Store
  Store
  Store
  Store
  Store
  Store

கம்பன் உருவாக்கிய கம்யூனிசம்


     ரு விஷயத்தை பற்றி முழுமையாக தெரிந்த பின்னரே அதை ஆதரிப்பதா? எதிர்பதா என்று முடிவு செய்ய வேண்டும். ஒன்றுமே தெரியாமல் ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அறிவுடைமை ஆகாது என்று குருஜி அடிக்கடி சொல்வார் பொதுவுடைமை என்பது எங்களை பொருத்தமட்டில் ஒரு அரசியல் கட்சியின் கொள்கை சிவப்பு துன்பு போட்டு அடிக்கொரு தடவை போராட்டம் மறியல் வேலைநிறுத்தம் என்று புறப்பட்டு விட்ட தொழிலாளர்களின் கோட்பாடு அது பசியால் வருந்துபவர்களின் கஷ்டத்தை பற்றி அவர்கள் பேசுவதனால் அது நல்ல கொள்கையாகத்தான் இருக்கும் என்பது எங்களை போன்ற இளைஞர்களின் நம்பிக்கை 

ஆனால் அது சரியானதா? நடைமுறைக்கு சாத்தியமானதா? என்பதை பற்றி அதிகம் தெரியாது. காரணம் பொதுவுடைமை சித்தாந்தத்தின் அடிப்படை கருத்துக்கள் எது? அதன் தாத்பரியம் என்னவென்பது அறியாத காரணமே ஆகும். ஆனால் குருஜி எங்களை போல அல்ல தனது ஆரம்பகால கட்டங்களில் மிக தீவிரமான பொதுவுடைமை வாதியாக இருந்து அதன் பிறகு அந்த கொள்கை நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதை உணர்ந்து அதிலிருந்து வெளிவந்தவர். எனவே அவரிடம் பொதுவுடைமை பற்றிய முழுமையான அறிவை பெற்ற பிறகே பொதுவுடைமையால் நன்மை ஏற்படுமா? தீமை ஏற்படுமா? என்ற முடிவிற்கு நாங்கள் வர முடியும். 


பல பொதுவுடைமை நூல்கள் காரல்மார்க்ஸ் புதிதாக உலகத்திற்கு தந்த அரசியல் சித்தாந்தமே பொதுவுடைமை என்று கூறுகின்றன. இது எந்த அளவு உண்மை இதை நிஜமாகவே கண்டுபிடித்தது மார்க்ஸ்தானா அல்லது அவருக்கு முன்பே அந்த கொள்கையை பற்றி வேறு யாரவது சொல்லியிருக்கிறார்களா என்ற ஒரு கேள்வியை குருஜியின் முன்னால் வைத்தோம் அதற்கு அவர் ஒரு பொருள் புதியதாக உற்பத்தி செய்யபடுகிறது என்றால் அதன் பெயர் கண்டுபிடிப்பு அல்ல படைப்பு ஆகும். படைப்பு என்பது இல்லாத ஒன்றை உருவாக்குவது. கண்டுபிடிப்பு இருப்பதை தேடி கண்டறிந்து உலகாத்திற்கு காட்டுவது. பொதுவுடைமை கொள்கையும் காரல்மார்க்ஸால் கண்டுபிடிக்க பட்டது என்று சொல்கிறார்களே தவிர அவரால் உருவாக்கப்பட்டது படைக்கப்பட்டது என்று யாரும் கூறவில்லை ஏன் அவரே கூட அப்படி சொல்லவில்லை ஆனால் சில பொதுவுடைமை விசுவாசிகள் காரல்மார்க்ஸை அப்படி சொல்கிறார்கள். அது தவறு. 

ராமாயணம் எழுதிய நமது கம்பன் கூட அயோத்தி நகரை வர்ணனை செய்யும் போது அயோத்தி நாட்டில் வீடுகளுக்கு கதவுகள் இல்லை காரணம் அங்கே திருட்டு இல்லை சிறைச்சாலை என்பதே அயோத்தியில் கிடையாது காரணம் அங்கே குற்றவாளிகள் இல்லை. அதே போல தானம் கொடுப்பவர்கள் எவரும் அந்நாட்டில் கிடையாது காரணம் அங்கே தானம் பெற யாரும் இல்லை என்று வர்ணிக்கிறார். யாசகம் பெறுவதற்கு யாருமே இல்லை எல்லோருமே நிறைவான செல்வம் பெற்றவர்களாக இருந்தார்கள் என்று கம்பன் சொல்வது ஒருவித பொதுவுடைமை சித்தாந்தமே ஆகும். எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்று ஆசைபடும் நல்லவர்கள் உலக முழுவதுமே எந்த காலத்திலும் இருந்தார்கள். அதனால் பொதுவுடைமை கொள்கை என்பது ஒரு தனிமனிதனின் கண்டுபிடிப்பு என்று சொல்லிவிட முடியாது. வேண்டுமானால் அந்த கொள்கைக்கு தனிவொரு அழகை தனிவொரு மெருகை கொடுத்தவர் காரல்மார்க்ஸ் என்று சொல்லலாம். என்று குருஜி எங்களது முதல் கேள்விக்கு தெளிவான பதிலை தந்தார். அதன் பிறகு அவர் எங்களோடு பேசிய கருத்துக்களை இனி விரிவாகவே பார்ப்போம்.


