்று கொதித்து போகிறார் இந்த இரட்டை வேடத்தை அப்பாவியான திமுக தொண்டர்களில் பலர் இன்னும் புரிந்து கொள்ளவே இல்லை

இந்த நாட்டில் அரசியல் வாதிகளின் வேடங்களை மட்டும் தான் மக்கள் புரிந்து கொள்ளவில்லை மற்றவர்களின் வேடங்களை புரிந்து கொண்டுவிட்டார்கள் என்று சொல்லிவிட முடியாது நமது நாட்டின் பொருளாதார நிலையை புள்ளிவிபரங்களில் மூலம் மக்களுக்கு தெரியபடுத்தும் திட்டகமிசன் கூட இருபது ரூபாய்க்கு மேல் தினசரி வருவாய் உள்ள அனைவரும் வறுமை கோட்டை தாண்டிவிட்டார்கள் என்று ஒரு போலி நாடகத்தை அரங்கேற்றம் செய்கிறார்கள் அதனுள் மறைந்திருக்கும் மகாசூழ்ச்சியை புரிந்து கொள்ள யாரும் தயாராக இல்லை

உலகம் முழுவதையும் சுரண்டி பிழைக்க முதாலாளி வர்க்கம் தாராளமயம் என்ற பதிய மாய மோகினியை கண்டுபிடித்து உலவவிட்டு இருக்கிறார்கள் அந்த மோகினியின் நடன நிகழ்ச்சி நமது இந்தியாவில் இப்போது அதிகரிக்க துவங்கிவிட்டது சில கோடிகளை வைத்து தொழில் நடத்தும் சுதேசி முதலாளிகள் அனைவரையும் மூட்டை கட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆயிர கணக்கான கோடிகளை சந்தையில் முதலிடு செய்து கொள்ளை லாபத்தை அறுவடை செய்ய தாராளமய பிரம்மாக்கள் தயாராகி விட்டார்கள் அந்த முதலாளிகள் பவனிவரும் முத்து பல்லக்கை சுமந்து செல்ல சில அடிமைகள் தேவை அத்தகைய அடிமைகளை மூளைசலவை செய்து உருவாக்கிட இந்திய திட்டகமிசன் முனைப்புடன் செயல்பட்டதே இந்த வறுமை கோட்டு கணக்கு

மாண்டேசிங் அனுவாலியா போன்ற மேதைகள் சொல்லுகிறதை சக்திய வாக்காக ஏற்றுக்கொள்ளும் இந்திய அறிவு ஜீவிகள் என்ற அடிமை கூட்டம் இந்தியாவில் வறுமைகோட்டுக்கு கீழே உள்ள மக்கள் தொகை வெகுவாக குறைந்து விட்டது இந்தியா தன்னிறைவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது கூடிய விரைவில் வல்லரசாகி விடும் இப்படி நம் நாட்டை வல்லரசாக மாற்றும் ஒரே மந்திரம் தாராளமயம் என்ற சித்தாந்தம் மட்டுமே என்று நம்பி நாடு முழுவதும் உள்ள வெகுஜன ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்யும் இதனால் தற்போதைய ஆட்சியாளர்களின் கரம் வலுப்படும் என்பதே திட்டகமிசனின் ஆசை வெறி அதன் வெளிப்பாடு தான் இந்த கணக்கு பிணக்குகள் ஆனால் இது எத்தனை பேருக்கு புரியபோகிறது

திட்டகமிசன் மூலம் எப்படி ஒரு மாயவலை மிக சாமார்த்தியமாக நாடு முழுவதும் விரிக்கப்படுகிறதோ அதே போன்ற ஒரு சதி நாடகம் தான் இளைய தலைமுறை அரசியல் வாதிகள் அனைவருமே யோக்கியமானவர்கள் திறமையானவர்கள் நாட்டை நல்ல முறையில் வழிநடத்த கூடியவர்கள் என்பது அதாவது எப்பாடு பட்டாவது ராகுல் காந்தியை இந்தியாவின் தலைமை அமைச்சராக ஆக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் கூட்டத்தார் இத்தகைய சதி வேலையை திட்டமிட்டே செய்து வருகிறார்கள்

கனடாவில் இருந்து என்னிடம் அடிக்கடி தொலைபேசியில் பேசும் பிரபாகரன் என்ற இலங்கை தமிழர் சில நாட்களுக்கு முன்பு இந்த உலகிலேயே உங்கள் நாடு தான் மிக விசித்திரமானது இந்தியாவோடு ஒப்பிடும் போது இலங்கை ஒரு சுண்டக்காய் அளவு தேறாது ஆனால் அந்த சின்னஞ்சிறிய நாட்டில் கூட தன் நாட்டை ஆள ஒரு ஸ்ரீலங்கன் தான் வரவேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருக்கிறது அமேரிக்கா கனடா ரஷ்யா போன்ற நாடுகளில் அந்நிய நாட்டை சேர்ந்த யாரும் அதிகாரத்தின் உச்சத்தை தொட்டுவிட முடியாது ஆனால் உங்கள் இந்தியாவில் பத்து வருடமாக அந்நிய நாட்டு பெண்மணி ஒருவருக்கு மறைமுகமாக சகல அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறீர்கள் இது விந்தையிலும் விந்தை என்று சொன்னார்

