Store
  Store
  Store
  Store
  Store
  Store

இருதார ஜாதகம் எப்படி இருக்கும் ?



  •   திப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு வணக்கம் எனக்கு முதல் திருமணம் சந்தர்ப்ப வசத்தால் விவாகரத்தில் முடிந்துவிட்டது எனது திருமணம் ரத்தாகி மூன்றாண்டுகள் முடிந்து விட்டன முதல் திருமணத்தில் ஏற்பட்ட மனவருத்தமும் மன கஷ்டமும் இரண்டாவது திருமணத்தை நினைத்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது எனது குடும்பத்தில் நான் ஒரே ஆண்மகன் என்பதனால் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள எனது பெற்றோர்கள் கட்டாயப் படுத்துகிறார்கள் இந்த நிலையில் அவர்கள் சொல்படி திருமணம் செய்து கொள்வதா? அல்லது இப்படியே வாழ்நாள் முழுவதும் இருந்து விடுவதா? என்று குழப்பமாக இருக்கிறது எனக்கு நீங்கள் தெளிவான ஒரு வழியை காட்டும்படி பணிவாக வேண்டுகிறேன்.

மணிவண்ணன்,குளைச்சல்



   ருவனுக்கு ஒருத்தி என்பது தான் உலகம் மதிக்கின்ற பாரத பண்பாடாகும் பல ஐரோப்பிய நாடுகளில் இந்த பழக்கம் நடைமுறையில் இல்லை என்றாலும் அவர்கள் இந்திய இல்லற மரபை இன்று வெகுவாக பாராட்டுகிறார்கள் கடைபிடிக்கவும் விரும்புகிறார்கள் ஒருவனோடு ஒருத்தி இல்லறம் நடத்துவது என்பது பண்பாடு மிக்க செயல் மட்டுமல்ல சமூதாய அமைதிக்கும் கட்டுகோப்புக்கும் அதுவே மூல காரணமாக அமைகிறது மேலும் வாழ்க்கை நடத்துவதற்கு உடல் என்பது மிகவும் அவசியம் என்பதனால் ஏகதார முறை ஆரோக்கியத்தின் திறவுகோலாகவும் இருக்கிறது 

பல மனைவிகளை மணப்பது ஒரு பெண் பல ஆடவர்களோடு குடும்பம் நடத்துவது ஆதிகாலத்தில் நடைமுறையில் இருந்தாலும் அது அப்போதும் சரி இப்போதும் சரி ஒரு நாகரீக பண்பாடாக மக்களால் ஏற்றுக்கொள்ள பட்டதே அல்ல தர்ம சாஸ்திரங்களும் நீதி நூல்களும் ஒரு தார மணத்தை தான் சிலாகித்து பேசுகின்றன எனவே தர்ம வழியில் நடக்கும் எவரும் மறு விவாகத்தை பற்றி யோசிப்பதுமில்லை அதை வரவேற்பதுமில்லை 

ஆனால் துரதிஷ்ட வசமாக சிலரது வாழ்க்கையில் மறுவிவாகம் என்பது கட்டாயமாகி விடுகிறது முன்பு ஆண்தன்மை அற்றவர் புத்தி பேதலித்தவர் குடிகாரர் கொடூரமானவர் போன்றவர்களிடம் இருந்து தான் விவாக விடுதலை பெற பெண்கள் விரும்புவார்கள் அத்தகைய விருப்பத்தை தடை செய்வதை மனித நேயமிக்க பலரும் எதிர்த்தார்கள் ஆனால் இன்று நிலைமை தலைகீழாக இருக்கிறது அற்பமான விஷயங்களுக்காக விவாகரத்து பெறுவது அதிகரித்து கொண்டே வருகிறது நிலைமை இப்படியே தொடர்ந்து கொண்டே போனால் மாட்சிமை மிக்க இந்திய சமூகம் பெரும் சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் 

கணவன் மனைவிக்கிடையில் உருவாகும் சிற்சில சண்டை சச்சரவுகள் நீதிமன்றம் வரையில் சென்றால் அவர்களின் குழந்தைகளின் நிலை பரிதாபகரமாகிவிடும் என்னை பொறுத்தவரை திருமணம் முடிந்து குழந்தை பிறக்கும் வரை தான் ஒருவர் கணவன் மனைவியாக வாழவேண்டும் குழந்தை பிறந்த பிறகு அவர்கள் தாங்கள் கணவன் மனைவி என்பதை மறந்து பெற்றோர்கள் என்ற நிலைக்கு உயரவேண்ட்ம் அப்படி உயர்ந்தால் அவர்கள் முன்னால் குழந்தைகளின் எதிர்காலம் நிற்குமே தவிர அற்பமான மனசஞ்சலங்கள் எழுந்து கோரத்தாண்டவம் ஆடாது விவாகரத்து வழக்குகளும் குறைந்து விடும்

இவை பொதுவான விஷயம் இனி உங்கள் பிரச்சனைக்கு வருவோம் ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் அமைவது என்பது ஜாதக ரீதியில் ஒரு சிலர்குக்கு தான் எல்லா ஜாதகமும் அப்படி அமையாது அந்த வகையில் பார்க்கும் போது உங்கள் ஜாதகத்தில் இருதார அமைப்பு இருக்கிறது 

அகத்தியர் மற்றும் புலிபாணி சித்தரின் ஜோதிட நெறிப்படி ஒன்றிற்கு மேற்பட்ட பெண் கிரகங்கள் குருவை பார்த்தால் இருதார அமைப்பு வரும் என்று சொல்லப்படுகிறது அதன் படி குரு இருக்கும் ராசிக்கு ஒன்று ஐந்து ஒன்பது மூன்று ஏழு பதினென்று இரண்டு பனிரெண்டு ஆகிய இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கிரகங்கள் இருக்க வேண்டும் சந்திரன் சுக்கிரன் புதன் ஆகிய கிரகங்கள் பெண் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது இந்த மாதிரி இடங்களில்; சந்திரன் இருந்தால் இரண்டாவது மனைவி வயதில் மூத்தவலாகவும் சுக்கிரன் இருந்தால் சமவயது பெண்ணாகவும் புதன் இருந்தால் மிகவும் இளவயது பெண்ணாகவும் அமையுமென்று பராசர முனிவரின் ஜாதக சூத்தகம் சொல்கிறது எனவே நீங்கள் இரண்டாவது திருமணம் பயப்படாமல் செய்யலாம் கடவுள் நல்லது செய்வார். 

Contact Form

Name

Email *

Message *