ஜனநாயகம் என்பது மிகசிறந்த அரசியல் தத்துவம் அதை நடைமுறை படுத்துவதில் குழப்பங்களும் குளறுபடிகளும் சிக்கல்களும் இருக்கலாமே தவிர ஆனாலும் மனிதன் மனிதனாக வாழ்வதற்கு அந்த தத்துவத்தை விட்டால் வேறு கதி கிடையாது. ஜனநாயகம் மட்டுமே சிறந்தது என்று ஏன் நான் கருதுகிறேன் என்றால் மனிதன் ஆதிகாலம் தொட்டே ஜனநாயகத்தை தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தி வருகிறான். மன்னர்கள் நாடாண்ட போதும் மக்கள் மத்தியில் ஜனநாயகம் உயிரோடு ஆரோக்கியமாக நடைமுறையில் இருந்தது. இது உலகம் முழுவதும் வியாபித்திருந்த பொது பண்பாகும். அவ்வப்போது ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கபட்டாலும் உலக சரித்திரத்தில் ஜனநாயகமே மீண்டும் மீண்டும் வெற்றிவாகை சூடியிருக்கிறது. அதற்கு எதிரான அனைத்து தத்துவங்களும் சிறிதுகாலம் குதித்து கோலாட்டம் போட்டாலும் கடேசியில் அவைகள் மண்ணை கவ்வியே மறைந்து போயிருக்கிறது உலக சரித்திரத்தை அறிந்தவர்கள் எவரும் இதை மறுக்க மாட்டார்கள். 

ஆனாலும் உலக முழுவதும் ஜனநாயகத்திற்கு பலகாலங்களில் பல நெருக்கடிகள் ஏற்பட்டு வந்தன எந்த நெருக்கடி வந்தாலும் இங்கிலாந்திலும், பிரான்சு தேசத்திலும் ஜனநாயகம் என்பது பல எதிர்ப்புகளை மீறி நல்ல முறையில் வளர்ந்து வந்தது. மக்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் பொருளாதார வசதியும் நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் இராணுவ வலிமையையும் ஜனநாயக ஆட்சி முறையில் உறுதியான வளர்ச்சியை கொடுத்ததால் அனைத்து தரப்பு மக்களும் ஜனநாயகத்தை ஆதரித்தே இருந்தார்கள். ஆனால் உலக ஜனநாயக வரலாற்று பாதையில் ஜெர்மன் நாடு வேறுவிதமான சித்தாந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து ஜனநாயக செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையை போட்டு வந்தது. 


ஜெர்மன் நாட்டில் ஆட்சி என்பது நிலவுடமையாளர்களின் கைகளிலும் பணக்காரர்களின் கட்டுபாட்டிலுமே இருந்தது. இதனால் சுதந்திரம் நாடாளுமன்ற விவாதம் ஜனநாயகம் போன்றவைகளை ஜெர்மன் தலைவர்கள் கசப்பான வேம்பை ஒத்துக்குவது போலவே ஒதுக்கினார்கள். இன்னும் சொல்ல போனால் மக்களாட்சி முறையை தேசியத்தின் பகமையாகவே அவர்கள் கருதினார்கள் என்று சொல்ல வேண்டும். தங்களது சர்வதிகார ஆட்சி முறையை நிலைநிறுத்தி கொள்ள மிக தீவிரமான தேசிய வாதம் என்ற மாய வலையை விரித்து அதில் மக்களை சுலபமாக சிக்க வைத்து அடிமை படுத்தியே ஜெர்மானிய அதிகாரபீடம் கோலோச்சியது. 

ஐரோப்பா கண்டத்தில் கடவுளை வணங்காதே கடவுளை நினைக்காதே நானே கண்ணுக்கு நேராக தெரிகின்ற கடவுள் நானே சர்வ வல்லமை படைத்த கடவுள் என்னையே வணங்கு என்று ஆணவம் பேசிய இரணியனை போல் ஜெர்மன் நாடு ஜனநாயகத்தை தனது காலடியில் போட்டு கசக்குவதில் முனைப்பு காட்டி முன்னுக்கு நின்றது. அதிகாரம் செய்வதற்கு ஒருசிலரே போதும் அவர்களுக்கு அடிபணிந்து போவதே மற்றவர்களின் தர்மம் என்ற கொள்கை ஜெர்மன் நாட்டில் தடையில்லாம் வளர்ந்தது. இந்த சூழலில் இருண்ட வானத்தை கிழித்து கொண்டு இளம்பருதி உதையமாவதை போல் ஹெகல் என்ற அரசியல் அறிஞர் தோன்றினார் ஹெகல் பிரவேசத்தை ஜெர்மானியர்கள் அப்படி தான் கருதினார்கள் சூரியனாக அவரை அவர்கள் போற்றியதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 


