( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தபால் தீட்சை கொடுக்கபடுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

காமக் கொடூரன் ஜாதகம் !


   குருஜி அவர்களுக்கு வணக்கம் உங்களது ஜோதிட பதில்களை தொடர்ந்து படித்து வருகிறேன். விளக்கமாகவும் விரிவாகவும் விஷய ஞானத்தோடும் பல பதில்களை தந்து பலருக்கும் பயன்பட செய்கிறீர்கள் எனக்கொரு சிறிய சந்தேகம் சில நாட்களுக்கு முன்பு எனது நண்பர் ஒருவரை பார்க்க சென்றேன் அவர் தொழில் முறை ஜோதிடர் நான் போகும் போது ஒரு ஜாதகத்தை பார்த்து பலன் சொல்லி கொண்டிருந்தார் அது ஒரு ஆணின் ஜாதகம் அவனுக்கு பெண்ணை கொடுப்பதா? வேண்டாமா? என்று வந்தவர் கேட்டு கொண்டிருந்தார் அதற்கு என் ஜோதிட நண்பர் தயவு செய்து இவனுக்கு பெண் கொடுக்காதீர்கள் இவன் ஒரு காம வெறியன் குடும்ப வாழ்க்கைக்கு ஒத்து வராதவன் என்று பதில் சொன்னார் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ஒரு ஜாதகத்தை பார்த்து அவன் காம வெறியனா? இல்லையா? என்று சொல்ல முடியுமா? என்று எனக்கு தோன்றியது. தயவு செய்து இதற்கு விளக்கம் தாருங்கள்.

குருராஜ்.மதுரை

   ரு ஜாதகத்தை தெளிவாக ஆராயும் போது குறிப்பிட்ட ஜாதகருக்கு இன்ன வயதில் இன்ன நோய் வரும் என்பதை அறிந்து கொள்ளள முடியும் எனும் போது அவனது குணாதிசையத்தை கணிக்க முடியாதா என்ன?  கணக்கு போடுவதில் நிபுணத்துவமும் வாக்கு பலிதமும் இருந்தால் அனைத்து விஷயங்களையும் தெளிவாகவே ஜோதிடம் மூலம் அறிந்து கொள்ளலாம் ஜோதிட பலன்கள் தவறுவது கணக்கு போடுவதில் செய்யும் தவறே தவிர வேறு ஒன்றுமில்லை

ஆண் பெண் யாராக இருந்தாலும் அவர்கள் ஜாதகத்தில் சுக்கிரனும் சந்திரன்களும் இணைந்து இருந்தாலும் ஒன்றுக்கொன்று பார்வை இருந்தாலும் அவர்களுக்கு காம உணர்வு மிக அதிகமாகவே இருக்கும் அதே போல சுக்கிரன் சந்திரன் இவற்றோடு புதனும் சேர்க்கை பெற்றால் உடலுறவை பலரோடு வைத்து கொள்வார்கள்

கள்ள காதல் உறவு வைக்கும் பலரின் ஜாதகத்தை பார்த்தால் சுக்கிரன் சந்திரன் ராகு ஆகிய மூன்று கிரகங்களும் சேர்க்கை பெற்று இருக்கும் அதே போல காம கொடூரன் என்று அழைக்கப்படும் மனிதர்களுக்கு சுக்கிரன் சந்திரன் புதன் ராகு ஆகிய நான்கு கிரகங்களும் சேர்க்கை பெற்று இருப்பதை அறியலாம்

காமம் என்பது இறைவன் படைப்பில் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக கொடுக்கப்பட்ட ஒரு உணர்வு என்றாலும் அது அத்துமீறி அளவுக்கு அதிகமாக செல்லும் போது சமூதாய சீர்கேடாகவும் தர்ம வழிக்கு விரோதமாகவும் அமைந்து விடுகிறது. ஒருவனிடம் ஆயிரம் நல்ல இயல்புகள் இருக்கலாம் ஆனால் அவற்றையும் மீறி காம உணர்வு அதிகமாக இருந்தால் அவன் முற்றிலும் நிலைகுலைந்து விடுவான் இதற்கு சரியான உதாரணமாக ராவணனை காட்டலாம்

ராவணன் சிறந்த யுத்த தந்திரி, இசை மேதை, வேத விற்பன்னன் ஆனாலும் காமுகன் வரம்பு மீறிய அவனது காம உணர்வு அவனிடமிருந்த நல்ல இயல்புகள் அனைத்தையும் மறைத்து விட்டது. குழி தோண்டி புதைத்து விட்டது. எனவே உயிர்களுக்கு இயல்பான உணர்வு தான் காமம் என்றாலும் அதிலும் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கண்டிப்பாக வேண்டும். அது இல்லாதவர்கள் அழிந்து போவார்கள்

நான் மேலை சொன்ன கிரக சேர்க்கை பெற்றவர்கள் தங்களது மனதை அடக்கி காம விகார எண்ணங்களை கட்டுபடுத்தி வாழ்ந்தார்கள் என்றால் வாழ்வில் அனைத்து துறையிலும் வெற்றி பெறலாம் சாதனை படைக்கலாம் மாறாக காமம் இழுத்த இழுப்புக்கு ஆட்படுவார்கலேயானால் மரண குழியில் அல்ல அல்ல நரக குழியில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். இது நிச்சயம்.


+ comments + 8 comments

நான் மேலை சொன்ன கிரக சேர்க்கை பெற்றவர்கள் தங்களது மனதை அடக்கி காம விகார எண்ணங்களை கட்டுபடுத்தி வாழ்ந்தார்கள் என்றால் வாழ்வில் அனைத்து துறையிலும் வெற்றி பெறலாம் சாதனை படைக்கலாம்
இந்த அறிவுரை மிகமுக்கியமான ஒன்று .இதை சொல்ல தெரியாதவர்கள் ஜாதகம் சொல்ல வேண்டாம் என் மன்றாடி கேட்டுக்கிறேன் .எது ஒன்று நம்பிக்கை தருகிறதோ அதுவே கடவுளின் சக்தி .அதை சொன்னதற்கு நன்றி .மட்டுமல்லாமல் அளவோடு அன்பவிக்கும் ஜாதகர்கள் ஜாதகத்தில் இம்மாதிரி கூறுகள் இருந்தால் வேறு துறையில் முன்னேற இந்த வார்த்தைகள் உதவும் நன்றி

Anonymous
16:09

Intha Graha Amaippu Jathagathil Entha Veetil irunthal eppadi irrukkum.

Entha kirakam ethooda kuuddu kernthaal enna..
Manasa kaddu paduththa therinsavangalai
Kirakam ethum seiya mudiyaathu appidiththaane
Kuru ji?

Anonymous
01:51

இவர் சொல்லுறது முழுக்க முழுக்க தப்பு... இதே அமைப்போடு என்ஜாதகம் உள்ளது அண்ண இது வரைக்கும் நான் எண்ணத பெண்ணையும் தொட்டது கூட இல்ல... நீங்க கடவுள் இல்லனு ஞாபகம் வைத்து கொள்ளவும்

Anonymous
15:26

இவர் சொல்லுறது தப்பு. இதே அமைப்போடு எனக்குத் தெரிந்த ஒரு ஜாதகம் உள்ளது. இது ஒருவேளை 7ம் இடத்தில் இருந்தால் நடக்கலாம்

Anonymous
00:34

That is wrong the same putha sukra combination is in my horoscope

supper nice good

சுக்கிரன் ராகு இணைந்தால் காம எண்ணம் அதிகம்.


Next Post Next Post Home
 
Back to Top