Store
  Store
  Store
  Store
  Store
  Store

இளம் வயதில் தாலி பறிபோகுமா...?


    திப்பும் மரியாதையும் கொண்ட குருஜி அவர்களுக்கு கோவையிலிருந்து சாதானா எழுதும் பணிவான கடிதம் ஐயா என்னோடு உடன்பிறந்த சகோதரிகள் நான்கு பேர்கள் அதில் நான்தான் மூத்தவள் எனக்கு முப்பத்தி மூன்று வயதாகிறது இன்னும் திருமணம் நடக்கவில்லை பார்ப்பதற்கு நான் ஒன்றும் விகாரமானவள் அல்ல ஓரளவு படித்தும் நல்ல வேலையிலும் இருக்கிறேன் எனது தந்தையார் ஜவுளிக்கடை நடத்துகிறார் பெரிய அளவில் பொருளாதார வளம் இல்லாவிட்டாலும் நாங்கள் வறுமையில் இல்லை ஆனாலும் என்னை பார்க்க வருகின்ற வரன்கள் அனைத்துமே வீட்டுக்கு போய் சொல்கிறோம் போன் செய்கிறோம் என்று போகிறார்களே தவிர யாரும் நல்ல பதிலை தரவில்லை

இத்தனைக்கும் என் ஜாதகத்தில் பெரிய அளவில் தோஷங்கள் கிடையாது இதை பல ஜோதிடர்களும் சொல்லி விட்டார்கள் இருந்தாலும் யார் என்ன பரிகாரம் சொன்னாலும் அதையும் தட்டாமல் செய்கிறோம் அதிஷ்டகல் அணிய சொன்னார்கள் செய்தேன் வாஸ்துபடி வீட்டில் கோளாறு வீட்டை மாற்றுங்கள் என்றார்கள் சொந்த வீட்டை விட்டு விட்டு வாடகை வீட்டில் தான் குடியிருக்கிறோம் ஆனாலும் திருமணம் என்பது என்னை பொறுத்தவரை காணல் நீராக தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது.

இப்போது என் மனம் மிகவும் வெறுத்து விட்டது பெண் பார்க்கிறேன் பேர்வழி என்று வருகிறவர்கள் முன்னால் அலங்காரம் செய்து கொண்டு நிற்பதும் தேவையே இல்லாமல் தகுதி இல்லாத அவர்கள் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்வதும் உணவுகள் பரிமாறி செயற்கையாக சிரித்து உபசரிப்பதும் சலிப்பாக இருக்கிறது. திருமணமே இல்லாமல் வாழ்நாள் முழுவதும் இருந்து விட்டு போகிறேன் என்று சொன்னால் அம்மாவும் அப்பாவும் அழுகிறார்கள். அவர்கள் சந்தோசத்திற்க்காவது திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன்.

ஒவ்வொரு வருடமும் என் வயது ஏற ஏற எனக்கு கீழே பிறந்திருக்கும் சகோதரிகளை நினைத்து கலக்கமாக இருக்கிறது. ஆண் வாரிசு இல்லாத எனது குடும்பம் சாபம் பெற்ற குடும்பம் போல ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. நேரில் பார்க்கும் போது திருமணம் செய்து விடலாம் என்று பேசுகிற பிள்ளை வீட்டார்கள் என் ஜாதகத்தை பார்த்தவுடன் பதிலே பேசாமல் போய்விடுவது ஏன் என்று எங்களுக்கு தெரியவில்லை ஜோதிடர்கள் எந்த தோஷமும் இல்லை என்கிறார்கள் பிறகு எதற்க்காக என் ஜாதகத்தை யாரும் ஏற்றுகொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பது புரியாத புதிராக இருக்கிறது. தயவு செய்து குருஜி அவர்கள் என்னை உங்கள் மகளாக நினைத்து சரியான பதிலை தருமாறு அன்போடு வேண்டுகிறேன்.

