Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுளை அடையும் ஜாதகம்...!


    யா இரண்டு மாதங்களுக்கு முன்பு நானும் எனது நண்பனும் ஒரு ஜோதிடரை பார்க்க போயிருந்தோம் எனக்கு ஜாதகம் பார்த்து முடிந்த பிறகு என் நண்பனின் ஜாதகத்தை பார்த்தார் சிறிது நேரம் ஜாதக நோட்டை கூர்ந்து பார்த்த ஜோதிடர் பிறகு தீடிர் என்று எழுந்து அவன் கால்களில் விழுந்து வணங்கினார்.

என் நண்பனோ 30 வயது பூர்த்தியாகதவன் ஜோதிடரோ 60 வயத்திற்கு மேல் உள்ள பெரியவர் அவர் காலில் விழுந்ததும் நாங்கள் அதிர்ந்து போய்விட்டோம் மேலும் அவர் அவனுக்கு எந்த பலனையும் சொல்லவில்லை நீங்கள் சந்தோசமாக போய்வாருங்கள் எல்லாம் நல்லதாக நடக்கும் என்று மட்டுமே சொன்னார்.

அவர் காலில் விழுந்ததும் பலன் சொல்லாததும் எங்களுக்கு அதிர்ச்சி அதே நேரம் அவர் எதற்க்காக அப்படி செய்தார் என்பதும் புரியவில்லை அந்த சம்பவம் நடந்த நாள் முதல் என் நண்பன் மிகவும் குழம்பி போய் இருக்கிறான். சில நேரம் பெரிய அபாயங்கள் எதுவும் வருமோ என்றும் அச்சப்படுகிறான். அவன் பெற்றோருக்கு ஒரே மகன் அவர்களும் இதனால் வேதனை அடைகிறார்கள்.

அவனது ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பி உள்ளேன் அதை தீவிரமாக ஆய்வு செய்து எந்த பலனாக இருந்தாலும் தெளிவாக மறைக்காமல் சொல்லும்படி தாழ்மையுடன் வேண்டுகிறேன் காரணம் அடையாளம் தெரியாத அபாயத்தை விட எதிர்பார்க்கும் துயரம் இலகுவானது என்பது எனது அபிப்ராயம் எனவே ஐயா அவர்கள் மறைக்காமல் பலன் சொல்லினால் பலரின் குழப்பம் தீரும். நன்றி

என்றும் உங்கள் வாசகன்
தேத்ராஜ் செளக்கார் , பெருந்துறை

    ஜாதகங்களில் பலவிதமான யோகங்கள் பேசப்படுகிறது ராஜ யோகம் துவங்கி தரித்திர யோகம் வரையிலும் இருப்பதை நீங்கள் கூட அறிவீர்கள் இவைகளை தவிர்த்து ஜாதக அலங்காரம் குதிரை யோகம், பட்சி யோகம், வீணை யோகமென்று வேறுபல யோகங்களையும் விரிவாக பேசுகிறது. அப்படி சொல்லப்படும் யோகங்களில் மிகவும் முக்கியமானது சாங்கிய யோகம் என்பதாகும்.

சாங்கியம் என்றவுடன் இந்துமதத்திற்கு சொந்தமான ஆறு தரிசனங்களில் ஒன்றான கபில முனிவர் உருவாக்கிய சாங்கிய யோகம் தான் அனைவரின் நினைவிலும் உடனடியாக வரும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கூட தமது பகவத் கீதையில் விஸ்வரூப யோகம் என்ற பகுதியில் யோகங்களில் நான் சாங்கியமாக இருக்கிறேன். முனிவர்களில் நான் கபிலராக இருக்கிறேன் என்று சொல்கிறார். அந்த அளவு புகழ் பெற்றது உயர்வானது ஈடு சொல்ல முடியாதது சாங்கிய யோகமாகும்.

இங்கு ஜாதக அலங்காரம் சொல்லுகின்ற சாங்கிய யோகம் என்பது வேறு கபிலரின் சாங்கிய யோகம் என்பது வேறு ஆனால் இரண்டிற்கும் சிறிய ஒற்றுமை உண்டு ஜாதகத்தில் வரும் சாங்கிய யோகம் ஒரு மனிதன் கடவுளை அடைவானா? மாட்டானா? என்று சொல்லும் கபில முனிவரின் சாங்கிய யோகம் கடவுள் தேவையா? தேவையில்லையா? என்பதை சொல்லும்.

ஜாதகபடியான சாங்கிய யோகம் அமைந்து பிறந்தவர்கள் ஒழுக்கத்தில் காந்தியாகவும் அறிவில் விவேகானந்தராகவும் தவத்தில் மகாவீரராகவும் இதயத்தில் வள்ளலாராகவும் இருப்பார்கள் சுருங்க சொல்வது என்றால் நடமாடும் மனித தெய்வம் என்றே அவர்களை சொல்லலாம் நம்பினால் நம்புங்கள் உங்கள் நண்பர் ஜாதகத்திலும் அந்த சாங்கிய யோகம் இருக்கிறது.

அவர் பெற்றோருக்கு ஒரே பிள்ளையாக இருக்கலாம் செல்வத்தில் மிதப்பவராகவும் இருக்கலாம் அழகான மனைவியை அன்பானா குழந்தைகளை பெற்றவராகவும் இருக்கலாம் ஆனால் இவை அனைத்தையும் ஒரே நொடியில் உதறி விட்டு ஞான வைராக்கிரம் கைவர பெற்று கடுந்தவம் செய்ய கிளம்பி விடுவான் இது அவர் ஜாதகப்படி இன்னும் ஐந்து வருடத்திற்குள் நடக்கலாம் இன்று தோளில் கைபோட்டு பழகும் உங்கள் நண்பரையே நாளை நீங்கள் சாஸ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டி வரும் இது உறுதி

இனி சாங்கிய யோக எப்படி அமையும் என்பதை பார்ப்போம் ஒரு ஜாதகத்தில் லக்கினத்திற்கு நான்கு மற்றும் ஒன்பதாம் இடங்களில் அனைத்து கோள்களும் ஒன்றாக இருப்பதே சாங்கிய யோகம் எனப்படுகிறது. இப்படி கிரக நிலை அமைந்தவர்கள் எதனையும் செய்து முடிக்கும் ஆற்றல் பொருந்தியவராகவும் வீரமும் வல்லமையும் பெற்றவராகவும் தவத்தை மேற்கொள்ளும் மேலான முனிவராகவும் ஒழுக்க சீலராகவும் இருப்பார்கள் என்று ஜாதக அலங்காரம் தெளிவாக பேசுகிறது. எனவே நீங்கள் நண்பரை வாழ்க்கையின் வழிகாட்டியாக கொள்ளுங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். 


Contact Form

Name

Email *

Message *