( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )15 ஞாயிறு செப்டம்பர் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

தாலி கட்டுவது ஏன்...?


    குருஜி அவர்களுக்கு வணக்கம் நான் கனடா நாட்டில் இருக்கும் இலங்கை தமிழன் என் பெயர் செல்வரத்தினம் இளங்கோவன் எனக்கு இருபத்து இரண்டு வயது தான் ஆகிறது இந்த வயதிலேயே தமிழை பற்றியும் தமிழர்களை பற்றியும் தமிழர்களின் பண்பாட்டை பற்றியும் அறிந்து கொள்ள மிகவும் ஆசைபடுகிறேன் சொந்த நாட்டை விட்டு அந்நிய நாட்டில் வாழுகின்ற எல்லோருக்குமே அவர்கள் இனத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆசை இருப்பது இயற்கை என்பதை நீங்கள் அறிவீர்கள் அதன் தொடர்ச்சியாகவே சில கேள்விகளை உங்கள் முன்னால் வைக்கிறேன் இந்த சிறுவனின் கேள்வியை பொறுத்து தக்க பதிலை தருமாறு பணிவோடு வேண்டுகிறேன்
குருஜி அவர்களே தமிழர்களின் திருமணத்தில் வாழை மரம் கட்டுகிறார்களே அது ஏன்?

    ளங்கோவனுக்கும் இலனங்கோவனை போன்ற இளையவர் பலருக்கும் தமிழர்களின் பண்பாட்டின் மீது ஏற்பட்டிருக்கும் அக்கறை மிகவும் பாராட்டுதலுக்குரியது இப்படி பட்ட ஆர்வமிக்க கேள்விகளுக்கு ஆயிரம் வேலை இருந்தாலும் பதில் சொல்லவேண்டியது நமது கடமையாகும்

தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்

திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்

அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.

    குருஜியின் முன்னால் இன்னொரு கேள்வியையும் வைக்க விரும்புகிறேன் தமிழர் திருமண சடங்கில் தாலிகட்டும் வழக்கம் இருக்கிறது சங்ககால தமிழர்கள் இடத்தில் தாலிகட்டும் பழக்கமில்லை இடைப்பட்ட காலத்தில் ஆரியர்களின் கலப்பால் தான் தாலிகட்டும் பழக்கம் உருவானது எனவே அது தமிழர்களுக்கு தேவையில்லை தாலி என்பதே பெண்ணை அடிமை படுத்தும் ஒரு சின்னம் என்று பலர் கதைத்து வருவதை இணையதளங்கள் வழியாக அறிவேன் அது உண்மையா?

எல்லா இனத்திலும் எல்லா நாட்டிலும் சில விதிவிலக்கான மனிதர்கள் இருப்பார்கள் அவர்கள் எதை எடுத்தாலும் குதர்க்கமாக பேசுவதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள் தமிழ்நாட்டிலும் அப்படி பட்ட விசித்திர பிறவிகள் வெகுகாலமாகவே இருந்து வருகிறார்கள் அவர்கள் தங்கள் கருத்துக்கள் தான் சரியானது வரலாற்று பூர்வமானது என்று பேசியும் எழுதியும் வருவதை எல்லோரும் அறிவார்கள் ஆனால் அதிர்ஷ்டவசமாக இத்தகைய விசித்திர பிறவிகள் பேசுவதை யாரும் பெரியதாக எடுத்துகொள்வதில்லை அதுவும் குறிப்பாக இப்போது இப்படி பட்டவர்களை மன நோயாளிகள் என்றே மக்கள் பார்க்க துவங் கி விட்டார்கள்

உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை

தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் திராவிட பரிவாரங்களில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர் அதை நினைத்தால் நகைபாகத்தான் இருக்கும்

“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
      அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''  


                                    என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும் தங்கள் வாதத்திற்கு இளங்கோவின் இந்த வார்த்தைகள் இடைஞ்சலாகும் என்று கருதியே பல திராவிட வரலாற்று புலிகள் வசதியாக இதை மறைத்து விட்டே பேசுவார்கள்.

தமிழர்கள் வாழ்வில் தாலி இல்லை என்று இப்போது பேசினால் எந்த பெண்ணும் இவர்களுக்கு ஒட்டு போடமாட்டார்கள் எனவே இவர்கள் தங்களது வாதத்தை பெண்ணுரிமை பக்கம் திருப்பி தாலி பெண்ணை அடிமையாக காட்டுகிறது என்று பேசிவருகிறார்கள். ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.

உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது விஷமப்பிரச்சாரம் செய்பவர்கள் எப்போதும் செய்து கொண்டு தான் இருப்பார்கள் அவர்களின் மயக்கும் மொழிகளை அடையாளம் கண்டு உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.

நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்.


+ comments + 2 comments

20:04

தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது.

Thali for women? What symbol for Men? If both are same why only one person get to wear a symbol and not for Men. Somewhere I read "Metti" was initially designed for Men later they changed it to women? Is that true? Thank you for all your explanation. I enjoy reading your site. :-)

Anonymous
01:23

dear brother please read "அர்த்தமுள்ள இந்து மதம் book" for more details about tamil culture.

thank u
by
sivanesan


Next Post Next Post Home
 
Back to Top