Store
  Store
  Store
  Store
  Store
  Store

காந்தியின் தவறு எது...?


நமது தேசபிதா மாகாத்மா காந்தி மேற்கொண்ட அஹிம்சை விரதம் கோழைத்தனமானது என்று என் நண்பன் சொல்கிறான். அது சரியா?

உடம்பில் பலமில்லை மனதில் துணிச்சல் இல்லை துணை வருவதற்கு யாரும் கிடையாது. இந்த நிலையில் எதிரியோடு மோத வேண்டும். அப்படி மோதினால் நிச்சயம் கிடைப்பது மாற்றமே இல்லாத தோல்வி என்று நன்றாக தெரியும் அப்போது நம்மை காப்பாற்றிக்கொள்ள நான் ஆயுதம் எடுக்க மாட்டேன் மற்ற உயிர்களை வதைக்க மாட்டேன் எந்த சூழலிலும் எதிரியை திருப்பி தாக்க மாட்டேன் என்று சொன்னால் அதன் பெயர் தான் கோழைத்தனம்.

ஆனால் காந்தி அப்படி அல்ல அவருடைய உடல் வலு இல்லாததாக இருந்தாலும் அந்த உடம்பிற்குள் ஹிமாலைய பலம் கொண்ட உள்ளம் இருந்தது. எதிரியின் பலம் என்ன பலவீனம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் தெளிவான அறிவு இருந்தது இதையெல்லாம் விட மேலாக இந்திய மக்கள் அனைவரின் ஆதரவும் துணையும் அவருக்கு இருந்தது. இந்த நிலையில் தான் அவர் அஹிம்சை பேசினார். அப்படி பேசுவதற்கு மாபெரும் துணிவு வேண்டும். இன்னும் சொல்ல போனால் அப்படி பேசியது தான் பெரிய வீரமாகும், எனவே காந்தி பேசிய அஹிம்சை கோழைத்தனத்தால் வந்தது அல்ல உண்மையான வீரத்த்தால் வந்தது ஆகும்.


காந்தியின் எளிமை போலித்தனமானது என்று சிலர் சொல்கிறார்களே அது உண்மையா?

காய்த்த மரம் கல்லடி படுமென்று ஒரு பழமொழி இருப்பது உங்களுக்கு தெரியும் சோலையில் ஆயிரம் பூக்கள் மலர்ந்திருந்தாலும் எந்த பூவில் அதிகமான தேன் இருக்கிறதோ அங்கு தான் நிறைய வண்டுகள் வட்டமிடும் காந்தியும் பழுத்த மரம் போன்றவர்தான் அவரை போல வாழ முடியாத அவர் வாழ்வின் அர்த்தம் புரியாத பல சந்தர்ப்ப வாதிகள் அவரை பற்றி இப்படி விஷம பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

காந்தியை குறை கூறுபவர்கள் அவர் ஏழைகளை பற்றி பேசினாலும் டாட்டா மாளிகையில் இருந்து பேசினார். ஏழைகள் வாழும் பகுதியில் அவர் தங்கியதே கிடையாது என்று கூறுகிறார்கள். காமாலை கண்ணனுக்கு காண்பது எல்லாம் மஞ்சளாக தெரியும் என்று சொல்வார்கள் மனிதர்களின் நிறைகளை விட்டு விட்டு குறைகளை மட்டுமே காணும் கருத்து குருடர்கள் அவர்கள்.


காந்தி நேருவை பிரதமராக்கியது நிஜமாகவே தவறுதானே?

நேற்று வரை நான் கூட அப்படி தான் நினைத்து வந்தேன் ஆனால் அன்றைய நிலைமையை சற்று ஆழ்ந்து சிந்தித்த போது காந்தி எடுத்த முடிவு மிக சரியானது என்றே தோன்றுகிறது. நேருவுக்கும்,சர்தார் பட்டேலுக்கும் அப்போது ஒளிவு மறைவு இல்லாமலே கருத்து மோதல்கள் நடந்து வந்தன நேருவை விட பட்டேல் மிக சிறந்த நிர்வாகி என்றாலும் நேருவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு பட்டேலுக்கு கிடையாது.

இந்த நிலையில் நேருவை விட்டு விட்டு பட்டேலை காந்தி பிரதமராக்கி இருந்தால் நேருவும் அவரை சார்ந்தவர்களும் சுதந்திரம் அடைந்த இந்தியாவின் முதல் அரசை பகிரங்கமாகவே எதிர்த்து இருப்பார்கள் விடுதலை பெற்றவுடன் உறுதியான அரசு அறியாமல் இந்திய ஜனநாயகம் தள்ளாட்டத்தை சந்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் விடுதலை என்பதும் கேளிவி குறியாகி நாடு பாகிஸ்தானை போல உறுதி அற்ற அவல நிலைக்கு  போயிருக்கும் அப்படி ஒரு சூழல் ஏற்படுவதை தடுக்கவே காந்தி நேருவை பிரதமர் ஆக்கினார். இது காந்தி எடுத்த ராஜ தந்திர நடவடிக்கை ஆகுமே தவிர தவறு ஆகாது.


Contact Form

Name

Email *

Message *