Store
  Store
  Store
  Store
  Store
  Store

நாம் வெளிச்சத்தைக் கொடுப்போம்


     விரலில் உள்ள நகத்தில் சிறிய காயம் ஏற்பட்டுவிட்டாலே நம்மால் தாங்க முடியவில்லை வாழ்க்கையில் பெரிய சோகம் வந்துவிட்டது போல வருத்தபடுகிறோம் ஆனால் இருபத்தி ஏழு வயதுவரையில் நல்ல ஆரோக்கியமாக இருந்து லாரி ஓட்டுனராக பணிபுரிந்து தேசம் முழுவதும் பார்த்து ரசித்து கடினமாக உழைத்து தாய் தகப்பனை காப்பாற்றி சகோதரிகளுக்கு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்து இனி நமது வாழ்வை தொடர்வோம் என்ற நம்பிக்கையோடும் ஆசையோடும் இருக்கின்ற போது ஒருவருக்கு ஒரு மாலை வேளையில் இரண்டு கண்களுமே குருடாகி விட்டால் எப்படி இருக்கும்? சற்று சிந்தித்து பாருங்கள் நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதைபதைக்கும்

நீங்கள் இங்கு புகைப்படத்தில் காணுகின்ற இந்த நபரே பரிதாபத்திற்குரிய அந்த நபராவார். ஒரே நாளில் கண்களை இழந்துவிட்டு நம்பிக்கையை மட்டும் இழக்காமல் இன்றுவரை போராடிவரும் இவரின் பெயர் சக்திவேல் 2004 வது வருடம் இவர் தகப்பனார் பொன்னுசாமி கிணறு தோண்டுவதற்கு வெடி வைக்கும் வேலையை செய்பவர் அன்று பொன்னுசாமி வைத்த வெடி குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கவில்லை ஏதோ ஒருவகையில் வெடி செயலிழந்து விட்டது என்று அனைவரும் முடிவு செய்தனர் கிணறு தோண்டுகிற தோட்டத்துகாரர் வெடிக்காக கொடுத்த பணம் வீணாக போனது என்று பொன்னுசாமியை குறைபட்டு கொண்டார். அடுத்த வெடி வைத்தால் அதற்கு பணம் தர முடியாது என்றும் கூறினார்.



அருகிலிருந்த சக்திவேல் இன்னொருமுறை வெடிமருந்தை வைத்தால் தேவையில்லாத இரண்டு செலவு லாபம் வரவில்லை என்றாலும் கைமுதல் நஷ்டம் அடைந்துவிடுமே அப்பாவுக்கு பண கஷ்டம் வரக்கூடாது என்ற எண்ணத்தில் வேகமாக கிணற்றுக்குள் இறங்கி வைத்த வெடியை அசைத்து பார்க்க துணிந்திருக்கிறார் இவர் இறங்கியது தான் தாமதம் அதுவரையில் அமைதியாக இருந்த வெடி என்ற அபாயம் பயங்கர சத்தத்தோடு வெடித்தது. வெடித்த போது ஏற்பட்ட வெளிச்சத்தை பார்த்தது தான் சக்திவேலின் கடைசி பார்வை. உடலெங்கும் காயங்கள் இரத்தம் வடிந்தது கந்தக தாக்கத்தால் சூடுபட்ட தோலில் அமிலத்தை ஊற்றியது போல் எரிச்சல் வந்தது கதறினார் துடித்தார்

