( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

முதிய மணமகன் அமையும் ஜாதகம்
     ன்புள்ள குருஜி அவர்களுக்கு வணக்கம். என் மகளின் ஜாதகத்தை உங்களுக்கு அனுப்பி இருக்கிறேன். இவள் ஜாதகப்படி வயது முதிர்ந்த கணவர் தான் கிடைப்பார் என்று கூறுகிறார்கள் இது சரியா? என் மகளின் விதி அதுவா?

இப்படிக்கு,
எலிசபெத் செல்வராஜ்,
திருநெல்வேலி.பெண்ணினுடைய ஜாதகத்தில் ஏழாவது இடமான திருமண ஸ்தானத்தை மிகத் தீவிரமாக ஆராய வேண்டும். காரணம் ஒரு பெண்ணின் துயரமும், சந்தோசமும் அவள் திருமணத்தை பொறுத்தே அமைகிறது. திருமணமாகும் பெண்ணிற்கு மணமகன் ஒன்றிரண்டு வயது மூத்தவராக இருந்தால் யாரும் வருந்துவது இல்லை. மிக அதிகமான வயது மணமகன் அமைவதை விரும்புபவர்கள் மிகவும் குறைவு, இல்லை என்றே சொல்லலாம்.

வயதானவரை திருமணம் செய்து கொள்வதில் பல சிக்கல்கள் இருக்கிறது. முதலாவது சமூகத்தின் பார்வை. அடுத்தது குடும்பத்தின் தேவைகள். இவைகளை விட மிக முக்கியமாக குழந்தைகளின் வாழ்க்கை. இப்படி அனைத்துமே சிக்கல் மிகுந்ததாகவும், எதிர்மறையாகவும் ஆகிவிடும். மருத்துவ ரீதியில் கூட திருமண உறவு என்பதில் அதிக வயது என்பது பிரச்சனை தான் எனவே அப்படிப்பட்ட திருமணங்களை தவிர்ப்பது நல்லது.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாவது இடத்தில் அதன் அதிபதியோ அல்லது சனியோ, சனியின் பார்வையோ அமைந்து விட்டால் தன்னை விட அதிக வயதுடைய கணவரை அடைவாள் என்ற பொதுவான விதி உண்டு. இது தவிர்க்க பெண்ணின் பெற்றோர்கள் சனிக்கிழமை தோறும் சனீஸ்வரன் சன்னதிக்கு சென்று எள் எண்ணெய் விட்டு விளக்கேற்றி வணங்க வேண்டும். பெண் திருமணம் முடியும் வரை இதை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


+ comments + 1 comments

Anonymous
17:32

If, someway, the Saturn is connected to the seventh house of Bride’s Horoscope, then her groom will be an aged person, meaning that, the age difference will be more; however, this age difference may be little or big depending upon the degree of connectivity between the Saturn and the seventh house. This is a common rule in astrological science.
If the above said connection exists in any bride’s horoscope then the only way to reduce ill effects of Saturn is that the affected person, or any other one on behalf of her, has to worship the Saturn in the way prescribed by guruji.


Next Post Next Post Home
 
Back to Top