Store
  Store
  Store
  Store
  Store
  Store

மனைவி என்ற கைவிலங்கு...!


   ன்புள்ள குருஜிக்கு வணக்கம் எனது பூர்விகம் திருநெல்வேலி மாவட்டம் ஆனால் எனது தந்தையார் இளம் வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டதனால் தற்போது முழுக்க முழுக்க சென்னை வாசி ஆகிவிட்டோம். எனக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது பெற்றோரால் பார்த்து முடித்து வைக்க பட்ட திருமணம் அது பலவித கனவுகளோடு இல்லற வாழ்வை துவங்கினேன்.

எனக்கு மனைவியாக வந்தவள் சாதாரண பெண்மணி அல்ல ஒருவருடைய இதயத்தை எப்படியெல்லாம் காயபடுத்தலாம் என்ற நுணுக்கம் தெரிந்த மகா மேதாவி திருமணம் முடிந்த முதல் வாரத்திலேயே தனிக்குடித்தனம் போக வேண்டும் என்றாள் நான் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டவன் உடனடியாக தனிக்குடித்தனம் போக மனது வரவில்லை சில மாதங்கள் பொறு என்றேன். அதை அவள் காதில் போட்டுக்கொள்ளவில்லை. தனியாக போகவில்லை என்றாள் தற்கொலை செய்துகொள்வேன் என்றாள். என் நிலைமை கவலைக்கிடமாகி விட்டது. விஷயத்தை தயக்கத்தோடு என் பெற்றோர்களிடம் சொன்னேன்.

கூட்டு குடும்பமோ தனிகுடும்பமோ அது முக்கியமல்ல நீ நிம்மதியாக சந்தோசமாக இருக்க வேண்டும் அது எங்களுக்கு முக்கியம் என்று சொல்லிய அவர்கள் எங்களை தனியாக வீடு பார்த்து வைத்தார்கள் இத்தோடு கஷ்டம் தீர்ந்துவிடும் என்று நினைத்தேன் ஆனால் அது தான் எனது துயரத்தின் துவக்க நாளாக இருந்தது.

தனிக்குடித்தனம் வந்த அவள் எங்கள் வீட்டிற்கு என் அப்பா அம்மா யாரும் வரக்கூடாது என்றாள் அவர்கள் வரவில்லை என்றாலும் நானாவது சென்று அவர்களை பார்க்கலாம் என்றாள் அதற்கும் அவள் அனுமதி தரவில்லை என்னை மீறி நீங்கள் எது செய்தாலும் என் பிணத்தை தான் காண்பீர்கள் என்று மிரட்டினாள் என் குடும்பத்தை வரவிடாமல் தடுத்த அவள் தன் குடும்பத்தை வரவேற்றாள் உபசரித்தாள் அவள் எப்படி தனது தாய் தந்தையோடு சகஜமாக இருக்கிறாளோ அதே போலவே நானும் அவர்களோடு பழக வேண்டும் அவர்களுக்கு வேண்டியதை செய்ய வேண்டும். என்று கட்டாயபடுத்தினாள்.

குடும்பம் என்றாள் ஆயிரம் சங்கடங்கள் வரும் அதை தாங்கி கொள்ள வேண்டும். என்ற எண்ணத்தில் அவளுடைய தொல்லைகள் அனைத்தையும் பொறுத்து கொண்டேன் காலம் சென்றால் ஒரு குழந்தை என்று வந்தால் அவள் மனது நிச்சயம் மாறும் என்று நம்பினேன் ஆனால் அவள் என் நம்பிக்கையில் நெருப்பு வைப்பதில் குறியாக இருந்தாள்

உங்கள் சம்பளத்தில் வீட்டு வாடகை கொடுத்து குடும்ப செலவையும் நடத்த முடியாது எனவே என் வீட்டில் சென்று வாழலாம் வாருங்கள் என்று அழைத்தால் மனைவியின் வீட்டில் தங்குவதற்கு என் தன்மானம் இடம்கொடுக்க வில்லை வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தால் என்ன மரியாதை கிடைக்கும் என்று எனக்கு தெரியும் அதனால் அவளின் கோரிக்கைக்கு உடன்பட மறுத்தேன் அமைதியாக விட்டுவிட்டாள் சரி அவள் மாறிவிட்டாள் என்று நானும் சந்தோசப்பட்டேன்

