( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கண் நோய் தரும் கிரகம் எது?    குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். எனது தந்தைக்கு ஐம்பது வயதாகிறது. அவரது கண்பார்வை வயதுக்கு மீறிய அளவில் குறைந்து கொண்டே வருகிறது. மருத்துவர்கள் பல காரணங்களை கூறுகிறார்கள். அவற்றை எல்லாம் கேட்கும் போது பயமாக இருக்கிறது. நாங்கள் அவருக்கு மூன்று குழந்தைகள். இன்னும் ஒருவருக்கு கூட திருமணம் நடக்கவில்லை. குழந்தைகளின் திருமணத்தை தன்னால் நடத்தி வைக்க முடியுமா? கண்ணார காண முடியுமா? என்று ஒவ்வொரு நாளும் வருத்தப்பட்டு கலங்கி நிற்கிறார் எங்களால் அவருக்கு ஆறுதல் கூற முடியவில்லை. உங்களை பற்றி என் தோழி மூலமாக கேள்விப்பட்டேன். என் தந்தையின் குறையை உங்களால் மட்டுமே தீர்க்க முடியுமென்று நம்புகிறேன். தயவு செய்து உதவி செய்யுங்கள். 


இப்படிக்கு, 
அனீஸ்பேகம், 
வாணியம்பாடி. 
   ரு ஜாதகத்தில் இரண்டாம் இடம் என்பது கண்களை பற்றிய விஷயங்களை நமக்கு தரும் பகுதியாகும். இந்த இரண்டாம் இடத்தின் அதிபதி சுக்கிரனாக இருந்தால் நோய்களை குறிக்கும். ஆறாம் இடத்தில் சூரியன் இருந்தால், அந்த ஜாதகருக்கு முதியவயதில் கண்பார்வை பறிபோகும் என்பது புலிப்பாணி சித்தரின் ஜோதிட விதியாகும். 

உங்கள் தந்தையாரின் ஜாதகமும் ஏறக்குறைய இப்படியே இருக்கிறது. இவருக்கு முதுமையின் ஆரம்பத்தில் கண் பாதிக்கப்பட்டிருப்பதற்கு மிக முக்கிய காரணம் அவரது கடின உழைப்பும், சரிவர உணவை எடுத்துக்கொள்ளாததுமே  உடல் பலகீனம் என்பது நாளை வரவேண்டிய நோயை இன்றே வரவேற்று விட்டது. 

எனவே உங்கள் தந்தைக்கு சூரியன், சுக்கிரன் ஆகிய கிரகங்களின் நல்ல விதமான கிரக ஈர்ப்பு ஏற்படும்படி செய்துவிட்டால், நோயின் பாதிப்பு உடனடியாக தாக்காமல் நிச்சயம் தள்ளிப்போக வைக்கலாம். நமது உடம்பில் உள்ள சில சூட்சம சக்கரங்களை தாந்த்ரீக் ஹீலிங் மூலம் துரிதமாக செயல்பட வைத்தால் மேற்குறிப்பிட்ட கிரகங்களின் ஆற்றலை நல்ல முறையில் பெறலாம். அதற்கு உங்கள் தந்தையார் நேரில் வரவேண்டும். வந்தால் பலன் நிச்சயம். 
Next Post Next Post Home
 
Back to Top