Store
  Store
  Store
  Store
  Store
  Store

ராஜீவும் ராகுலும் ஒன்றா...?


  •    ராஜீவ்காந்தியின் அரசியல் பிரவேசம் ராகுல்காந்தியின் அரசியல் பிரவேசம் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் என்ன?


     காங்கிரஸ் கட்சியை காப்பாற்றுவதற்கு வேறு வழியே இல்லாத போது இரண்டுபேரும் அரசியலுக்கு வந்தார்கள். இரண்டுபேருமே ஆரம்பத்தில் இந்தியாவின் வளர்ச்சியே தனது உயிர்மூச்சி என்றார்கள் ராஜீவ் கடேசி காலத்தில் தான் அரசியல் ரீதியில் தடுமாறினார். ராகுல் காந்தியோ ஆரம்பகாலத்திலேயே தடுமாறுகிறார். இரண்டு போரையும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்கிறார்கள் ஆனால் இரண்டு பேரும் கிழவர்களின் துதிபாடலை தான் விரும்புவார்கள். 

சிலர் அரசியலுக்கு வருவதற்காக நடிப்பார்கள் இவர்கள் அரசியலுக்கு வந்தபிறகு நடிகர்கள் ஆனார்கள். இருவருமே சிறந்த நடிகர்கள். ஏழை குடிசையில் இரவு தங்குவதும் தெருவோர பலகார கடையில் தேநீர் அருந்துவதும் இருவருக்கும் கைவந்த கலை. ஆனால் முன்னவர்மேல் நல்லது செய்ய மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பின்னவர் மேல் அது இல்லை. 


  • பெண்கள் மீதான பாலியல் பலாத்காரம் குறைவதற்கு என்ன செய்ய வேண்டும்?


   ந்த உலகம் ஆணாதிக்க மயமானது எந்த நாட்டிலும் எந்த இனத்திலும் பெண்களை சமமாக நடத்தும் மனோபாவம் இல்லை. பெண்கள் என்றாலே அழகு பதுமைகள் போக புதையல்கள் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. தனது தாயை பெண்ணாக பார்க்கும் மனிதன் அண்டைய வீட்டு பெண்ணும் தாயை போல பெண்தான் என்பதை சிந்திப்பது இல்லை. 

கடுமையான சட்டங்கள் கொண்டுவந்து பலாத்காரம் செய்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம் என சிலர் ஆலோசனை சொல்கிறார்கள் இதுவும் சரியானது தான். ஆனால் சட்டங்கள் மட்டுமே மனிதனை திருத்துமென்றால் இன்று குற்றவாளிகள் யாருமே இருக்க மாட்டார்கள். எனவே சட்டத்தை கடுமையாக்குவது ஒருபுறம் இருந்தாலும் மனிதனின் மூர்க்க தனத்தை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். 

இன்றைய மனிதனை மூர்க்கமாக மாற்றுவதற்கு முன்னால் நிற்கும் முக்கிய காரணம் மதுபழக்கம் புகைபிடித்தல் உயிருக்கு ஆபத்து என்று விளம்பரம் செய்வதை விட புகையிலையே உற்பத்தி செய்யாமல் தடுத்து விடுவது சரியான செயலாக இருக்கும். அதே போல மனிதனை மூர்க்கமாக மாற்றுகின்ற மதுவை நாடு முழுவதும் உண்மையான அக்கறையோடு ஒழித்துகட்ட வேண்டும். அது நடைபெறாத வரையில் சட்டங்கள் சீர்குலைந்து கொண்டே இருக்கும். 

  • லப்பு திருமணங்களுக்கு எதிரான அரசியல் சரியான பாதையில் கொண்டு சேர்க்குமா?


   காதல் என்ற உணர்வை கிள்ளி எரியாதவரை கலப்பு திருமணத்தை தடுத்துவிட முடியாது. காற்றுக்கு வேலி போடுவதும் கடலுக்கு அணை கட்டுவதும் எப்படி சாத்தியம் இல்லையோ அப்படியே மனிதனை காதல் வசப்படுவதை தடுப்பதும் சாத்தியமில்லை. காரணம் காதல் என்பது இறைவன் கொடுத்த உணர்வு அதை மனிதனால் மறுதலிக்க முடியாது. 

ஜாதிகள் வேண்டாமென்று பலர் போராடினாலும் ஜாதி உணர்வு நமது மக்கள் மத்தியில் நீருபூத்த நெருப்பாக இருந்துவருகிறது. உதட்டளவு எதிர்பவர்கள் கூட மனதளவில் ஜாதிக்கு அடிமையாக இருக்கிறார்கள். பக்கத்து வீட்டு பெண் மாற்று ஜாதியில் திருமணம் செய்தால் வரவேற்கும் பலர் தனது பெண்ணே அதை செய்தால் ஆயிரம் காரணங்கள் சொல்லி எதிர்ப்பார்கள். இது தான் எதார்த்தமான நிலை. 

காதல் திருமணம் கலப்பு திருமணம் என்பவைகள் அவனவன் சொந்த விவகாரம் இதில் அரசியல்வாதிகளுக்கு வேலை இல்லை. குடிநீராக இருந்த கூவம் நதி கூட சாக்கடைகள் கலந்தபிறகு விஷமாகி விட்டது. அதே போல அரசியல்வாதிகள் தனிமனித விவகாரங்களில் தலையிடும் போது கலவரமாகி விடுகிறது. சட்டையை கிழிப்பதும் நாற்காலியை உடைப்பதும் தேச தொண்டு என்று கருதுகின்ற அரசியல்வாதிகள் இதே போன்ற விஷமத்தனமான வேலைகளை விட்டு விட்டு அமைதியாக ஒதுங்க வேண்டும். அல்லது காலம் இவர்களை கட்டாயபடுத்தி ஒதுக்க வேண்டிய சூழல் வரும்.


Contact Form

Name

Email *

Message *