Store
  Store
  Store
  Store
  Store
  Store

குழந்தை வரம் பெற்ற உஜிலாதேவி வாசகர் !


    ன்புள்ள குருஜி அவர்களுக்கு உங்கள் பாதம் தொட்டு சிங்கப்பூரிலிருந்து கணேசன் எழுதுவது. ஐயா உங்களை வந்து தரிசனம் செய்து சென்ற பலரில் நானும் ஒருவன். நிச்சயம் என்னை நீங்கள் நினைவில் வைத்திருக்க முடியாது. ஆனால் உங்களை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஒரு வருடத்திற்கு முன்பு உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இன்டர்நெட்டில் உங்கள் எழுத்தை படித்து விட்டு அதனால் ஈர்க்கப்பட்டு உங்களால் தான் என்னை காப்பாற்ற முடியுமென்று ஒரே உறுதிப்பாட்டோடு வந்தேன்.

எனக்கு திருமணமாகி ஏழு வருடம் ஆகி இருந்தது. குழந்தை இல்லை. அதற்கு காரணம் என் மனைவியின் கருப்பையில் பல சிக்கல்கள் இருந்தன. மருத்துவர்கள் அனைவரும் கைவிட்டுவிட்டனர். ஒரு குழந்தையை எடுத்து வளர்ப்பதை தவிர உங்களுக்கு வேறு வழி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். என் மனைவிக்கோ தன் வயற்றில் ஒரு பிள்ளையை சுமந்து பெற வேண்டும் அப்படி பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் வாழவே கூடாது இறந்து போய்விட வேண்டும் என்ற எண்ணம்.

இந்த உலகில் என் மனைவியை தவிர எனக்கு சொந்தமென்று யாரும் இல்லை. பிறந்த சில மணிநேரத்திலேயே அம்மாவை பறிகொடுத்து விட்டேன். முகம் பார்க்க தெரியாத வயதில் தகப்பனாரும் காலமாகி விட்டார். அத்தையின் பராமரிப்பில் வளர்ந்தேன். அத்தை மிகவும் சிரமப்பட்டு என்னை வளர்த்தார்கள். வீடு வீடாக சென்று தண்ணீர் எடுத்து கொடுப்பது, கல்யாணம் மற்றும் வீட்டு விசேஷங்களுக்கு சமையலுக்கான ஒத்துழைப்பை செய்வது, இது தான் அவரின் வேலை. பலநாள் சரியான சாப்பாடு கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அதை எனக்கு கொடுத்துவிட்டு அவர் பட்டினி கிடப்பார்.

அவருக்கு கணவர் இல்லை. என்னை எடுத்து வளர்த்த ராசியாலோ என்னவோ ஒரு பெண் குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே மாமா இறந்து விட்டார். இவ்வளவு கஷ்டத்திலும் அத்தை என்னை படிக்கக வைத்தார். தன் மகளை பத்தாம் வகுப்போடு நிறுத்தி விட்டார். நான் படித்தேன். நன்றாகவே படித்தேன் படித்து முடித்தவுடன் சிங்கப்பூரில் வேலை கிடைத்தது. என் முதல் மாத சம்பளத்தை எனக்கு தாயாக இருந்த அத்தையிடம் நேரில் கொடுக்கவேண்டும் என்று ஆசையோடு இருந்தேன் நான் சம்பளம் பெறுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பே விஷக்காய்ச்சலில் அத்தை என்னை அனாதையாக விட்டு விட்டு போய்விட்டார்.

நானும் என் அத்தை மகளும், செய்வதறியாமல் நின்றோம். அந்த நேரத்தில் சில உறவினர்கள் எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார்கள். என் அத்தை மகளை பொன் போல பாதுகாக்க வேண்டியது என் கடமை என்று பாடுபட்டு வருகிறேன். அவள் வருத்தப்பட்டு நான் பார்க்க கூடாது. அவள் அழும்படி நான் வாழக்கூடாது என்பதே எனது எண்ணம். என் மனைவியின் மீது வைத்திருப்பது வெறும் காதல் அல்ல, மாசு மருவற்ற பாசம். அதையும் தாண்டிய, ஜென்ம ஜென்மாந்திர பந்தம். அதை விட்டு விட்டால் நான் வெறும் பிணம். எனவே என் மனைவியின் துயரை எப்படியும் போக்க வேண்டும் என்று வெறிகொண்டு அலைந்தேன். பலரையும் தேடினேன்.

