( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

அம்மணம் அசிங்கமில்லை

ல சந்நியாசிகள் நிர்வாணமாக ஊர்வலம் போவது நமது மதத்தை பற்றி மற்றவர்கள் கேவலமாக கருதமாட்டார்களா? என்று பலர் நினைத்து வறுத்த படுகிறார்கள்

உடம்பில் துளி கூட துணியில்லாமல் இருப்பதில் ஒன்றும் சிரமம் இல்லை என்று நாம் நினைக்கிறோம்.  ஆனால் உண்மையில் ஆடையோடு இருப்பதை விட அம்மணமாக இருப்பதில் தான் மகா சிரமம் இருக்கிறது. 

மழை, குளிரை அம்மணம் தாங்காது என்பது வேறு விஷயம்.  ஆடை அணிகின்ற போது நமக்குள் அந்தரங்கமாக ஏற்படும் உணர்வுகளை மறைத்து கொள்ளலாம்.  


ஆடையில்லாத நிலையில் உணர்ச்சிகளை மறைப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது.  அவ்வளவு சுலபமாக எல்லோராலும் நிர்வாணமாகயிருக்க இயலாது. 

ஒரு குழந்தை நிர்வாணமாகயிருப்பது பற்றி வெட்கப்படுவதில்லை. 

அது எப்பொழுது மற்றவர்களை பார்த்து தனது நிர்வாணத்தை மறைக்க துவங்குகிறதோ அப்போதே அதன் மனதில் கள்ளம் கபடம் உருவாக துவங்கி விட்டது என பல மனோ தத்துவ நூல்கள் சொல்கின்றன.

  ஒரு சராசரி மனிதன் அம்மணமாக இருக்கிறான் என்றால் ஒன்று அவன் மனம் பேதலித்த நிலையில் இருக்க வேண்டும் அல்லது ஆண், பெண் பேதத்தை அழித்தவனாக இருக்க வேண்டும்.

 வாரனாசியில் பல நாகசாதுக்கள் நிர்வாணமாக ஊர்வலம் போவதை நாம் கேலி செய்கிறோம்.  அல்லது முகம் சுளிக்கிறோம்.  


ஆனால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமே கொட்டும் மழையிலும், உறைய வைக்கும் பனியிலும் நிர்வாணமாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்தால் அவர்களின் மகத்துவம் என்னவென்று புரியும்.

 ஜைன மதத்தை சார்ந்த பல துறவிகள் நிர்வாணமாக இருக்கிறார்கள்.  அதை எந்த ஜைன மதத்தவரும் அவமானமாக கருதுவதுயில்லை.

 ஏனென்றால் ஜைன மத தத்துவம் ஒவ்வொரு ஜைனனுக்கும் தெரியும்.

 ஆனால் இந்துக்களாகிய நாம் தான் நமது மதத்தின் தத்துவங்களின் ஒரு சிறு துளியை கூட அறியாமல் வீண் ஜம்பம் பேசிக் கொண்டுயிருக்கிறோம்.

  நம் கருத்துக்களை நாம் உணர துவங்கிவிட்டால் உண்மைகள் தெரியும். அவமானம் தெரியாது 
+ comments + 5 comments

Anonymous
12:07

The saints who had attained Avadhootha state cannot naturally wear any clothing. Such sages, like Sadashiva Brahmam stayed away from populated towns and villages.However, even saints who attained such a state,if were to live amidst people wore atleast a Kowpeena. For example Sri Ramana Maharishi at the request of the people of Arunachal wore a kowpeena. Naga Sadhoos seldom come to towns and cities except on Kumbh etc. What is happening in Jains is not correct because all of them had not attained this avadhootha state. They should atleast wear a kowpeena. It is surprising Guruji is seconding this. Sridhar Saptharishi

நல்ல விளக்கம்!

Respected Swamiji, My letter against your above article is deleted. Please publish my letter.

arumaiyana vilakkam...

arumaiyana vilakkam


Next Post Next Post Home
 
Back to Top