( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

உறங்குவதற்கு என்ன வழி?   குருஜி அவர்களுக்கு வணக்கம். எனக்கு ஒருவருட காலமாகவே சரிவர உறக்கம் வரமாட்டேன் என்கிறது. நாற்பது வயதில் பல பிரச்சனைகள் இருப்பதனால் குறைவாகத்தான் உறக்கம் வரும். இதனால் பாதகம் இல்லை என்று சிலர் கூறுகிறார்கள் சரிவர தூங்காததனால் களைப்பாக இருக்கிறது. வேலை செய்யும் போது சோர்வு வருகிறது மன அழுத்தமும் ஏற்படுகிறது. மாத்திரை மருந்து இல்லாமல் நன்றாக உறங்க என்ன செய்யவேண்டும்?

இப்படிக்கு, 
சுந்தரராஜன், 
தூத்துக்குடி.   மது முன்னோர்கள் உறங்குவதற்கு கூட சரியான கால அளவை வகுத்து வைத்திருக்கிறார்கள். பிறந்த குழந்தை ஒரு வயது வரை பதினெட்டுமணிநேரம் உறங்கவேண்டும். ஒரு வயது முதல் ஆறுவயது வரை பதினைந்து மணிநேரம் உறங்க வேண்டும். ஆறுவயது முதல் பனிரெண்டு வயதுவரை பனிரெண்டு மணிநேரம் உறங்க வேண்டும். பனிரெண்டு வயது முதல் பதினெட்டு வயது வரை எட்டுமணிநேரம் உறங்க வேண்டும். அதன் பிறகு முப்பது வயதுவரை ஆறுமணிநேரம் உறங்கினால் போதுமென்று கூறுகிறார்கள் 

அதேவேளை நாற்பது வயது பிறந்துவிட்டால் அறுபது வயது வரையில் குறைந்தபட்சம் பத்துமணி நேரமாவது உறங்க வேண்டும். அறுபதுக்கு மேல் பனிரெண்டுமணி நேரம் உறக்கம் வேண்டும் என்கிறார்கள் மனிதனுக்கு நாற்பது வயதில் தான் பிரச்சனைகளே வரத்துவங்குகிறது. இந்த நேரத்தில் பிரச்சனைகளால் உறக்கம் வருமா? குழப்பம் வருமா? என்பது அனுபவித்தவர்களுக்கு தான் தெரியுமே தவிர மற்றவர்கள் நன்றாக உறங்க வேண்டியது தானே எது கெட்டு போய்விட்டது என்பார்கள். 

இந்தந்த வயதுகளில் இப்படிதான் உறங்க வேண்டும் என்பது விதி. இந்த விதியை மீறினால் ஒன்றும் பெரிய பாதிப்பில்லை. கொடிய நோய்கள் வரும் அவ்வளவு தான் எனவே ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்கள் கூடியமானவரையில் அரசனுக்கும் தொல்லை உண்டு. ஆண்டிக்கும் துன்பத்திற்கான எல்லை உண்டு. என்று மனதில் தெளிவை வரவழைத்து கொண்டு நடப்பது நாராயணன் செயல் என்று உறங்க பழகவேண்டியது தான். நாம் உறங்காமல் தவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதற்காக வருவது வரமால் இருக்க போகிறதா என்ன? 

உறக்கம் நன்றாக வர நல்ல உடற்பயிற்சி வேண்டும். உடம்பிலிருந்து வியர்வை வெளியேற வேண்டும். சூரிய வெளிச்சம் நன்றாக நம்மை தீண்ட வேண்டும் குறித்த நேரத்தில் உணவு, ஓய்வு தேவை. மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தியானம், யோகாசனம் இப்படி எதிலாவது நல்ல விஷயங்களை செய்ய வேண்டும். நாட்டு மருந்து கடையில் கல்தாமரை என்ற மூலிகை விற்கும் பார்ப்பதற்கு கறுப்பாக இருக்கும் அதை வாங்கி பகலில் தண்ணீரில் ஊறவைத்து இரவில் தண்ணீரை மட்டும் உணவிற்கு பிறகு சிறிது குடிக்க வேண்டும் இதனால் நரம்புகள் சமமாகி நல்ல உறக்கம் வர ஆரம்பிக்கும்.
Next Post Next Post Home
 
Back to Top