( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

சித்திரை நட்சத்திரம் அப்பனுக்கு ஆகாதா ?


    ன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம் எனக்கு இரண்டு பெண்குழந்தைகளுக்கு பிறகு வெகுநாட்கள் கழித்து ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது அந்த குழந்தை சித்திரை நட்சத்திரத்தில் பிறந்திருப்பதால் தகப்பனுக்கு ஆகாது எதாவது கெடுதியை நிச்சயம் செய்யும் என்று பல ஜோதிட ஆர்வலர்கள் சொல்கிறார்கள். இது உண்மையா? பொய்யா என்று எனக்கு தெரியவில்லை என் மகன் ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன் தயவு செய்து ஜாதகத்தை பார்த்து என் பயத்தையும் சந்தேகத்தையும் தெளிவிக்க வேண்டுகிறேன்.

துரைராஜ்.விருதுநகர்

    குழந்தைகள் பிறந்தாலே சந்தோசம் பிறந்துவிடும் இது பலருக்கு புரிவதில்லை தெரிவதில்லை பெண்குழந்தை பிறந்தால் எதோ நடக்க கூடாதது நடந்து விட்டதாக வருத்தபடுகிறார்கள் அதுவே ஆண்குழந்தையாக இருந்தால் நிலமை வேறாக இருக்கிறது. நண்பர்களுக்கு விருந்து கொடுப்பதும் ஆடி பாடுவதும் வழக்கமாக இருக்கிறது. இவர்களை மூடத்தனம் மிகுந்தவர்கள் என்று சொல்வதை தவிர வேறு வழியில்லை

ஆணோ பெண்ணோ பிறந்த குழந்தை ஆரோக்கியமோடு இருக்க வேண்டும் அறிவோடு வளர வேண்டும் அது தான் முக்கியம் பெண்குழந்தை பிறந்தால் செலவு ஆண் குழந்தை பிறந்தால் வரவு என்பதெல்லாம் அந்த காலம் இப்போது இரண்டு குழந்தைகளுக்குமே கணக்கு போட்டு பார்த்தால் ஒரே செலவு தான் வருகிறது படிப்பு மற்றும் வாழ்க்கையை உறுதிபடுத்தி கொடுப்பது போன்ற அனைத்து விஷயங்களுக்கும் பெற்றோர்களின் பிரயத்தனம் ஒன்றாகவே இருக்கிறது.

இந்த நிலையில் இரண்டு பெண் குழந்தைகளை பெற்று சந்தோசமாக வளர்க்கும் உங்களை வாழ்த்த வேண்டும். மூன்றவதாக பிறந்த உங்கள் மகன் மிகவும் அதிஷ்டகாரன் இரண்டு அக்காமார்களின் அன்பும் அரவணைப்பும் அவனுக்கே கிடைக்குமே அதை சொல்கிறேன். இப்போது உங்கள் மகன் ஜாதகத்திற்கு வருவோம்.

பொதுவாக சித்திரை நட்சத்திரம் ஒன்று இரண்டு மூன்றாம் பாதங்களில் குழந்தை பிறந்தால் தாய்தகப்பனுக்கு கஷ்டமென்று சொல்வார்களே தவிர தகப்பனுக்கு மட்டுமே கஷ்டமென்று சொல்ல மாட்டார்கள் உங்கள்மகன் மேற்குறிப்பிட்ட நட்சத்திர பாதங்களில் பிறந்துள்ளான் இது உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் சில சங்கடங்களை ஏற்படுத்தும் என்று உறுதியாக சொல்லலாம்.

ஆனால் அவற்றிலிருந்து விடுபட மிகசுலபமான பரிகாரங்கள் இருக்கிறது. உங்கள் மகன் பிறந்தது வளர்பிறை காலம் என்பதனால் அந்த காலத்தில் வரும் சித்திரை நட்சத்திர நாளில் உங்களால் முடிந்தளவு வறிய மனிதர்களுக்கு ஆடை தானம் வழங்குங்கள் அதே நாளில் உங்கள் வீட்டில் நவக்ரக ஹோமம் செய்து ஹோமத்தின் முடிவில் ஒரு அகண்ட பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் வைத்து அதில் உங்கள் மகன் முகம் தெரியும்படி அதை அவன் பார்க்கும்படி செய்யுங்கள் தோஷ நிவர்த்தி நிச்சயம் உண்டு மேலும் இந்த நட்சத்திர தோஷம் என்பது குழந்தை பிறந்து ஐந்து வயது வரை தான் உண்டு அதன் பிறகு அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.
Next Post Next Post Home
 
Back to Top