எனக்கு திருமணம் முடியுமா ? அல்லது கன்னியாகவே வாழ்ந்து விடுவேனா? திருமணம் எனக்கு நடக்காது என்றால் என் தங்கைகளுக்காவது திருமணத்தை நடத்தலாமா? எல்லோரும் பார்த்து பயப்படும் வண்ணம் என் ஜாதாத்தில் என்னத்தான் குறை இருக்கிறது எதுவாக இருந்தாலும் மறைக்காமல் விளக்கமாக சொல்லுங்கள் விடை தெரியாமல் தவிக்கும் இந்த அபலை பெண்ணுக்கு தெளிவான வழியை காட்டுங்கள் உங்கள் பதிலுக்காக காத்திருப்பேன்.

இப்படிக்கு
சாதனா,
கோவை



     விளையாட வேண்டிய வயதில் விளையாட வேண்டும். காதலிக்க வேண்டிய வயதில் காதலிக்க வேண்டும் திருமண வயதில் திருமணம் நடக்க வேண்டும் அப்படி இல்லாமல் காலதாமதமாக எல்லாமே நடந்தால் மனித வாழ்நாள் சலிப்பு தட்டியதாக ஆகிவிடும். அதுவும் நம் ஊர் இருக்கிறதே மிகவும் விசித்திரமான பழக்க வழக்கங்களை உருவாக்கி இது இது இப்படி இல்லை என்றால் அது சரியில்லை என்று மற்றவர்களின் மன உணர்வுகளை புரிந்து கொள்ளாமலே முடிவு கட்டி விடும்.

உனக்கு கல்யாணம் ஆகவில்லையா? உன் ஜாதகத்தில் கண்டிப்பாக தோஷம் இருக்கும் அல்லது உனது முன்னோர்கள் பெரியதாக எதாவது பாவங்கள் செய்து சாபம் பெற்றிருக்க வேண்டும் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள் காற்றுக்கு வேலி போட முடியாது கடலுக்கு மூடி போட முடியாது என்று கண்ணதாசன் சொல்வது போல மனிதர்களின் கற்பனைக்கும் எடுத்தேன் கவுத்தேன் என்று பேசுவதற்கும் தடை போட முடியாது. இந்த உலகம் அப்படி தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் மூலையில் உட்கார்ந்து ஓ வென்று ஊளையிட்டு அழும் மற்றவர்களுக்கு வந்தால் கைகொட்டி சிரிக்கும்

இந்த சகோதரியின் ஜாதகத்தை ஒருமுறைக்கு இருமுறை நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்து விட்டேன் தோஷங்கள் எதுவும் கிடையாது என்றாலும் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்ற ஐந்தாமிடம் சென்ற ஜென்மத்தின் கர்மாவின் படி திருமணத்திற்க்காக இந்த பெண் ஏங்க வேண்டும் என்ற விதி மட்டுமே இருக்கிறதே தவிர திருமணமே ஆகாது திருமணத்திற்கு இந்த பெண்ணும் ஆகமாட்டாள் என்று எதையும் காண முடியவில்லை பிறகு எதற்க்காக இத்தனை வயது வரை இவருக்கு திருமணம் நடக்கவில்லை என்று சற்று நிதானமாக ஆராய வேண்டும் அப்படி செய்யும் போது இரண்டு காரணங்கள் தெளிவாக தெரிகிறது.

ஒன்று திருமணத்திற்க்காக ஏங்க வேண்டும் ஏங்கி ஏங்கி மிகவும் வருத்தப்பட்டு தாமதமாக தாம்பத்திய வாழ்வில் ஈடுபட வேண்டும் என்ற விதி இரண்டாவது இந்த பெண் ஜனமான நட்சத்திரம் நமது நாட்டை பொறுத்தவரை ஆண்மூலம் அரசாளும் பெண்மூலம் நிர்முலம் என்றும் அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தால் தவிட்டு பானை கூட தங்கமாகும் என்றும் பரணியில் பிறந்தவன் தாரணி ஆள்வான் என்றும் ஏடாகூடமான ஜோதிட நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் பரவி கிடக்கிறது. இவைகள் எதற்காவது ஜோதிட ரீதியில் ஆதாரங்கள் உண்டா என்றால் கண்டிப்பாக இல்லை.

