( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )மிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

குளிர்ந்த காற்றில் உலாவரும் பேய்கள்...!


    யா எனக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனை மிகவும் விசித்திரமானது அதை வாய்விட்டு சொல்லவோ தெளிவாக எழுதவோ கூட என்னால் முடியவில்லை இரண்டு வருடங்களுக்கு முன்பு எல்லோரையும் போல் நன்றாகத்தான் இருந்தேன். ஒருமுறை எனது சிநேகிதன் ஒருவன் திருமணத்திற்காக அவனது கிராமத்திற்கு போயிருந்தேன் இரவு அங்கு தங்கவேண்டிய சூழல் இயற்க்கை உபாதையை கழிக்க சரியான கழிப்பிட வசதி அங்கு இல்லாததால் இருட்டில் ஒதுக்குபுறமான பகுதிக்கு சென்றேன் அப்போது என்னை மிகவும் குளிர்ச்சியான காற்று ஒன்று தழுவி போனது அது சித்திரை மாதம் பக்கத்தில் நீர்நிலைகள் எதுவும் கிடையாது காற்றில் அவ்வளவு குளிர்ச்சி வர வாய்ப்பே இல்லை

அந்த நேரமுதல் எனது உடம்பு மிகவும் கனமாகி போனது போல் உணர்ந்தேன் நடப்பதற்கு கூட சிரமமாக இருந்தது. ஆனாலும் அது எதாவது உடல் நிலை பாதிப்பால் வந்திருக்கலாம் என்று சட்டைசெய்ய வில்லை இரண்டு மாதம் வரையில் பெரியதாக பிரச்சனைகள் எதுவும் இல்லை அதன் பிறகு மூச்சி திணறல் எனக்கு அதிகரித்தது. சுவாச நோயாக இருக்கலாம் என்று மருத்துவரிடம் சிகிச்சையும் பெற்றுக்கொண்டேன் பலன் இல்லை ஒவ்வாமையால் இந்த தொல்லை வந்திருக்கும் என்று அதற்கும் மருத்துவம் செய்தேன் பயனில்லை யார் யார் என்னென்ன வைத்திய முறை சொன்னார்களோ அத்தனையும் செய்தேன் எந்த பிரயோஜனமும் ஏற்படவில்லை அம்மாவாசை கிருத்திகை போன்ற தினங்களில் மிகவும் அவதி படுவேன்

இந்த நிலையில் கடந்த ஆறுமாதத்திற்கு முன்பு ஒரு நாள் இரவு மூச்சி விட முடியாமல் மிகவும் அவதிப்பட்டேன் அப்போது என் உடம்பிற்குள் இருந்து நிழல் போல ஒன்று வெளியேறுவதை கண்டேன் வெளியில் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் கேலி செய்வார்கள் உனக்கு பைத்தியமா? பிடித்திருக்கிறது என்றும் பேசுவார்கள் ஆனால் நான் சொல்வது முற்றிலுமான உண்மை அப்படி அந்த நிழல் உருவம் என்னிடமிருந்து விலகிய அடுத்த கணமே என் உடல் கனம் மறைந்து விட்டது உடல் லேசாகவும் சுகமாக சுவாசம் விடவும் முடிந்தது பெரிய விலங்கு ஒன்று இதுவரை என்னை கட்டி போட்டிருந்ததாகவும் இப்போது தான் அது உடைந்து போனதாகவும் உணர்ந்தேன் அன்று முதல் இன்றுவரை எனக்கு சுவாச கோளாறு என்பதே கிடையாது அது ஏன் வந்தது எப்படி போனது என்பது எனக்கு முற்றிலுமாக விளங்கவில்லை.

