( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

வாஸ்து இல்லாமல் வாழ முடியுமா...?     சிலர் வாஸ்துபடி கட்டிய வீடுகளில் வாழாவிட்டாலும் கூட நல்ல முறையில் வாழ்கிறார்கள் ஒரு வீடு மனிதனின் வாழ்வை நல்லதாகவோ கெட்டதாகவோ பாதிக்குமென்றால் இவர்கள் எப்படி சந்தோசமாக வாழ முடிகிறது?

மாசிலாமணி.நாகர்கோவில்

      லகம் முழுவதும் நல்ல அதிர்வுகளும் கெட்ட அதிர்வுகளும் சமமாக பரவி உள்ளது இந்த அதிர்வுகளை நாம் நேரடியாக உணராவிட்டாலும் கூட அந்த அதிர்வுகள் இருப்பது சர்வ நிச்சயம் சில நேரங்களில் மனிதனால் அதை உணரவும் முடிகிறது. அப்படி உணர்ந்ததை வெளியில் நிரூபிக்க அவன் மனசாட்சியை தவிர வேறு ஆதாரங்கள் இல்லை என்பதனால் அவைகள் வெறும் நம்பிக்கைகளாகவே இருந்து வருகிறது.

வீடுகள் என்பது பரந்த உலகத்தின் சிறிய வடிவம் உலகெங்கும் பரந்துள்ள அதிர்வலைகள் வீடுகளுக்குள்ளும் நிரம்பி இருக்கும் அதில் நல்ல அதிர்வுகளை மட்டுமே தக்க வைத்து கொள்ள உதவி செய்வது வாஸ்து சாஸ்திரம் எனலாம். நன்றாக படிக்கும் ஆர்வமுள்ள மாணவர்களிடத்தில் ஒரு மக்கு மாணவன் வந்து சேர்ந்து விட்டால் அவனும் ஓரளவு படிக்க துவங்கி விடுவான் என்பது போல ஜாதகப்படி மிக கெட்ட பலனையே அனுபவிக்கும் ஒருவன் சரியான வாஸ்து முறையில் கட்டப்பட்ட வீட்டில் குடியிருந்தால் கண்டிப்பாக படிப்படியான முன்னேற்றத்தை அடைந்தே தீர்வான்.

அதே போலவே நல்ல ஜாதக அமைப்பு இருக்கும் ஒருவன் வாஸ்து சாஸ்திர விரோதமாக கட்ட பட்ட வீடுகளில் வாழ்ந்தால் நிச்சயம் பாதிப்படைவான். அதாவது ஜாதக கிரகங்கள் அவனுக்கு நூறு பங்கு நன்மை செய்வதாக இருந்தால் அவன் சரியான வீட்டில் வாழா விட்டால் இருபது பங்கு நன்மை மட்டுமே பெற முடியும். தான் இழந்தது எண்பது பங்கு நன்மையை என்று அறியாத அவன் இருபது பங்கு நன்மையே தனக்கு விதிக்க பட்டது என்று தவறுதலாக நினைத்து திருப்தி அடைகிறான்.

அதனால் வாஸ்து தோஷம் இருக்கும் வீடுகளில் வாழ்பவர்கள் நன்றாக இருக்கிறார்கள் என்பது தவறு அவர்கள் இன்னும் அதிகபடியாக நன்றாக இருக்க வேண்டும் அதை அந்த வீடு தடுத்து கொண்டு நிற்கிறது என்பதே உண்மையாகும். அதே நேரம் ஒருவனுக்கு கெடுதலான கிரக பலன் நடக்கும் போது அவன் சரியான வீட்டில் வாழ்ந்தால் குறைவான துயரங்களே ஏற்படும் என்பது நிதர்சன உண்மையாகும்.
Next Post Next Post Home
 
Back to Top