உடனடியாக கிடைத்த வாகனத்தில் தூக்கிபோட்டு கொண்டு மருத்துவமனைக்கு போனார்கள் உள்ளூர் மருத்துவர்கள் முதலுதவி செய்து சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் மருத்துவர்களின் சேவையால் உயிர் பிழைத்து கொண்டது ஆனால் உயிரை பேணி பாதுகாக்கும் சக்திவேலின் விழிகளை தான் காப்பாற்ற முடியவில்லை. இனி நீ உலகத்தை பார்க்க முடியாது நிரந்தரமான இருட்டுக்குள் வாழவேண்டியது தான் என்று கூறப்பட்ட போது அவர் அழுத அழுகை கல்லையும் கரைத்துவிடும். ஆனால் கடவுள் எதற்காக இத்தகைய கொடுமைகளை  நிகழ்த்துகிறான் என்பது புரியாவிட்டாலும் அவன் தருகின்ற தீர்ப்பை ஏற்றுக்கொண்டு வாழவேண்டியது தான் வாழ்க்கையின் நியதி என்ற யதார்த்தம் பெரிய கொதிப்பிற்கு பிறகு சக்திவேலுக்கு புரிந்தது.



அவரது மருத்துவ செலவிற்கு தகப்பனார் கையிலிருந்த பணத்தை எல்லாம் பணம் என்று பாராமல் செலவு செய்தார் எப்படியாவது தனது மகனுக்கு பார்வை வரவைக்க வேண்டுமென்று தன் சக்திக்கு மீறி கடன்வாங்கி செலவும் செய்தார். எவ்வளவு பாடுபட்டும் என்ன பயன்? விதியை வெல்ல யாராலும் முடியவில்லை. மகனின் துயர நிலையை நினைத்து நினைத்தே தகப்பனாரும் காலமாகிவிட்டார். இதுவரை சக்திவேலுக்கு இருந்த ஒரே ஒரு நம்பிக்கையும் காலனின் கைகளில் அடைக்கலமாகி விட்டது. ஆனாலும் இறைவன் கொடுத்த உயிர் இருக்கிறதே அந்த உயிர் வாழுகின்ற உடம்பும் இருக்கிறதே அந்த உடம்பை வளர்ப்பதற்கு உணவும் தேவைபடுகிறதே சும்மா மூலையில் உட்கார்ந்து விட்டால் பசிக்கின்ற வயிற்றுக்கு ஆகாரம் கிடைக்குமா?

பிச்சை எடுப்பதற்கு சக்திவேலால் முடியாது ஏனென்றால் அது அவர் இயல்பு அல்ல இதுவரையிலும் உழைத்தே பழக்கப்பட்ட ஒருவனால் ஐயோ பசிக்கிறது என்று கையேந்த முடியாது. எதாவது வேலை செய்ய வேண்டும் ஆனால் கண்கள் இல்லாத படிக்காத ஒருவருக்கு யார் வேலை கொடுப்பார்? வேலையும் இல்லை வைத்திய செலவிற்கு அப்பா வாங்கிய கடனை அடைக்க வழியும் இல்லை யோசித்தார் தந்தை தனக்கென்று வைத்திருந்த ஒரே வீட்டையும் விற்பனை செய்தார் கடனை அடைத்து மீதமிருந்த சொற்ப பணத்தில் ஊதுவத்தி வாசனை திரவியங்கள் சில மருந்து தைலங்கள் போன்றவைகளை வாங்கி பேருந்து நிலையங்களில் விற்க துவங்கினார் காய்ந்து போன வயிறு சற்று ஈரம் பட்டது மனதும் ஆறுதல் அடைந்தது,

இந்த நிலையில் உனக்கு கண்கள் போனால் என்ன? உன்னை கரம்பிடித்து வழிநடத்த நான் வருகிறேன் என்று ஒரு பெண்மணி சக்திவேலை திருமணம் செய்துகொண்டார் பாப்பாத்தி என்ற பெயர் கொண்ட அந்த பெண்ணும் அடுத்த வேளை உணவுக்கு மண்சுமக்கும் கூலித்தொழிலாளியின் மகளே! ஏழைக்கு ஆதரவு கொடுக்க இன்னொரு ஏழையால் தானே முடியும் இவர்கள் இருவரின் இனிய இல்லறத்தின் பரிசாக நந்தினி என்ற பெண் குழந்தையும் பிறந்திருக்கிறது சக்திவேல் தினசரி பாடுபடுகிறார் ஒருநாள் கூட ஓய்வு இல்லாமல் ஓடி கொண்டிருக்கிறார். அவரது குடும்ப பாரத்தை சுமக்க மனைவியும்  கைகொடுக்கிறார்.




