Store
  Store
  Store
  Store
  Store
  Store

என்னை ஜனாதிபதி ஆக்குங்க அம்மா...!


   ன்புள்ள சோனியாகாந்தி அம்மா அவர்களுக்கு பலமுறை கும்பிட்டு மன்னடி மன்னாரு எழுதும் கடிதம் அம்மா நல்லா இருக்கீங்களா? நாட்டில் இருக்கும் பிரச்சனைகளை நினைத்து சாப்பிடாம உடம்பை பட்டினி போட்டு கெடுத்துக்காதீங்க ஜாக்கிரதையா பார்த்துக்குங்க சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். நீங்க நல்ல இருந்தா தான் நம்ம காங்கிரஸ்கார அண்ணாச்சி மாறுங்க செளவுக்கியமா கொடிகட்டின காருல ரவுண்டு வர முடியும். எங்க கலைஞர் தாத்தா கூட மகள நினைச்சி கவலைபடாம இருக்கலாம் மகன்கள் கிட்ட தைரியமா பேசலாம்.

ஊர்ல மூல மூலைக்கு உங்கள பற்றி தாறுமாறா பேசுரானுங்கன்னு மனச போட்டு குழப்பிக்காதீங்க இந்த ஊரு வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் கஷ்டப்பட்டு நாலு காசு சேர்த்தால் கொள்ளையடிக்கிறான் பாரு நோட்டு மாத்துரானோ என்னவோ என்றெல்லாம் பேசுவானுங்க. சும்மா வீட்ல குந்திக்கின்னு கிடந்தா சோமாறி வேலைக்கு போகம யார்போட்ட சோத்தையோ துன்றான் கவலையில்லாம தூங்கறான் என்று பொலம்புவாணுங்க அதனால கவல படமா ஜோரா சொலியபாருங்க .


அம்மா ஒரு விஷயம் ஜனாதிபதி வேலைக்கு ஆள்வேனும்னு நாடு முழுவதும் வலைபோட்டு தேடுரீங்கலாம் இதுவரையும் நீங்க எதிர்பார்க்கிற மாதிரி யாரும் சிக்கலையாம் இந்த விஷயத்த கேட்டவுடனே எனக்கு ரொம்ப வருத்தமா போச்சிங்க. இந்த உலகத்துல கிணறு வெட்ட மூட்ட தூக்க ஆள்கள் சுளுவா கிடைச்சிருது சும்மா ஓய்வா குந்திக்கின்னு ஆமா சாமி போட ஆள் கிடைக்கல என்ங்கும் போது மனசு பகீர்னு ஆய்போச்சிங்க.

நீங்க பெரியவுங்க ஒசந்த இடத்துல இருக்ரவுங்க உங்களுக்கு தெரியாத ஆளுங்களே கிடையாது. இருந்தாலும் இந்த மன்னடி மன்னாரை பற்றி நீங்க கேள்விபட்டிருக்க மாட்டீங்க என்ன பத்தி நீங்க தெரிஞ்சிக்கிற அளவுக்கு நானென்ன அம்பானியா, கனிமொழியா ஒரு சாதரணமான பிசுகோத்து ஆளு நானு அதனால என்னைப்பற்றி நானே சொல்லிகிறேங்க.

டாஸ்மார்க் கட வருவதற்கு முந்தி டவுனுல நாலு பிராந்திகட வச்சிருந்தேங்க காய்கறி மார்கட்டுல கந்துவட்டி உடறது யாரவது தகராறு பண்ணினா புடிச்சு உட்காரவச்சி பஞ்சாயத்து செய்றது அதுல நாலு காசு பாக்கறது அப்றோம் அடிதடின்னு கோதா செஞ்சி சம்பாதிக்கிறது இப்படி எல்லாத்லயும் நாம தனிகில்லாடி தாங்க நம்ம பெயரை கேட்டாலே அவனவனுக்கு சும்மா அல்லு உட்டுடும் அந்த அளவு நம்ம ராஜாங்கம் பேட்ட முழுவதும் தினசரி உண்டுங்க.

