Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஜோதிடர் கூறுவது பலிப்பது ஏன்?



   குருஜி அவர்களுக்கு வணக்கம். சில ஜோதிடர்களுக்கு சரியாக கணக்குபோட கூட தெரியவில்லை என்றாலும், அவர்கள் சொல்லுவது அப்படியே பலித்து விடுகிறது. அதை போல தெருவில் குடித்து விட்டு சாக்கடையில் உருண்டு கிடப்பவனுக்கு கூட சாமி வந்துவிட்டால் அவன் கூறுவது சற்றும் பிசகாமல் நடக்கிறது. இவைகளை விட்டுவிடுவோம். சாதாரணமாக இருக்கும் ஒரு நண்பன் கூட, சில விஷயங்களை சொன்னால் சொன்னது சொன்னபடி நடக்கிறது. இது எப்படி ஏற்படுகிறது? எனக்கு புரியவில்லை. தயவு செய்து புரிய வையுங்கள்.

இப்படிக்கு,
விக்டர் ஜான்பால்,
சென்னை.




நாம் அன்றாடும் பயன்படுத்தும் சொற்களிலேயே, சில சொற்களுக்கு அதிக சக்தி இருக்கும். எப்போது நமது இருதயத்தில் இருந்து வார்த்தை வருகிறதோ அதுவும் நாபிகமலம் என்று சொல்லப்படுகிற அடிவயிற்றில் இருந்து வரும் வார்த்தைகளும், சத்தியத்தின் வேர்களிலிருந்து புறப்படுகிற சொற்கள் என்பதனால், அவைகள் சக்தி மிகுந்ததாகவும், உடனுக்குடன் பலிக்க கூடியதாவும் இருக்கிறது. இதற்காகத்தான், நமது பெரியவர்கள் எவரையும் மனம் நோகாவண்ணம் பேசவேண்டும் என்று கூறினார்கள். ஒருவரது மனம் புண்பட்டு வெளியில் வருகின்ற வார்த்தை சத்திய வார்த்தையாக இருக்கும். அதுவே சாபமாக மாறவும் வாய்ப்புண்டு.

சாமியாடிகள், குறிசொல்லிகள் போன்ற சிலருக்கு அவர்களையும் அறியாமல் அந்தராத்மாவிலிருந்து பேசுகின்ற சக்தி இருக்கும். அதனால், அவர்கள் எவ்வளவு கேடுகெட்டவர்களாக இருந்தாலும், ஆவேசம் வந்து பேசும் போது அந்த சொல் பலித்து விடுவதாக இருக்கிறது. ஜோதிடர்களை பொருத்தவரை ஒருவனுக்கு, ஜோதிடம் தெரியுமா? தெரியாதா? என்பது முக்கியமல்ல. அவனது ஜாதகத்தில் கேது இரண்டாம் இடத்தில் இருந்தாலும், விருச்சிகத்தில் உச்சம் பெற்று இருந்தாலும், கண்டிப்பாக அவன் கூறுவது பலிக்கும். இதன்பெயர் தான் வாக்கு பலிதம் என்பது.





Contact Form

Name

Email *

Message *