இரவு பகலென்று பாராமல் பாடுபட்டாலும் கிடைக்கின்ற வருவாய் கைக்கும் வாய்க்கும் தான் போதுமானதாக இருக்கிறது ஒரு நல்ல துணி எடுக்கவேண்டும் என்றால் கூட முடிவதில்லை ரேஷன் கடையில் அரிசி மட்டுமே இலவசமாக கிடைக்கிறது பருப்பு காய்கறி எண்ணெய் விற்கின்ற விலை சாமான்ய மனிதனாலேயே சமாளிக்க முடியாத போது பாவப்பட்ட சக்திவேல் குடும்பம் என்ன செய்யும். இந்த நிலையில் வாடகை வீட்டிற்கு பல மாதங்கள் வாடகை கொடுக்க முடியவில்லை வீட்டு காரரும் கருணை கொண்டு பொறுத்து போகிறார் என்றாலும் எத்தனை நாள் தான் அவராலும் பொறுக்க முடியும்? அவரும் மனிதர் தானே அவருக்கும் தேவைகள் இருக்கிறதே?

சக்திவேலின் இந்த இக்கட்டான இடர்பாடுகளை நன்கு உணர்ந்த காடகனூர் கிராமத்தில் இருக்கின்ற நமது குருமிஷன் அறக்கட்டளையின் விழாக்குழு ஒருங்கினைப்பாளர் திரு.மா.முருகன் தனக்கு சொந்தமான இரண்டு செண்ட் நிலத்தை சக்திவேலுக்கு இலவசமாக கொடுத்துவிட்டார் வெறும் நிலத்தை வைத்து கொண்டு என்ன செய்வது? மண் சுவர் கட்டி ஒரு கூரை போடுவது என்றாலும் தற்கால விலைவாசிபடி ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு மேல் செலவாகுமே அதற்கு அவர் என்ன செய்வார்? யாரிடம் போவார்? கடைசியில் அவர் தனது குறையை நமது குருஜியிடம் தெரிவித்தார். குருஜியும் இப்படி ஒருநபர் இருக்கிறார் என்ற தகவலை தன்னை காணவந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த திருமதி சிவம் என்ற அம்மையாரிடம் தெரிவித்தார் அந்த அம்மையாரும் உடனடியாக தன்னால் முடிந்த பத்தாயிரம் ரூபாயை எந்த யோசனையும் இல்லாமல் தானாமாக கொடுத்தார்.

சக்திவேலுக்கு ஓரளவு நல்ல வீடுகட்டி கொடுக்க வேண்டியது இரக்க மனம் படைத்த நமது கடமை என்று நினைக்கிறோம் அதற்கு இந்த பத்தாயிரம் ரூபாய் பணம் போதாது இன்னும் சற்று அதிகமாக பணம் வேண்டும் அதற்கு நமது உஜிலாதேவியில் வாசகர்கள் மனம் வைத்தாலே போதுமானது கண்கள் தெரியாத ஒருவரின் வாழ்க்கையை நம்மால் முடிந்தவரை வெளிச்சமாக்கிவிட முடியும். நாம் அனைவரும் சேர்ந்து இழுத்தால் இவரது குடும்ப  தேரை கட்சிதமாக கரைசேர்த்துவிடலாம். உங்களால் முடிந்த உதவியை நிச்சயமாக செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த பதிவை எழுதுகிறேன்.

அன்புடன் 
டாக்டர்.வி.வி.சந்தானம் 
காரியதரிசி ஸ்ரீ குருமிஷன் அறக்கட்டளை 
காடகனூர் 


திரு சக்திவேலுக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்வதற்கு விபரங்களை அறிய இங்கே Click Here

Contact Form

Name

Email *

Message *