Store
  Store
  Store
  Store
  Store
  Store

உதவிக்கு நன்றி !


    ண்பார்வை இல்லாத இளைஞர் சக்திவேலின் குடும்பத்தினர் தங்குவதற்கு நமது “ஸ்ரீ குருமிஷன்” மூலம் வீடு ஒன்று இலவசமாக அமைத்து தருவதற்கு உஜிலாதேவி வாசகர்களிடம் நன்கொடை கேட்டு இதுவரை இரண்டு பதிவுகளை வெளியிட்டிருந்தோம் நமது வேண்டுகோளுக்கு செவிசாய்த்து அன்புள்ளம் கொண்டு பலரும் உதவி செய்தார்கள்.

ஆரம்ப கட்டத்தில் 57,100/- ரூபாய் வரை அன்பர்கள் நன்கொடை செய்தார்கள். அந்த தொகை ஒரு வீடு அமைக்க போதாது. இன்னும் சிறிது உதவி செய்யுங்கள் என்று வேண்டுகோள் வைத்து இரண்டாவது பதிவை செய்திருந்தோம். அதை படித்துவிட்டு பல அன்பர்கள் தங்களால் முடிந்த தொகையை அனுப்பி வைத்திருந்தார்கள்.

இதுவரை

1
ஆர்.வி.வெங்கட்டரமணன்
ரூபாய்5000/-
2
எட்வின்
ரூபாய்200/-
3
கப்பள்ளி அண்ணா
ரூபாய்1000/-
4
ஸ்ரீதரன்
ரூபாய்500/-
5
கார்த்திக்
ரூபாய்500/-
6
சரவணன்
ரூபாய்100/-
7
ஸ்டீல்இன்பார்மர்
ரூபாய்5000/-
8
திருமாறன்
ரூபாய்1000/-
9
ராமநாராயணன்
ரூபாய்10000/-
10
செல்வநாயகம் கலாநிதி
ரூபாய்10000/-
11
கனகராஜ் மற்றும் நசீர்அஹமது
ரூபாய்20000/-
12
ஜெயகுமார்
ரூபாய்400/-
13
வெங்கடாச்சலம்
ரூபாய்200/-
14
எஸ்.டி.ராமநாதன்
ரூபாய்2000/-
15
ஜி.ஸ்ரீதரன்
ரூபாய்10000/-
16
சுதர்சன்
ரூபாய்10000/-
17
ரமேஷ்
ரூபாய்500/-
18
வைகுண்டன்
ரூபாய்100/-
19
வெங்கட்ராமன்
ரூபாய்5000/-
20
ஹரிகிருஷ்ணன்
ரூபாய்1000/-
21
திருமதி சிவம்
ரூபாய்10000/-

    என்று ஆக மொத்தம் 93,401/-ரூபாய் நன்கொடை வரவு வந்துள்ளது. இது தவிர நூறு, இருநூறு என்று பெயர் குறிப்பிடாமலே சிலர் அனுப்பி உள்ளார்கள். அந்த வகையில் ரூபாய் 5000/- வரை வந்துள்ளது.

திரு சக்திவேலுக்கு வீடு அமைத்து கொடுக்க இந்ததொகை தாராளமாக போதுமென்று தோன்றுகிறது. எனவே அவருக்கு நன்கொடை செய்ய நினைப்பவர்கள் இனி நன்கொடைக்காக அறியப்படுகிற வேறு நபர்களுக்கு செய்தால் நன்றாக இருக்குமென்று குருஜி கருதுகிறார். எனவே இதுவரை குருமிஷன் பணியில் சக்திவேலுக்கு இல்லம் அமைத்து கொடுக்கும் சேவையில் முழுமையாக ஒத்துழைப்பு செய்த உங்கள் அனைவருக்கும்  கோடான கோடி நன்றிகள். நீங்கள் அனைவரும் பல நலம் பெற இறைவன் அருள்வான். இனி அடுத்தடுத்து பல பணிகளை நமது அறக்கட்டளை செய்ய இருக்கிறது, அதற்கும் உங்கள் ஒத்துழைப்பு பரிபூரணமாக இருக்குமென்று நம்புகிறோம்.

இன்னொரு விஷயத்தையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இதுவரை சிறிய அளவில் பல உதவிகளை நமது அறக்கட்டளை கிராமப்புற மக்களுக்கு செய்து வருகிறது. இனி வருங்காலத்தில் நிரந்தரமான நீண்டகால சேவை திட்டங்களாக பலவற்றை செய்ய விரும்புகிறார் குருஜி. என்ன செய்தால் நன்றாக இருக்கும். சேவை செய்ய நினைப்பவர்களுக்கு எந்தெந்த பணிகள் எல்லாம் ஆத்ம திருப்தியை தரும். என்பதை ஆராய்ந்து எதை செய்தால் மிகவும் உபயோகமாக அமையுமென்று அறிய நமது குருஜி விரும்புகிறார். எனவே இதை படிக்கும் வாசகர்கள் அடுத்தகட்ட சேவையாக நிரந்தரமான பிரயோஜனமான பணிகளை சொல்லுங்கள். அதை எல்லோரும் கூடி ஆய்வு செய்து நடைமுறைப்படுத்துவோம்.


டாக்டர் வி.வி. சந்தானம்,
காரியதரிசி,
ஸ்ரீ குரு மிஷன் அறக்கட்டளை,
காடகனூர்.


Contact Form

Name

Email *

Message *