இந்த நிலையில் அவள் மூன்று மாதமாக குளிக்காமல் இருந்தாள் கர்பவதியான பெண்ணை எப்படி நடத்துவது என்று எனக்கு தெரியாது எனவே எனது தாயாரை ஒருவாரமாவது வீட்டில் வந்து இருக்க சொல்லலாமா என்று அவளிடம் கேட்டேன் உங்கள் அம்மா வந்தால் வயிற்று பிள்ளையோடு நெருப்பு வைத்து செத்து போய்விடுவேன் என்றவள் நான் இரண்டு மாதம் எங்கள் வீட்டில் இருந்துவிட்டு வருகிறேன் என்று பிறந்த வீடு போய்விட்டாள்

எனது மாமனார் தன்மைகள் குழந்தை பிறக்கும் வரை தன் வீட்டிலையே இருக்கட்டும் அதுவரை நீங்கள் வந்து போய் இருங்கள் பிரசவத்திற்கு பிறகு தனிவீட்டில் வாழலாம் என்று சொன்னார் நானும் பெண்ணினுடைய பிரசவ நேர உபத்திரங்களை மனதில் வைத்து அதற்கு சம்மதித்தேன். என் மனைவிக்கு மிகவும் சந்தோசமாகி விட்டது. உங்களை தினசரி பார்க்காமல் என்னால் இருக்க முடியாது அதனால் குழந்தை பிறக்கும்வரை நீங்கலம் என்னோடு தங்குங்கள் என்று கெஞ்சினாள்.

அவள் அன்பாக பேசியது நடந்துகொண்ட விதம் எல்லாமே அவள் திருந்திவிடுவாள் என்ற ஒரு எண்ணத்தை எனக்கு தந்ததனால் அதற்கும் சம்மதித்தேன் நான் செய்த தவறு அது தான் நான் அவள் வீட்டிலேயே தங்க துவங்கியவுடன் அவள் போக்கு மிகவும் மாறிவிட்டது ஆணவமாக நடந்தாள் தூக்கி எரிந்து பேசினாள் ஒருநாள் மாலையில் அவளும் அவளது தாயாரும் மருத்துவமனை சென்று நான்கு மாத குழந்தையை கலைத்துவிட்டு வந்தார்கள். விஷயம் அறிந்து பதறிவிட்டேன் கோபத்தில் கடினமான வார்த்தைகளை பயன்படுத்தியும் விட்டேன்.

அதற்கு அவள் சொன்ன காரணம் என்னை மேலும் கோபமடைய செய்தது கரு உருவான நேரம் சரியில்லையாம் இந்த குழந்தை பிறந்தால் தனது பிறந்த வீட்டாருக்கு ராசி இல்லாமல் போய்விடுமாம் அதனால் தான் குழந்தையை கலைத்தேன் என்றாள். உடலை வருத்தி ரத்தத்தை வியர்வையாக்கி என்னை வளர்த்து ஆளாக்கிய அப்பாவை மறந்து பாசத்தை மட்டுமே கொடுக்க தெரிந்த அம்மாவை பிரிந்து இவள் என் குடும்பம் வளர ஒரு வாரிசை பெற்று தரமாட்டாளா என்பதற்காக தான் அவள் ஆட்டுவித்த படியெல்லாம் ஆடினேன் ஆனால் அந்த வாரிசே இல்லை என்று ஆனபிறகு இவள் எதற்கு.

ஒருமுறை என் அண்ணாவோடு தொலைபேசியில் பேசுவதை பார்த்துவிட்டாள் அன்று அவள் ஆடிய ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல என் அண்ணா என்னை ஏமாற்றிவிடுவாராம் மோசம் செய்து விடுவாராம் நடுத்தெருவில் நிற்க வைத்து விடுவாராம் அதனால் அவரோடு நீ பேசவே கூடாது மீறினால் பேசினாள் என்னை மறந்துவிடு என்று ஆடினால் அவளுடைய ஆர்பாட்டங்களை தடுப்பதற்காகவே கூட பிறந்தவர்களோடு பேசுவதை கூட நிறுத்திய நான் அவள் அண்ணன் தம்பிக்கி எடுபிடி வேலைகள் கூட செய்திருக்கிறேன் எல்லாம் எதற்க்காக ஒரு குடும்பம் அழிந்துவிட கூடாது கெட்டு போய்விட கூடாது என்பதற்காக தான்.