என் தேடுதலில் கிடைத்த பொக்கிஷம் நீங்கள். என் குறைகளை சொல்லி அழுதேன். அழாதே! உன் ஜாதகத்தில் உனக்கே உனக்காய் குழந்தை பிறக்கும் என்று இருக்கிறது. நீ வேறொரு மனைவியை நாடாமல் இதே மனைவியோடு குழந்தை பிறக்க இறைவன் வழி செய்வான். அதற்கு தான் சொல்லுகிறபடி செய் என்று கூறி சில அரிதான மருந்துகளை தந்து நாங்கள் இருவரும் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள வேண்டிய நாட்களையும், நேரத்தையும் குறித்தும் தந்தீர்கள். உண்மையாக மருந்துக்கு நான் கொடுத்த பணம் சற்று அதிகமோ என்று கூட நான் யோசித்தேன் அதை உங்கள் முன்னால் ஒப்புக் கொள்ளாவிட்டால் பெரிய பாவம் செய்தவனாவேன்.

ஆனால் எனக்கு வழிகாட்டிய, என் உயிரிலும் மேலான குருஜி அவர்களே உங்கள் பாதங்களில் நன்றியோடு கூறுகிறேன். நீங்கள் சொன்னபடி மருந்தையும் எடுத்துக்கொண்டு உங்கள் அறிவுரைகளையும் கடைபிடித்து நானும், என் மனைவியும் நடந்தோம். நீங்கள் குறிப்பிட்ட காலத்திலேயே என் மனைவியின் கர்ப்பப்பை நல்ல ஆரோக்கியமானதாக மாறி கருவுற்றாள். நேற்று இரவு அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தாள். தாயும் சேயும் நலமோடு இருக்கிறார்கள். என் குடும்பத்தில் சூரியனே உதித்தது போல இருக்கிறது. என்னையும் தந்தை என்ற பதவிக்கு உங்கள் அருளால் கைதூக்கி விட்டீர்கள் அதற்கு கோடான கோடி நன்றி.


இந்த நன்றியை பகிரங்கமாக உங்களுக்கு தெரிவிப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. என்னைப்போன்ற வருத்தப்பட்ட பாவம் சுமக்கும் ஜீவன்கள் எத்தனையோ பேர் உண்டு. அத்தனை பேருக்கும் விடிவெள்ளி இருக்கிறது. வெளிச்சபாதை இருக்கிறது என்பதை காட்டுவதற்காகவே எழுதுகிறேன் நான் உஜிலாதேவி இணையதள வாசகன் அதில் நீங்கள் எழுதியதை படித்துவிட்டு தான் உங்களிடம் வந்தேன். இன்று வந்ததற்கான சன்மானத்தையும் பெற்றுவிட்டேன். அதற்கு சாட்சியாக என் கடிதம் அமையவேண்டும் என்றே எழுதுகிறேன். இதை கண்டிப்பாக பதிவில் போடும்படி வேண்டுகிறேன். ஒரு வாசகனின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியது உங்களது கடமை.


எங்கள் குழந்தையோடு உங்களை காண எங்கள் குழந்தையை உங்கள் பாதங்களில் சமர்பிக்க விரைவில் தாய்நாடு வருவோம். உங்கள் அன்பு கரங்களால் என் மகளை தொட்டு நீங்கள் ஆசிர்வதிக்கும் தினமே அவளுக்கு நிஜமான பிறந்தநாள். உங்கள் திருநாவால் அவளுக்கு பெயர் சூட்ட வேண்டும். இது எங்களின் ஆசை, எங்கள் குலதெய்வமான உங்களுக்கு எந்த வார்த்தைகளால் நன்றி கூறுவது என்றே தெரியவில்லை. இந்த சிறியவன் உங்களுக்காக, உங்களின் நலத்திற்காக இறைவனிடம் மண்டியிட்டு கண்ணீரோடு பிரார்த்தனை செய்கிறேன். அதுமட்டுமே உங்களுக்கு என்னால் தரமுடிந்தது. மற்றவைகள் அனைத்துமே உங்கள் தகுதிக்கு அப்பாற்பட்டது எங்கள் தெய்வமே உங்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!


                                               


         ங்களுக்கும், உங்களது மனைவிக்கும், மிக முக்கியமாக உங்கள் குழந்தைக்கும் குருஜி தனது ஆசிர்வாதத்தை வழங்கினார். உங்கள் குடும்ப மேன்மைக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்வார்.

                                                                                                              என்றும் குருஜி பணியில்,
                                                                                                                                        சதீஷ் குமார்.





Contact Form

Name

Email *

Message *