சென்னை புத்தக கண்காட்சி நடந்த போது அங்கே இறப்புக்கும் பிறப்பிற்கும் நடுவில் என்ற உங்கள் புத்தகத்தை பார்த்து அதன் தலைப்பால் கவரப்பட்டு வாங்கி ஒரே மூச்சில் படித்து முடித்தேன் அதில் நீங்கள் எழுதிய ஆற்றங்கரை பாலத்தில் குளிர்ந்த காற்று உங்களை தாண்டி சென்றதாகவும் சிரிப்பு சத்தத்தை நீங்கள் கேட்டதாகவும் எழுதி இருந்தது. என்னை வியப்படைய செய்தது எனக்கும் அன்று அந்த கிராமத்தில் ஏறக்குறைய இதே போன்ற அனுபவம் தான் ஏற்பட்டது. அதுவும் நீங்கள் சொல்வது போல் ஆவிகளின் தொல்லையால் வந்த நோயாக இருக்கலாமோ என்று நினைக்கிறேன் அப்படி என்றால் அந்த ஆவி என்னை ஏன் பிடிக்க வேண்டும்? பிறகு எதற்காக நான் எந்த முயற்சியும் செய்யாமலே விலக வேண்டும் என்பது எனக்கு புரியவில்லை ஐயா அவர்கள் தயவு செய்து அதற்கு விளக்கம் தரும்படி பணிவோடு வேண்டுகிறேன்.

மாரிமுத்து.திண்டிவனம்

 
 
      நிறைய பேர் தனக்கு ஆவிகளால் தொல்லை ஏற்பட்டிருக்கிறது என்று சொல்வார்கள் ஆவி பிடித்து ஆடுவது போலவும் செய்வார்கள் ஆவிகளின் தொல்லையால் தனது உடம்பில் பலவித வேதனைகள் ஏற்படுவதாகவும் சங்கடபடுவார்கள் அப்படி கூறுபவர்களில் பலரின் விஷயங்களை சீர்தூக்கி பார்த்தால் அது ஆவிகளால் ஏற்படும் தொல்லைகள் அல்ல மன கோளாறால் உருவான தொல்லைகள் என்று தெளிவாகவே தெரியும்.

பலரும் நினைப்பது போல் அனைவரையும் ஆவிகளால் பிடித்து ஆட்டுவிக்க முடியாது நூற்றில் ஐந்து பேருக்கு மட்டுமே ஆவிகளால் துன்பம் கொடுக்க முடியும் அப்படி ஆவிகளால் துயரங்களை அனுபவிப்பவர்களின் ஜாதகங்களை ஆராய்ந்து பார்த்தாலே மன பிரச்சனையா? ஆவி பிரச்சனையா? என்பதை முடிவு செய்து விடலாம் உங்கள் ஜாதகத்தை அந்த கோணத்தில் அணுகிய போது நீங்கள் அனுபவித்த கஷ்டங்களுக்கு ஒரு தீய ஆவியே காரணமாக இருக்க வேண்டும் என்பது தெரிய வருகிறது.

பொதுவாக ஆவிகள் தாங்கள் வாழ்ந்த போது உடலால் அனுபவித்த சுக துக்கங்களை மீண்டும் உடல் பெற்று அனுபவிக்க வேண்டும் என்றே ஆசை படுகின்றன. அத்தகைய விருப்பங்களை சூட்சம சரீரம் பெற்ற ஆவிகளால் அனுபவிக்க இயலாது அதனால் அவைகள் தக்க மனித உடல்கள் கிடைக்கும் போது அவற்றை ஆக்கிரமித்து தங்களது அபிலாசைகளை நிறைவேற்றி கொள்ள முற்படுகின்றன மேலும் ஒரு ஆவி மனித உடம்பிற்குள் அதிகபட்சமாக பதினைந்து நிமிடங்களே வாசம் செய்ய முடியும். அதன் பிறகு உடனடியாக அது சரீரத்தில் இருந்து வெளியேறி விடும். காரணம் இயற்கையில் மனித உடலமைப்பு ஒரு நேரத்தில் ஒரு ஆத்மா மட்டுமே இருக்கும் வண்ணம் அமைந்துள்ளது அதை மீறி வேறொரு ஆத்மாவும் உள்ளுக்குள் வாசம் செய்ய முற்படும் போது உடலில் உள்ள ரசாயனங்கள் புதிதாக வந்த ஆத்மாவை வெளியில் தள்ளிவிடும்.