அந்த வகையில் இந்த பெண் உத்திர நட்சத்திரத்தில் பிறந்து இருக்கிறாள். உத்திரத்து தாலி உறியில் என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதாவது உத்திர நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணுக்கு கணவன் மிக இளம் வயதிலேயே இறந்து விடுவானாம் அந்த அளவு தாலி பாக்கியம் இல்லாத பெண்ணாம் இவள் இப்படி ஒரு நம்பிக்கை தமிழக மக்கள் மத்தியில் இருக்கிறது குறிப்பாக கொங்கு மண்டல மக்கள் இந்த நம்பிக்கைக்கு அடிமைகளாகவே இருக்கீறார்கள் இந்த நம்பிக்கை சரிதானா? இதற்கு ஆதாரம் எதுவும் இருக்கிறதா என்று யாரும் சிந்தித்து கூட பார்ப்பது இல்லை அவர்களாகவே ஒரு முடிவிற்கு வந்து விடுகிறார்கள்.

உத்திர நட்சத்திர நம்பிக்கையால் திருமணம் தள்ளி போய் அவதி படுவது பெண்கள் மட்டுமல்ல சில ஆண்களும் அந்த நம்பிக்கையால் நசுக்கப்பட்டு கிடைக்கிறார்கள் உண்மையில் உத்திர நட்சத்திரத்திற்கும் மனிதனது ஆயுள் பாவத்திற்கும் தொடர்பே கிடையாது. அப்படி இருப்பதாக சொல்வது ஆதாரமற்ற பொய்யாகும் உண்மையில் உத்திர நட்சத்திரம் பல சிறப்புகளை கொண்டதாகும் உலகத்தை ஈன்ற அம்மையப்பன் திருமணம் நடந்தது உத்திர நட்சத்திரத்தில் தான் அவர்களின் தெய்வ குமாரனான முருகனுக்கும் வள்ளிக்கும் திருமணம் நடந்ததும் இந்த நட்சத்திரம் தான் கலியுக வரதன் என்று பக்தர்களால் வணங்கப்படும் ஐயப்பன் அவதாரம் செய்ததும் உத்திர நட்சத்திரமே ஆகும்

திருஞான சம்மந்தரின் கோளாறு பதிகத்தை நன்றாக படித்து பாருங்கள் அதில் இத்தகைய நம்பிக்கை எவ்வளவு பெரிய தவறு என்பதை அவர் சொல்லியிருப்பார். அவரை விட இன்றைய ஜோதிடர்கள் யாரும் புத்திசாலிகள் இல்லை சாதனா என்ற இந்த சகோதரி தனது பூர்வ ஜென்ம கர்மாவின் தாக்கம் குறைய சிரமம் பார்க்காமல் ஒருமுறை ராமேஸ்வரம் சென்று ராமலிங்க பெருமானை தரிசனம் செய்து ஐந்து வயது முதிர்ந்த ஏழை பெண்களுக்கு வஸ்திர தானம் செய்து அவர்களிடத்தில் ஆசீர்வாதம் பெற்று வாருங்கள் உங்கள் திருமணம் இனிதே நடக்கும் ஆயிரம் பரிகாரம் செய்திருந்தாலும் நான் சொல்வதையும் நம்பிக்கையோடு செய்யுங்கள் நல்லது நல்லதாகவே நலமோடு நடக்கும் அன்னை மகாலட்சுமி உங்களுக்கு அருளாசி தருவாள்.



Contact Form

Name

Email *

Message *