Store
  Store
  Store
  Store
  Store
  Store

கோவிலில் கொட்டாவி விடலாமா...?


ஐயா வணக்கம் !!!

        னது பெயர் பாபு ( எ) திருமலைசாமி. எனது சொந்த ஊர் உடுமலைபேட்டை அருகில் குடிமங்கலம் .

உஜிலாதேவி வாசகன் , அறியாத விடயங்களுக்கு தெளிவான பதில் , புரியாத இடையூறுகளை சமாளிக்க வழிமுறைகள் , மூலிகையின் மகத்துவங்கள் மற்றும் அனுபவம் கலந்த பல நல்ல தகவல்களை வாசகர்களுக்கு நித்தமும் வழங்கி வருவதற்கு எனது மனமார்ந்த நன்றி .

தங்களுக்கு இதுவே எனது முதல் அறிமுகம் . ஆனால் அவ்வப்போது கருத்துரைகள் இடுவது உண்டு .

எனக்கு ஒரு செயலுக்கு உண்டான உண்மையான காரணம் என்ன என்பதை தங்களிடம் தெளிவு படுத்த நீண்ட நாள் யோசனை , ஆனால் இன்று தான் அது நிறைவேறுகிறது .

கேள்வி : இறைவணை வழிபடும்பொழுது , மனதிற்குள் மந்திரம் உச்சாடனம் செய்யும் பொழுது , கோவில்களுக்கு உள்ளே இருந்தாலே கொட்டாவி வருகிறது . மற்றவர்களை விட உடன் இருப்பவர்களே கேலி செய்ய நேரிடுகிறது . சற்று மனம் வருந்தும் .

திருமலைசாமி,உடுமலைபேட்டை


    னிதனுக்கு கொட்டாவி வருவதற்கான உண்மை காரணம் மூளைக்கு பிராண வாயு குறைவாக இருக்கிறது. அந்த குறையை நிவர்த்திக்க வாய் நிறைய காற்றை இழுப்பது தான் மூலகாரணமாகும் ஆனாலும் கொட்டாவி என்பது ஏற்படும் கால நேரத்தை மிக உன்னிப்பாக கவனித்தால் வேறு சில விஷயங்களும் புலப்படும்.

வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுக்கிறார். அவர் எடுக்கும் பாடம் எனக்கு புரியவில்லை அல்லது அதில் எனக்கு நாட்டமில்லை எனும் போது என்னை அறியாமல் கொட்டாவி வருகிறது. அதே போலவே ஒரு வேலையை திரும்ப திரும்ப செய்யும் போது சலிப்பு ஏற்படுவதனால் கொட்டாவி வருகிறது. பல மணி நேரம் சரியான உறக்கமில்லை தூக்கம் கண்களை அழுத்தும் போது அதை எதிர்த்து விழித்திருக்க முயலும் போது கொட்டாவி வருகிறது.

இப்படி வருகின்ற கொட்டாவிக்கான காரணம் ஒன்று நமது மனதிற்கு பிடிக்காத புரியாத காரியங்களில் வலுகட்டாயமாக ஈடுபடும் போது மன சோர்வு ஏற்படுகிறது. இரண்டாவது உடல் ஒரு செயலுக்கு நம்மை இழுக்கும் போது நாம் அதற்கு எதிர்வினை காட்டும் போது மூளை ஓய்வெடுக்க சொல்லும் போது கொட்டாவி வருகிறது. ஆனால் மனதிற்கு இதமான மிகவும் சுவாரசியமான காரியங்களில் எத்தனை மணி நேரம் ஈடுபட்டாலும் கொட்டாவி வருவதில்லை எனவே செயல்களில் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தி கொண்டால் கொட்டாவியால் வரும் இடர்பாடுகளை தவிர்க்கலாம் என்று சொல்லலாம்.

ஆனால் இங்கு இந்த வாசகர் கேட்பது கோவிலுக்குள் போகும் போது கொட்டாவி வருகிறதே அது ஏன் என்பது தான் கோவிலுக்கு போகும் போது மட்டுமல்ல மந்திர ஜபம் ,தியானம் போன்றவைகளை செய்யும் போதும் கொட்டாவி வருகிறது. தியானம் ஜபம் இவைகளை ஆர்வம் இல்லாமல் செய்ய முடியாது அப்படி இருக்க கொட்டாவி வருவது ஏன்? இதற்கு மருத்துவ ரீதியில் பதிலை சிந்தித்தால் சரிவராது என்று நினைக்கிறேன் அதையும் தாண்டி யோக மார்க்க வழியாக சிந்திக்க வேண்டும். என்று நினைக்கிறேன்

பொதுவாக மந்திரங்கள் சொல்வது என்பது. தொண்டையில் இருந்து சொன்னால் அலுப்போ சலிப்போ ஏற்படாது ஆனால் அப்படி சொல்வதில் எந்தவித பலனும் இல்லை ஒரு டேப்பிரிகாடர் மந்திரத்தை சொல்வது போல் தான் அதுவும் அதனால் மந்திரத்தை அடிவயிற்றில் இருந்து அதாவது தொப்பிளில் இருந்து உச்சரிக்க வேண்டும். அப்படி சொல்லும் போது நம்மை அறியாமலையே பிராணன் என்பது லயப்பட ஆரம்பிக்கிறது. அப்போது மூளையின் செயல்பாடு மிக வேகமாக இருப்பதனால் பிராண வாயு அதற்கு அதிகம் தேவை இதனால் கொட்டாவி வருகிறது. அனால் சாஸ்திரம் ஆன்மிக சாதகம் செய்யும் போது கொட்டாவி விடுவதை தீட்டு என்றே சொல்கிறது. அதாவது அப்படி கொட்டாவி வருவதற்கு உடலில் சத்து இல்லை வலு இல்லை உடல் திடகாத்திரமாக இல்லை அதனால் உடலை வலுபடுத்து தானாக கொட்டாவி வருவது நின்று விடும் என்பது பொருளாகும்.

இன்னொரு சுவாரஷ்யமான விஷயத்தையும் இங்கு சிந்திக்கலாம் கிராமத்தில் சில பேர் மீது சுவாமி இறங்கும் போது நிறைய கொட்டாவிகளை விடுவார்கள் வாயை மிக அகலமாக விரித்து அவர்கள் விடும் ராட்சச கொட்டாவி நமக்கு பயமாக கூட இருக்கும். அருள் வரும் போது இப்படி கொட்டாவி வருவது ஏன்? வரலாமா? என்று நமக்கு தோன்றும் ஆனால் ஒன்று மட்டும் உண்மை கொட்டாவி என்பது ஒரு தாமச சின்னம் அதாவது சோம்பேறி தனத்தை உடல் வெளிப்படுத்தும் ஒரு சைகை இது அருள் வருகின்ற போது வரவேண்டிய அவசியமே இல்லை ஆனாலும் வருகிறது என்றால் அது சாமியாடிகளின் கவன ஈர்ப்பு காரியம் என்றே சொல்லலாம்.


Contact Form

Name

Email *

Message *