அவர் சொல்வதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை இந்தியாவில் சோனியா காந்தியை விட திறமைசாலிகள் யாருமே இல்லையா? ஏன் காங்கிரஸ் கட்சியில் அவரை விட தகுதியான யாரும் தலைமை பொறுப்புக்கு இல்லையா? என்று மிக சாதாரணமான்வன் கூட சிந்திக்கலாம் ஆனால் இங்கு அப்படி சிந்திக்க யாருமில்லை சோனியா காந்தி ராஜிவ் காந்தியின் மனைவியாக மட்டுமே பார்க்கபடுகிறாரே தவிர அவர் இத்தாலி நாட்டவர் அவருக்கும் இந்தியாவுக்கும் வேறு சம்மந்தம் இல்லை என்று யாரும் சிந்திக்க மறுக்கிறார்கள் அப்படி சிந்திப்பது கூட பாவம் என்று பிரச்சாரம் நடந்து வருகிறது

சோனியா காந்தியின் தகுதியை விட ராகுல் காந்தியின் தகுதி பலமடங்கு குறைவாகவே இருக்கிறது அவர் தந்தை ஒரு இந்தியர் என்ற தகுதியை தவிர வேறு எந்த தகுதியும் அவருக்கு இல்லை அப்படி இருக்க அவரை பிரதமராக்கியே தீர்வது என்று முனைப்பு காட்டுவது நிச்சையமாக அந்நிய முதலிட்டாளர்கள் தான் இந்தியாவை பற்றி தெரியாத இந்திய மக்களின் வாழ்க்கை தரத்தை பற்றி புரியாத ஒருவர் பிரதமராக இருந்தால் தான் அந்நிய முதலாளிகள் சர்வ சுதந்திரமாக இந்தியாவை சுரண்டி பிழைக்கலாம் ராகுல் காந்தியின் யோக்கியதை பற்றி மிக சுலபமாக உணர்ந்து கொள்ள ஒரு சிறிய சம்பவமே இருக்கிறது அது ஒரு புகைப்படத்தின் மூலம் பட்டவர்த்தனமாக நமக்கு தெரிந்தும் அதை புரியாமல் இருக்கிறோம் 

இந்திய பிரதமராக வாஜ்பாய் அவர்கள் இருந்த போது மதுரையை சேர்ந்த சின்னபிள்ளை என்ற மூதாட்டியின் கால்களில் விழுந்து வணங்கியதை நாம் அனைவருமே அறிவோம் பெரியவர்களின் காலில் விழுவது இந்திய மரபு ஆனால் அதே பெரியவர்கள் சிறியவர்களின் கால்களில் விழுந்தால் அது அவமானம் மட்டுமல்ல கண்டிக்க வேண்டிய விஷயமும் ஆகும் உத்திர பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் வயாதான மூதாட்டி ஒருவர் ராகுல் காந்தியின் கால்களில் விழுந்து வணங்கும் கொடூர காட்சியை பலரும் பார்த்திருக்கலாம் ராகுல் பிரதமராக வந்தால் இந்தியாவில் இது தான் நடக்கும் அதாவது பலகோடி வறிய ஜனங்கள் பணக்காரர்களின் கால்களில் விழுந்து வணங்க வேண்டியது தான் இது தான் இன்றைய இளைய தலைமுறை அரசியல் வாதிகளின் நிஜ முகம் 

முலயாம் மகன் அகிலேஷ் யாதவ் திறமையானவர் என்ற பிரச்சாரமும் நல்லவர் வல்லவர் என்ற பிரச்சாரமும் நடப்பதை கண்டு சிலர் மயங்கலாம் ஆகா பரவாயில்லையே என்றும் பாராட்டலாம் ஆனால் அகிலேஷ் யாதவின் அமைச்சரவையில் உணவு துறை மற்றும் சிறைத்துறை அமைச்சராக இருக்கும் ராஜா பையா என்ற அமைச்சரின் லச்சனத்தை பார்த்தாலே உண்மை உள்ளங்கை  நெல்லி கனி போல் தெரியும் சிறை துறை அமைச்சர் ராஜா பையா மீது எட்டு கிருமினல் வழக்குகள் இருக்கிறது அதாவது சிறைச்சாலைக்குள் இருக்க வேண்டியவருக்கு போலிஸ் காரரே சலுயுட் அடிக்கும் வழக்கம் தான் இன்னும் தொடர்கிறது இதுவே இளைய தலைமுறையின் அரசியல் கோலம் அல்ல அல்ல வாரிசு அரசியலின் கோரவடிவம்.

+ comments + 2 comments

Anonymous
19:26

Very good analysis. keep it up Guruji.

Anonymous
14:41

truth Guruji India making all foes around it because this kind of hypocrites.


Next Post Next Post Home
 
Back to Top