Store
  Store
  Store
  Store
  Store
  Store

சுவாமி மாலையை எப்போது எடுப்பது?




    நாங்கள் பல வருடங்களாக வெளிநாட்டில் வாழ்கிறோம் எங்களுக்கு நம் நாட்டில் கடைபிடிக்கும் பழக்கவழக்கங்கள் பல தெரிவதில்லை அப்படியே தெரிந்தாலும் அதை இந்த நாட்டில் கடைபிடிக்க முடியாத வண்ணம் பல இடையூறுகள் இருக்கின்றன சில நேரங்களில் சமய சந்தர்ப்பங்களும் கைகொடுப்பது இல்லை. இப்போது எனக்கொரு சந்தேகம் நான் தினசரி வீட்டில் பூஜை செய்கிறேன் அந்த பூஜையில் காலையில் சாமிக்கு சாற்றிய மலரை மாலையில் எடுத்துவிட வேண்டும் அடுத்த நாள் காலை வரை வைக்க கூடாது என்று வீட்டுக்கு வந்த ஒரு மாமி சொல்கிறார் எனக்கு அது சரியா? தவறா? என்பது தெரியவில்லை குருஜி அவர்கள் நல்ல விளக்கம் தருமாறு பணிவோடு வேண்டுகிறேன். 


இப்படிக்கு 
காஞ்சனா 
அமெரிக்கா





    லகம் முன்பு போல் இல்லை எவ்வளவோ மாறிவிட்டது என்று கூறுவதை விட மிகவும் சுருங்கி விட்டது என்று சொன்னால் சரியாக இருக்கும் பத்து இருபது வருடத்திற்கு முன்பு ஊரில் ஒருவரோ இருவரோ அயல்நாட்டில் இருப்பார்கள் மற்றவர்களில் பலர் வெளியூரில் அதிகமாக இல்லாமல் உள்ளூரியிலே சொந்த தொழில் செய்து வாழ்வார்கள் ஆயிரமுறை பறந்து பறந்துபோய் சம்பாதித்தாலும் உள்ளுரில் சம்பாதித்து ஒரு பிடி சாதம் சாப்பிட்டால் கூட அதன் சுகம் தனிதான் கண்காணாத இடத்தில் பாஷை புரியாத அந்நிய மனிதர்களோடு ஒரு அரவணைப்பு கூட இல்லாமல் வாழுகிற முறை மிகவும் பரிதாபமானது இருப்பதை வைத்து வாழ தெரியாமல் ஆசைகளை அதிகப்படியாக வளர்த்து கொண்டு அவதிபடுபவர்கள் மத்தியில் இந்த உண்மையை எடுத்து சொன்னால் ஏற்க மாட்டார்கள் என்பதை விட காது கொடுத்தே கேட்க மாட்டார்கள் என்பது தான் நிஜம் 

நன்றாக யோசித்து பாருங்கள் அமெரிக்கா சென்று ஐந்து லட்சரூபாய் மாதம் சம்பாதித்தாலும் அங்கே உள்ள செலவுக்கு ஐம்பாதாயிரம் ரூபாய் கூட வீட்டாருக்கு அனுப்ப முடியாது அந்தளவு அங்கே வாழ்க்கைத்தரம் மிகவும் செலவு மிகுந்தது அவ்வளவு செலவு செய்து அந்நிய மனிதர்களோடு வாழ்ந்து கஷ்டப்படுவதை விட சொந்த ஊரில் சொந்த மக்களோடு வாழ்ந்து முடிந்ததை சம்பாதித்து இருப்பதை சேமித்து வாழலாம் என்று சொன்னால் அவர்களை எதிரியை பார்ப்பது போல பலரும் பார்க்கிறார்கள் ஊர்விட்டு ஊர்போய் அவதிப்பட்ட பிறகு தான் அறிவுரை சொன்னவர்களின் அருமை தெரியும். 

நம்ம ஜனங்களுக்கு ஒரு கொடுமையான வியாதி எப்போதுமே உண்டு பார்ப்பதற்கு வெகுளியாக உலகம் தெரியாத இளையவராக யாரவது கிடைத்து விட்டால் அவரை பிடித்து வைத்து அறிவுரை சொல்கிறேன் விளக்கம் கூறுகிறேன் என்று ஆரம்பித்து விடுவார்கள். தனக்கு தெரிகிறதோ இல்லையோ மனதில் தோன்றியதை எல்லாம் மற்றவர்கள் மண்டைக்குள் திணித்து குழப்பி விடுவார்கள் அதில் அவர்களுக்கு ஒரு அற்ப சுகம் இந்த புத்தி அவர்கள் எந்த நாட்டிற்கு போனாலும் போகாது. அப்படி ஒரு அம்மணிதான் உங்களை பார்த்து விளக்கம் சொல்லி இருக்கிறார்கள்.

சாஸ்திரம் என்ன சொல்கிறது என்றால் ஒருமுறை பூஜை செய்து சுவாமிக்கு அணிவிக்கிற புஷ்பங்களை அடுத்த முறை பூஜை செய்வதற்கு முன்பாக அகற்றிவிட வேண்டும். நீங்கள் காலை மாலை இருவேளையிலும் பூஜை செய்தால் காலை புஷ்பத்தை மாலையில் அகற்றினால் தான் நல்லது காலையில் மட்டும் தான் பூஜை செய்கிறீர்கள் எனும் போது அடுத்த நாள் காலையில் பூக்களை அகற்றுவது எந்த வகையிலும் தவறு அல்ல இன்னொரு விஷயத்தை மிக முக்கியமாக கவனத்தில் வையுங்கள் நீங்கள் பூஜை செய்து வணங்குகிற சுவாமி உங்கள் மனதை மட்டுமே அதனுள் இருக்கும் பக்தியை மட்டுமே பார்க்கிறார் தெரியாமல் செய்கிற காரியங்களை அவர் பொருட்படுத்த மாட்டார் அது அவருக்கு தேவையும் இல்லை.



Contact Form

Name

Email *

Message *