( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

நல்ல குருவை நாம் அடைய...?


  வ்வொரு மனிதனுக்கும் ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் அடைய நல்ல குரு தேவை என்று சொல்கிறார்கள் நல்ல குருவை கண்டுபிடிப்பது எப்படி?

செந்தில் முருகன்
திருசெங்கோடு


  பொதுவாக நாம் நமது சந்தேகங்களுக்கு நமது கேள்விகளுக்கு பதிசொல்பவர்களை விளக்கம் கொடுப்பவர்களை குரு என்று நினைக்கிறோம் உண்மையில் பதில் சொல்பவர் குரு அல்ல யாரை பார்த்தவுடன் நமக்கு சந்தேகமே எழாமல் கேள்விகள் பிறக்காமல் பெறவேண்டியது அனைத்தையும் பெற்றுவிட்டதாக திருப்தியும் நிறைவும் ஏற்படுகிறதோ எவர் முன்னால் நமது ஆத்மா அமைதி அடைகிறதோ அவரே நமது குரு.

இத்தகைய குருவை நாம் தேடிபோகவேண்டிய அவசியமில்லை அவரும் நம்மை தேடி வரவேண்டிய தேவையில்லை காரணம் அவர்தேடினால் கிடைக்க மாட்டார் தானாகவும் கண்ணுக்கு அகபட்டமாட்டார் கடவுளால் நமக்கு கிடைக்கும் அவர் தனது ஞானத்தாலும் அருளாலும் அன்பாலும் நம்மை முழுமையாக அரவணைத்து கொள்வார்.

கடவுளால் அனுப்பபட்ட அவரை கண்டுபிடிப்பது கடினமல்ல மிக சுலபம் கண்களையும் காதுகளையும் விசாலமாக திறந்து வையுங்கள் பாலை நிரப்புவதற்கு பானை எப்படி எப்போதுமே வாய்திறந்து கொண்டு இருக்குமோ அப்படியே உங்கள் மனமென்னும் பானையை திறந்து வையுங்கள் எவர் முன்னால் சரணடைய வேண்டுமென்ற கையெடுத்து கும்பிட வேண்டுமென்ற எண்ணம் தானாக உதிக்கிறதோ அப்போதே அவரை நீங்கள் அடைந்துவிடுவீர்கள்.
+ comments + 6 comments

நல்ல சீடனாக இருந்தால்,நல்ல குரு
தன்னால் கிடைப்பார்.

ombhogar.blogspot.com

நல்ல குருவை அடைய கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய பண்புகள்...

நண்பர்களே எனக்கு தெரிந்த சில.
01 . சகிப்புத்தன்மை.
02 . மௌனம்.
03 . மன அமைதி.
இவை மூன்றும் எவனொருவன் பெற்றிருக்கிறானோ அவன் குருவை தேடி போக வேண்டியதில்லை குருவே அவனை தேடி வருவார் இதுவே பிரபஞ்ச உண்மை.

கவி.சுந்தர்....மனநூல் ஆய்வாளர்..
எண்ணம் போல் வாழ்க.

Anonymous
17:05

ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் அடைய குருவின் தயவு நமக்கு தேவை இல்லை. ஒழுக்கமாகவும், உயர்ந்த எண்ணங்களோடும், நம்மை நம்பியவர்களுக்கு உண்மையாகவும் இருந்தோம் என்றாலே ஆன்மீக வாழ்விற்கான பாதையானது தானாகவே நமக்கு தெரிய ஆரம்பித்து விடும். கவி சுந்தர் அவர்கள் கூறுவது போல் குருவை தேடி நீங்கள் செல்ல வேண்டியது இல்லை, உங்களுக்கு தெரிய வேண்டிய கருத்து குருவின் மூலமாகத்தான் கிடைக்கும் என்று இல்லை யாரிடம் இருந்தாவது அல்லது எதில் இருந்தாவது (கணினி, புத்தகம்) கிடைக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக கிடைத்தே தீரும் அது நீங்கள் முழுமையாக ஆன்மீகத்தை நம்புவதை பொறுத்து.

இங்கே வலைத்தளத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியவை.ஒருவரின் ஆன்மீக முன்னேற்றத்தின் பொருட்டு அவர் குருவை அடையும் காலம் வேறுபடுகிறது

நல்லதோர் பதிவு. உண்மைச் செய்தி

இறைவனே நமக்கு குருவாக வருவான் என்பதை நம்புங்கள். அவன் உங்களை வந்தடைய என்ன தேவையோ அதை மாத்திரம் செய்யுங்கள். ஒவ்வொரு வினாடியும் அவனையே நினையுங்கள். குருவாய் வருவான். அருளும் புரிவான். அனுபவம் கிடைக்கும். காத்திருங்கள்.


Next Post Next Post Home
 
Back to Top