அவளுக்கு அதை பற்றியெல்லாம் கவலை இல்லை அவள் ஆட்டியபடி நான் ஆட வேண்டும் அடிமையாக இருக்க வேண்டும் அவ்வளவு தான் இன்னும் வெட்கத்தை விட்டு சொல்வது என்றாள் கணவன் மனைவி உறவு கூட அவள் நினைத்த போது தான் இருக்க வேண்டும். என்று கட்டயபடுத்தும் மனோபாவம் அவளுக்கு

இத்தனை அவமானங்களை மீறி அவளோடு நான் வாழ்வதற்கு மிக முக்கிய காரணமே என் தாய் தந்தையர் தான் விவாகரத்து ஆகிவிட்டால் குடும்பம் பிரிந்து விட்டால் ஊரார் கேவலமாக பேசுவார்கள் ஒரு பெண் பாவத்திற்கு ஆளாகி விடுவோம் அதனால் எப்பாடு பட்டாவது அவளோடு வாழ முயற்சி செய் அவளை மாற்ற போராடு என்று அவர்கள் இன்று வரை என்னை கட்டாயபடுத்தி வருகிறார்கள். பெற்றவர்களின் வார்த்தையை தட்ட கூடாது என்ற ஒரே ஒரு காரணத்திற்க்காக இதுவரை பொறுமையாக இருந்துவிட்டேன்.

இனியும் என்னால் பொறுமையாக இருக்க முடியுமா உணர்ச்சியற்ற ஒரு ஜடமாக வாழ முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை எந்த நிமிடம் வேண்டுமானாலும் என் கட்டுபாடுகள் உடையும் அப்போது விவரீதமான முடிவுகளை நான் எடுத்துவிடவும் கூடும். அந்த நிலை வந்தால் என் குடும்பத்திற்கு மேலும் அவமானம் ஆகி விடும். ஆகவே குருஜி ஐயா அவர்கள் நான் என்ன செய்ய வேண்டும் என் பெற்றோர் சொல்படி அவளோடு வாழ்வதா அல்லது நடப்பது நடக்கட்டும் என்று பிரிந்து வந்துவிடுவதா என்பதை தெளிவாக சொல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்

நீங்கள் சொல்லும் முடிவு எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு நடக்க சித்தமாக இருக்கிறேன் தயவு செய்து என் பெயரை வெளியிட வேண்டாம் இதனால் எனக்கு அவமானம் என்பதற்காக இதை கேட்கவில்லை ஒருவேளை என் மனைவியின் வீட்டார் யாரவது இதை படித்து விட்டால் பிரச்சனையை ஆகிவிடும் என்பதற்காகவே பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்கிறேன். நன்றி வணக்கம்

பெயர் வெளியிட விரும்பாத வாசகர்


ஆணாதிக்க கொடுமைகளை பற்றி அதிகமாக படித்திருக்கிறோம் கேட்டிருக்கிறோம் ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளை பற்றி பக்கம் பக்கமாக எழுதியும் வைத்திருக்கிறோம். ஆண்களை போலவே பெண்களும் மனித சமூதாயத்தின் ஒரு பிறவி அவர்களுக்குள்ளும் ஆண்களிடத்தில் உள்ள கொடுமைகள் வன்மங்கள் வக்கிரங்கள் இருக்கும் என்பதை மறந்துவிடுகிறோம். அல்லது பெண்களை ஏமாற்றுவதற்காக அதை மறைத்தும் விடுகிறோம். ஆண்களால் பெண்களுக்கு மட்டுமல்ல பெண்களால் ஆண்களுக்கும் பல கொடுமைகள் காலகாலமாக நடந்துவருகிறது. அந்த துயரங்களை வெளியில் கொண்டுவர உரக்க சொல்ல நிவாரணம் தேட யாருமில்லை.

உடல் ரீதியாகவும் பொருள் ரீதியாகவும் பெண்கள் துன்புறுத்த படுகிறார்கள் என்று நாகரீக சமூகம் அவர்களுக்கு சட்டம் சார்ந்த சில பாதுகாப்புகளை கொடுத்திருக்கிறது. அது பாராட்ட வேண்டிய விஷயம் என்பதில் மாற்றுகருத்து இல்லை தன்னை பாதுகாத்தது கொள்ள கொடுக்கபட்டிருக்கும் சட்ட சலுகைகளை எல்லா பெண்களும் சரியான கோணத்தில் தான் பயன்படுத்திகிறார்களா என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

கூட்டுகுடும்பம் என்பது உடைந்து தனிதனி குடும்பம் என்ற கலாச்சார சீர்கேடு இந்த நாடு முழுவதும் பரவிவிட்டது தனியாக வாழவேண்டும் என்ற ஆசை ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இருப்பது உலகறிந்த ரகசியம் பெண்கள் அத்தகைய தனி வாழ்வில் தாங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களே தவிர தற்காலிகமாக கூட அதில் யாரும் பிரவேசிக்க விரும்புவது இல்லை குறிப்பாக மாமனார் மாமியார் நாத்தனார் கொழுந்தனார் என்ற உறவுகளை அரக்கர்களை போல வில்லன்களை போல பார்க்கிறார்களே தவிர ரத்தமும் சதையும் கொண்ட சக மனிதராக பார்ப்பது இல்லை

