Store
  Store
  Store
  Store
  Store
  Store

உழைப்பின் சின்னம் முதலை


     ராசி சக்கரத்தில் பத்தாவது ராசியாக வருவது மகரம். முதலை என்ற தமிழ் வார்த்தைக்கு நேரடியான சம்ஸ்கிருத வார்த்தை மகரம் என்பதாகும். ஜாதகத்தில் பத்தாவது இடம் ஒரு மனிதனின் தொழிலை குறிக்கும் தொழில் ஸ்தானமாகும். இந்த இடத்திற்கு முதலையின் உருவத்தை சின்னமாக வைத்ததற்கு ஆழ்ந்த காரணம் உண்டு. 

இப்போது நமது நாட்டில் மக்கள் மத்தியில் பலவிதமான தொழில்கள் இருக்கிறது. ஆனால் ஆதிகாலத்தில் இவ்வளவு பரந்த தொழில்கள் கிடையாது. சில குறிப்பிட்ட தொழில்கள் மட்டுமே உண்டு அந்த தொழில்களில் முதன்மையானது உழவு தொழிலே ஆகும். ஒருவகையில் சொல்ல போனால் உழவு தொழிலை மட்டுமே அக்கால மக்கள் தொழில் என்ற வரிசையில் வைத்தார்கள். 

அதன் அடிப்படையில் விவசாயம் செய்வதற்கு நிலம் கரடு முரடாகவோ மென்மையாகவோ இருந்தால் பயனில்லை. நெல், கரும்பு முதலிய முக்கிய பயிர்கள் நன்றாக விளைய வேண்டுமென்றால் அந்த நிலம் சேறு மிகுந்ததாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஈர பசையோடு பயிர்கள் நன்றாக வளரும். அதனால் ஆதிகால மக்கள் சேற்றை உழைப்பின் சின்னமாகவும் கருதினார்கள். 

முதலை என்பது நீரிலும் நிலத்திலும் வாழ கூடிய உயிரினம் என்றாலும் அதனுடைய முழுமையான பலம் சேற்று பகுதியிலேயே அதிகமாக வெளிப்படும். நீரில் முதலை இருக்கும் போது கூட அதை வென்று விடலாம் ஆனால் சேற்று முதலையை வெல்வது கடினம். சேற்றை விட்டு வெளியே வந்தால் அதாவது தரைக்கு வந்தால் முதலையின் பலம் ஒரு மண்புழுவின் அளவிற்கு தாழ்ந்து விடும். 

அதனால் உழைப்பு என்ற சேற்றில் முதலை என்ற மனிதன் இருக்கும் வரையும் அவன் பலம் பொருந்தியவனாகவும் வளம் நிறைந்தவனாகவும் இருப்பான். உழைப்பை கைவிட்டு விட்டால் எவனும் உயர்ந்தவனாக வாழ முடியாது. எவ்வளவு பெரிய அந்தஸ்துடைய குடும்பத்தில் பிறந்தவனாக இருந்தாலும் கீழான நிலையிலேயே வைத்து எண்ணபடுவான். 

அதனால் தான் உழைப்பின் சக்தியையும் பலத்தையும் தெளிவு படுத்தி காட்டுவதற்கு தொழில் ஸ்தானமான பத்தாமிட ராசிக்கு முதலையின் உருவம் கொடுத்து மகரம் என்ற பெயரில் அழைக்கிறோம்.




Contact Form

Name

Email *

Message *