( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தபால் தீட்சை கொடுக்கபடுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

உடல் எரிச்சலை குறைக்கும் மூலிகை !


      யா கடந்த இரண்டு வருடமாக எனக்கு உடம்பு முழுவதும் அடிக்கடி எரிச்சல் ஏற்படுகிறது. அந்த எரிச்சல் வரும் நேரம் அனல் போல உடம்பு கொதிக்கிறது. சில நாட்களில் பலமணி நேரம் கூட எரிச்சலை தாங்க முடியாமல் அவதிபடுகிறேன் ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம், யுனானி மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம் என்று எல்லா மருத்துவத்தையும் பார்த்து விட்டேன் சாப்பிடுகிற மருந்துக்களின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர நோய் குறையமாட்டேன் என்கிறது. இதனால் வேலை செய்ய முடியவில்லை குடும்பத்தை கவனிக்க இயலவில்லை கடன்வாங்கி தான் செலவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளேன்.

இந்த நிலையில் ஜோதிடத்தை ஆராட்சி செய்யும் என் நண்பன் ஒருவன் சில கிரகங்கள் கெட்டு போனதனால் இதே போன்ற நோய்கள் வரும் அதனால் எந்த கிரகம் கெட்டு போய் இருக்கிறது. என்பதை பார்த்து அதற்கு தகுந்த மருந்தை பயன்படுத்தினால் கண்டிப்பாக நோய் விலகும் என்று சொன்னான் நானும் பல ஜோதிடர்களிடம் சென்று பார்த்து விட்டேன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள் இதனால் மிகவும் குழம்பி போய் இருந்தேன். சென்ற மாதம் உங்கள் உஜிலாதேவி இணையதளத்தை பார்த்த என் மனைவியின் தோழி உங்களை பற்றிய விவரங்களை தந்தார்கள்.

அதனால் உங்கள் இணையதளத்தை ஒரு மாதமாக தொடர்ந்து வாசித்து வருகிறேன் இங்கு கேட்கப்படும் கேள்விகளும் அதற்கு நீங்கள் தரும் பதிலும் எனக்கு பிரம்மிப்பாக இருக்கிறது. உங்கள் பதிலை பெறுகின்ற யாரும் தன்னம்பிக்கையை இழக்க மாட்டார்கள் பலபேருக்கு வழிகாட்டும் நீங்கள் எனக்கும் வழிகாட்டி உதவும்படி பணிவோடு வேண்டுகிறேன். என் நோய் மட்டும் குணமாகி விட்டால் போதும் எப்படியாவது உழைத்து முன்னேறி விடுவேன். அதற்கு நீங்கள் தான் சரியான வழியை காட்ட வேண்டும்

இப்படிக்கு
கோதண்டாராமன்
செங்கம்


     வ்வொருவர் ஜாதகத்திலும் ரோகஸ்தானம் என்ற ஒன்று உண்டு அதாவது லக்கினத்தில் இருந்து ஆறாவது இடத்தை ரோகஸ்தானம் என்று அழைப்பார்கள் இந்த வீட்டின் அதிபதியான கிரகத்திற்கு ரோகஸ்தானாதிபதி என்ற பெயர் உண்டு இந்த கிரகம் பகைபெற்று இருந்தாலும் நீச்சம் அடைந்து இருந்தாலும் குறிப்பிட்ட ஜாதகனுக்கு அந்த கிரகத்திற்குரிய நோய் வருமென்று வராகிமிகிரர் சொல்கிறார். உதாரணமாக லக்னத்திற்கு ஆறாம் இடம் ரிசபம் என்றால் அதன் அதிபதி சுக்கிரன் ஆகும் இந்த சுக்கிரன் கெட்டு போய் விட்டால் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பிறப்புறுப்பில் பிரச்சனைகள் வரும் அல்லது குழந்தை பெறுவதில் சிக்கல்கள் உருவாகும் இப்படி ஒவ்வொரு கிரகத்திற்கும் தனிதனி இயல்புகள் இருக்கிறது.