பெண்களிடத்தில் பல நல்ல இயல்புகள் உண்டு அதை நான் மறுக்கவில்லை அதே நேரம் அவர்களிடம் ஆண்களை விட அதிகமான சின்னபுத்தியும் உண்டு இப்படி நான் சொல்வதை பலர் வெளிப்படையாக ஏற்காவிட்டாலும் உள்ளுக்குள் ஒத்துகொள்வார்கள். பெண்களின் சின்னபுத்தியாலையே பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறது. பத்து ஆண்கள் ஒரு குடும்பத்தில் இருந்தால் கூட பெரிய சிக்கல் வராது இரண்டு பெண்கள் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் குடும்பம் சந்தைகடையாகி விடும். இதற்காக தான் நமது பெரியவர்கள் பல நெறிமுறைகளை பெங்களுக்கேன்றே வகுத்தார்கள் கொடுத்தார்கள். ஆனால் நாகரீக சமூகம் என்ற போர்வையில் அவைகளை நாம் புறக்கணித்து விட்டோம். அதன் விளைவுகளை தான் அனுபவித்து கொண்டிருக்கிறோம்.

பெயர் வெளியிட விரும்பாத இந்த வாசகரை போலவே நிறையா ஆண்கள் இருக்கிறார்கள் பெண்களால் அனுபவிக்கும் துயரங்களை அவர்களால் இவரை போல் தைரியமாக சொல்லவில்லை அவ்வளவு தான் ஆண்களின் மெளன புழுக்கத்திற்கும். ஒரு நாள் விடுதலை கிடைத்தே தீரும் அந்த நாள் வெகுதூரத்தில் இல்லையே என்று நினைக்கிறேன்.

இவரின் ஜாதகத்தை நன்றாக ஆய்வு செய்ததில் ஒரு உண்மை தெளிவாகவே தெரிகிறது. இவரின் பெற்றோர்கள் பெண்ணின் குடும்பத்தை பற்றி வெளியில் விசாரித்த அளவு ஜாதக பொருத்தங்களை பார்க்கவில்லை என்றே நினைக்கிறேன். காரணம் இருவரின் ஜாதகமும் எந்த வகையிலும் பொருந்தி வரவில்லை பொருந்தாத ஜாதகம் தான் இவருக்கு அமைய வேண்டும் என்பது விதி அதை தடுக்க யாராலும் முடியாது. மேலும் இவரின் பூர்வ புண்ணிய ஸ்தான அமைப்பில் பல கேடுகள் தெரிகின்றன. அதன் அடிப்படையில் இவரின் இல்லறம் அவ்வளவு சிறப்பாக எப்போதுமே அமையாது என்று சொல்லலாம். அதே நேரம் குடும்ப வாழ்க்கைக்குரிய இடமான ஏழாவது இடம் வலுபெற்று இருப்பதனால் இரண்டாவது திருமணம் இவருக்கு இல்லை என்ற சொல்ல வேண்டும்.

மற்ற கிரகங்களை ஆராயும் போது இவரது மனைவியின் மனோ நிலை இன்னும் இரண்டு வருடத்தில் மாறுமென்று சொல்லலாம் ஆயிரம் இருந்தாலும் கணவன் மனை உறவு தான் நிரந்தரமானது மற்றவைகள் அனைத்தும் தற்காலிகமானதே கணவன் அளவிற்கு மற்றவர்களிடம் எதிர்பார்ப்பது தவறு என்ற ஞானம் அவருக்கு பிறக்கும். அதாவது தனது சொந்த குடும்பத்தாலே இவர் மாணவி அவமானப்படும் சூழல் உண்டு அப்போது தான் அவர் திருந்துவார்.

திருமண உறவு என்பது சட்டையை மாற்றிகொல்வதை போல அநித்தியமானது அல்ல நல்லதோ கெட்டதோ முடிந்தவரை அனுசரித்து வாழ்வது தான் சரியான தாம்பத்யம் எனவே பொறுமையோடு இருங்கள் உங்கள் மனைவி கண்டிப்பாக திருந்துவாள் மதுராந்தகத்தில் உள்ள ஏரிகாத்த ராமர் கோவிலுக்கு ஒன்பது பெளர்ணமி தினங்கள் சென்று தரிசனம் செய்யுங்கள் சர்வ வல்லமை படைத்த ராமன் உங்கள் வாழ்வில் மறுமலர்ச்சி தருவான். பொறுமையே இப்போது உங்களுக்கு சிறந்த ஆபரணம் என்பதே நமது அறிவுரை.


Contact Form

Name

Email *

Message *