போன தேர்தல்ல கட்சி காரங்ககிட்ட ஆயிர ஓட்டுக்கு காசு கொடுத்தா ஆயிரத்தி ஐநூறு ஒட்டு போடுறோம்னு காசு வாங்கி சும்மா கள்ள ஓட்டா குத்தி போட்டதுல நாந்தாங்க முதலிடம் நம்ம அளவுக்கு கள்ள ஒட்டு போடுற ட்ரையினிங் யாருக்கும் கிடையாதுங்க. ஊருக்குள்ள எம்எல்எ வரார் எம்பி வரார் என்றால் நம்ம பசங்க தாங்க வசூல்பன்னி கொடி தோரணம் எல்லாம் கட்றது கடதெருவுல யாரவது ஒருத்தன் காசுதர மறுத்தா நம்ம பசங்க ஊடு கட்டிடுவாங்க கத கந்தலா போயிடும். மன்னாரு ஆளு காசு கேட்டால் கொடுத்தே தீரணும்னு ஒரு சட்டம் எங்க ஏரியாவுல யாரும் போடாமலே இருக்குதுங்க.

பஞ்சாயத்து தேர்தல் வந்தப்போம் நானும் ஒரு கை பாத்திறலாம் என்று எலக்ஷன்ல குதிச்செங்க பொட்டா பட்டி டவுசரும் முண்டா பனியனும் போட்டுகிட்டு ஊரு சுத்துன நானு மடிப்பு கலையாத வெள்ள வேட்டி சட்ட மாட்டிக்கிட்டு சும்மா ஒரு ரவுண்டு வந்தாலே தானா ஓட்டு உளுந்திடுங்க சாராயம் பவுடரு என்று கொடுத்தா ஓட்டு போடாம யாராவது இருப்பானா என்ன? இந்த மன்னாரு கவுன்சிலராகவும் இருந்தாச்சிங்க

இப்போ ஒரு சின்ன ஆசங்க அமைச்சர் பதவி முதல்வர் பதவி இப்படி எதுவும் வேண்டாங்க மன்னாரு பேர்ல கருணவச்சி ஜனாதிபதி பதவிய கொடுத்திங்கன்னா நம்ம பிரதமர் மாதிரி காலமுழுக்க உங்க காலடியிலேயே விழுந்து கிடப்பேங்க நா ஒன்னும் ஜனாதிபதியாகி சம்பாதிக்கணும்னு ஆசபடலீங்க சோக்கா கோட்சூட் போட்டுகிட்டு பாரின் போய்வரலாம் நகத்துல அழுக்கு படியாம ரிப்பன் கட்பண்ணலாம் அது என்னவோ ராஷ்ட்ரபதிபவன் என்று ஒன்னு இருக்காமே ஏகப்பட்ட ரூம்களும் வேலை ஆட்களும் இருப்பாங்களாமே வித விதமா சமையல் பண்ணி தருவாங்களாமே அங்க இருக்கணும் சொகுசா ஒரு ரவுண்டு அந்த மாளிகைய சுத்தி வரணும் அப்டின்னு ஒரு ஆசதாங்க நீங்க மனசு வச்சா நடக்காதது எதுவுமில்லைங்க.


என்ன ஜனாதிபதி ஆக்கினா பீடி பிடிக்கிறத வுட்டுட்டு சிகரெட் பிடிகீரணுங்க. கைலிய வழிச்சி தொடைகடியில சொருகாம பேன்ட் சட்ட போட்டு பழகிக்ரேனுங்க தலையில எண்ணெய் தேய்க்காம சீவி முடிக்காம இருக்கும் நம்ம சம்சாரத்த பியூட்டி பார்லர் அனுப்பி சோக்கா இருக்குமாறு பார்துக்றேணுங்க நீங்க மட்டும் அந்த பதவி கிடைக்க ஏற்பாடு பண்ணிடுங்க என் குடும்பமே உங்கள கையெடுத்து கும்பிடும் காலமுழுக்க அடிமையா இருக்குங்க சீக்கிரமா நல்ல பதிலா சொல்லுங்க அடுத்த ரயில பிடிச்சி டெல்லிக்கு வரேனுங்க

இப்படிக்கு                
உங்க வீட்டு பிள்ள
       
மன்னடி மன்னாரு

Contact Form

Name

Email *

Message *