இதன் அடிப்படையில் உங்கள் ஜாதகத்தை நுணுக்கமாக ஆராயும் போது உங்கள் ரோகஸ்தானம் செவ்வாய் கிரகத்திற்கு சொந்தமானதாகவும் அந்த செவ்வாய் நீசம் பெற்றும் இருக்கிறது. எனவே உங்களுக்கு பித்தம் சம்மந்தமான நோய் வருவதை தவிர்க்க இயலாது அதாவது உடல் சூடு, குருதியில் பிரச்சனை போன்றவைகள் கண்டிப்பாக வரும். இன்ன கிரகம் கெட்டு போனால் அதற்கு பரிகாரமாக இன்ன காரியத்தை செய்யலாம் என்றும் நமது பெரியவர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள்.

உங்களுக்கு ஏற்பட்டுள்ள பித்த சம்மந்தமான உடல் எரிச்சலை தருவது செவ்வாயின் ஈர்ப்பாற்றலாகும் அதை மட்டு படுத்தி குறைக்கும் சக்தி கொத்தமல்லி விதை அதிமதுரம் போன்ற மூலிகைகளுக்கு இருக்கிறது. இவைகளை மருந்தாக உட்கொண்டால் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் உடல் உபாதை கண்டிப்பாக உடனடியாக விலகும் இதை படித்தவுடன் இந்த மூலிகைகளை மருந்தாக எப்படி பயன்படுத்துவது என்று உங்களுக்கு கேள்வி எழும்புவது இயற்க்கை

அதற்கும் நமது முன்னோர்கள் சரியான வழியை காட்டி இருக்கிறார்கள் சித்த மருத்துவத்தில் மிகபெரிய நோய்கள் முதல் சாதாரண நோய்கள் வரைக்கும் தீர்வதற்கு பல சித்தர்கள் வழிகாட்டி உள்ளார்கள் அவர்களில் மிகவும் முக்கியமானவர் அகத்திய மாமுனிகள் அவர் தமது நூல்களில் இத்தகைய பித்தத்தால் வரும் உடல் எரிச்சலை தணிக்க மிக சுலபமான ஒரு மார்க்கத்தை காட்டி இருக்கிறார். அதை உங்களுக்கு சொன்னால் நீங்களே அதை வீட்டில் இருந்தபடியே செய்து பூரண குணம் அடையலாம்

கொத்தமல்லி விதை அதாவது தனியா 200 கிராம் சீனா கற்கண்டு 400 கிராம் சீரகம், அதிமதுரம், கருஞ்சீரகம் காட்டு சீரகம் சன்ன லவங்க பட்டை, கருவாய் பட்டை போன்றவைகள் தலைக்கு 30 கிராம் எடுத்து கொள்ளுங்கள் இவற்றில் சீனா கற்கண்டு தவிர மற்றவற்றை உரலில் போட்டு இடித்து கதர் துணியில் சலித்து கொள்ளுங்கள் பிறகு சீனா கற்கண்டையும் பொடி செய்து முதலில் இடித்த மூலிகை பொருள்களோடு கலந்து வைத்து கொள்ளுங்கள் பிறகு காலை மாலை இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து வாயில் போட்டு வென்னீர் குடித்து வாருங்கள் அதிகபட்சமாக 90 நாட்களில் உங்கள் வியாதி முற்றிலும் விலகி விடும். இது வைத்திய முறை மட்டுமல்ல ஜோதிட ரீதியாக குறைவாக இருக்கும் கிரகத்தின் ஆகர்சனத்தை அதிகபடுத்தி தரும் ரகசிய முறையும் ஆகும். 

+ comments + 2 comments

Anonymous
09:21

Guruji vanakkam,
i have 100% guaranteed solution for mr kothandaraman's problem please tell him to contact me . so that we can help him to overcome from his difficulties.
regards
k.sivakumar
chennai
mobile : 7373689397

சார்

ஹோமாபதல் காந்தரிஸ் 1 எம் ஒரு டோஸ் எரிச்சல் வரும் போது போட்டால் சரியஹி விடும்

முடிவு அல்ல ட்ரை பண்ணலாம்

யாராவது ஹொமெஒ படித்த அலை கேட்டு கொள்ளவும்


Next Post Next Post Home
 
Back to Top