அப்படி தள்ளப்படும் ஆத்மா உடனடியாக மீண்டும் அதே உடலுக்குள் புகுந்து கொள்ள குறைந்தபட்சம் இரண்டரை நாழிகை நேரமாவது ஆக வேண்டும் உங்கள் உடலுக்குள் புகுந்த ஆத்மாவும் இதே விதிப்படி தான் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் உங்களால் தொடர்ச்சியாக மூச்சி திணறலை சமாளிக்க வேண்டிய நிலையில்லாமல் சற்று அவகாசம் கிடைத்திருக்கும். மேலும் ஒரு ஆத்மா தனது தேவைகள் நிறைவேறிய உடன் தான் பிடித்த உடலை விட்டு போய்விடும். உங்களை தீண்டிய அந்த தீய ஆவியும் அப்படி தான் சென்றிருக்க வேண்டும் மேலும் உங்கள் உடல்வாகு என்டோபிளாசம் என்ற சத்து பொருள் அதிகமாக சுரக்கும்படி இருக்க வேண்டும். அதனாலையே ஆவியால் தொல்லை உங்களுக்கு உருவாகி இருந்தது.

இதே போன்ற நிலைமை உங்களுக்கு மீண்டும் வராது என்று சொல்வதற்கில்லை உங்கள் ஜாதகம் அப்படி தான் சொல்கிறது எனவே ஆவி தொல்லைகளில் இருந்து முற்றிலுமாக விலக நீங்கள் தினசரி வேப்பமர நிழலில் யோகாசனம் செய்யுங்கள். வேப்ப இலையை உடலில் படுமாறு சட்டை பையில் வைத்து கொள்ளுங்கள். வேம்பில் உள்ள வீரியம் ஆவிகள் உங்கள் அருகில் வராமல் தடை செய்யும் மேலும் லஷ்மி நரசிம்மரை தொடர்ந்து வழிபடுங்கள். நரசிம்மரின் மூல மந்திரத்தை குரு மூலம் உபதேசம் பெற்று ஜபித்து வாருங்கள் சகல பிரச்சனைகளும் நீங்கி சந்தோசமாக வாழலாம்.


+ comments + 3 comments

நண்பர் மாரிமுத்து அவர்களுக்கு! ஸ்ரீ நரசிம்ம பீஜ மந்திரத்தை அடிக்கதி உச்சரிக்கவும். எந்த வித துன்பமும் வராது.!

Nrsimha Bija mantra

om kshraum

ugram viram maha visnum jvalantam sarvatomukham
nrisimham bhisanam bhadram mrtyu mrtyum namamy aham

'May my head be protected by the mooncoloured one, who is the greatest among humans.
My obeisances unto the ferocious and powerful, the great Visnu, the fiery one, who's faces
are on all sides, the fearful one, Nrsimha, who causes the death of even death
personified, (or who can overcome death)'.

நண்பர் மாரிமுத்து அவர்களுக்கு! ஸ்ரீ நரசிம்ம பீஜ மந்திரத்தை அடிக்கதி உச்சரிக்கவும். எந்த வித துன்பமும் வராது.!

Nrsimha Bija mantra

om kshraum

ugram viram maha visnum jvalantam sarvatomukham
nrisimham bhisanam bhadram mrtyu mrtyum namamy aham

'May my head be protected by the mooncoloured one, who is the greatest among humans.
My obeisances unto the ferocious and powerful, the great Visnu, the fiery one, who's faces
are on all sides, the fearful one, Nrsimha, who causes the death of even death
personified, (or who can overcome death)'.

22:57

I have also felt the same experience... But myself four months faced this problem.... Now my breath is so good....... Now i am feeling fine.......


Next Post Next Post Home
 
Back to Top