அவருடைய சிந்தனை அருவியில் இருந்து அரசியல் அறவியல் கருத்தியல் கலையியல் வரலாறு சமயம் என்ற மாபெரும் கோபுரங்களை சுத்திகரிக்கும் அறிவு நதி பெருக்கெடுத்து ஓடியது. ஹெகலின் தெளிவான சிந்தனை பழமையின் மீது அதிதீவிர பற்றும் அதிகாரத்தின் மீது அளவுடகடந்த ஆசையும் கொண்ட ஜெர்மன் தலைவர்களை திக்குமுக்காட செய்தது. தங்களது அகங்கார பீடத்திற்கு அழகான மெருகு கிடைத்து விட்டதாக அவர்கள் ஆனந்த கூத்தாடினார்கள் உண்மையை சொல்வது என்றால் ஹெகலின் தத்துவ மொழிகள் அழகான மலர்கள் போல வெளியில் தோற்றமளித்தது ஆனால் அதற்குள் பூகம்பமே மறைந்திருந்தது என்று சொல்லலாம்.

ஹெகல் வறுமை என்பதே சிறிதும் அறியாத பணக்கார குடும்பத்தில் செல்ல மகனாக பிறந்தவர் திரும்பும் இடமெல்லாம் பகட்டும் படோடோபமும் அவர் கண்ணில் பட்டதே தவிர பசியால் வருந்துகிறவனின் அழுகை குரலை அவர் காதுகள் எப்போதும் கேட்டதில்லை மேல்தட்டு மக்கள் மட்டுமே நாட்டை வழிநடத்தி செல்ல தகுதி வாய்ந்தவர்கள் மற்றவர்கள் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்கள் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். இரும்படித்து மூட்டை தூக்கி வியர்வை சிந்தி உழைப்பவர்கள் அனைவருமே அற்ப ஜீவிகள் பஞ்சணையில் உட்கார்ந்து கொண்டு சிந்தனை செய்து பொழுதை போக்குபவர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்பது அவரின் அசைக்க முடியாத கருத்தாக இருந்தது. 


ஆரம்ப காலத்தில் கத்தோலிக்க இறையியலில் அவருக்கு நாட்டம் இருந்தது என்றாலும் காலம் செல்ல செல்ல ஆன்மிக துறையை தவிர்த்து மற்ற சமூக துறைகளிலும் கவனம் செலுத்தலானார் அதன் விளைவாக அவருக்கு ஆசிரியர் பணி மீது ஆசை ஏற்பட்டது. செனா என்ற ஜெர்மன் நகரம் ஒன்றில் ஆசிரியர் தொழிலை துவக்கினார். அப்போது அந்த நகரத்திற்குள் மாவீரன் நெப்போலியன் தனது படைகளோடு நுழைவதை நேருக்கு நேராக பார்க்கும் அற்புத வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. நெப்போலியனின் அறிவு கூர்மை போர்த்தந்திரம் அரசியல் நுணுக்கம் ஆகிய அனைத்துமே அவரை கவர்ந்தது. அதனால் அவர் நெப்போலியனை உலகின் உயிர் துடிப்பு என்று வியந்து எழுதினார். 

அவருக்கு அற்புதமான எழுத்தாற்றல் இருந்தது. அவரின் எழுத்தின் தாக்கம் சமூதாயத்தின் அனைத்து மட்டங்களிலும் தனி அரசே செலுத்தியது என்று சொல்லலாம். அதிகாரங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் குவித்து கொள்ளும் வலிமை மிக்க அரசாங்கமே சமூதாயத்தை ஒழுங்கு படுத்தி ஆள முடியும். என்று நம்பி அவர் அதிகாரம் மிக்க சர்வதிகார அரசே வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் வலியுறுத்தினார். இவருடைய அதிகார மிக்க சர்வதிகார அரசு என்ற கனவே பொதுவுடைமை சித்தாந்தத்தை உருவாக்கிய காரல்மார்க்ஸ் அவர்களின் முக்கிய ஈர்ப்பாக இருந்தது. ஒரு வகையில் சொல்வது என்றால் ஹெகல் என்ற அறிஞரே காரல்மார்க்ஸின் முன்னோடி என்று சொல்லலாம் என்று கூறிய குருஜி அதன் காரண காரியங்களை விளக்க துவங்கினார் அதை அடுத்து சிந்திப்போம்.

பேட்டி                        
ஆர்.வி. வெங்கட்


Contact Form

Name

Email *

Message *