Store
  Store
  Store
  Store
  Store
  Store

உணவு தருவது யார்?





குருஜி அவர்களுக்கு, வணக்கம். நான் சமீபத்தில் என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே உணவருந்தி முடித்ததும் வீட்டிலுள்ள அனைவரும் “அன்னதா த. ஸஸிகி பவ” என்று கூறினார்கள். அனைவரும் ஒரே குரலில் இந்த வசனத்தை சொல்லுகிற போது, கேட்பதற்கு இனிமையாக இருந்தது. இதன் பொருள் என்ன?  என்று அவர்களிடம் கேட்டபோது, உணவை தந்த கடவுளுக்கு நன்றி சொல்கிறோம் என்றார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. உணவு தானியங்களை படைத்தது கடவுளாக இருக்கலாம். ஆனால், அதை உணவாக சமைப்பதில் மனிதர்களின் பங்கும், மிருகங்களின் பங்கும் உண்டு. எனவே இவர்களையும் சேர்த்து நன்றி கூறாமல் கடவுளுக்கு மட்டும் நன்றி சொல்வது சரியானதாக எனக்கு தோன்றவில்லை. எனவே நீங்கள் இதற்கு விளக்கம் தருமாறு பணிவோடு வேண்டுகிறேன்.

இப்படிக்கு,
சுதாகரன்,
பொள்ளாச்சி.



நீங்கள் சொன்ன அந்த வார்த்தையின் பொருள், உணவை தந்தவன் சாஸ்வதமான சந்தோஷத்தில் இருக்கட்டும் என்பதாகும். கடவுள் என்பவன் நிரந்தரமாக ஆனந்தத்தை அனுபவித்து கொண்டிருப்பவன். அவன் ஒருபோதும் துக்கத்தில் வீழ்ந்து விட மாட்டான். எனவே, அந்த வாசகத்தை உருவாக்கியவன் கடவுளை நோக்கி மட்டுமே கூறுவதற்காக அதை உண்டாக்கி இருக்க மாட்டான். அதையும் தாண்டி அவனது சிந்தனை சென்றிருக்கும் என்று நினைக்கிறேன்.

“ஷம்னோ அஸ்துத் விவதே ஷம் ஷதுஷ்பதே” என்று கூறுவார்கள். அதாவது போஜனத்திற்கு காரணமாக இருக்கின்ற நிலம், விதை, ஏர், எருது, உழவன், வியாபாரி, வீட்டு எஜமானன், சமையல்காரன், பரிமாறுபவன் இறுதியாக இறைவன். இவர்கள் அனைவரும் எப்போதும் நன்மை அடைவதாக இருக்கட்டும். நிறைந்த வயிறோடும், நிறைந்த மனதோடும் அவர்களை வாழ்த்துகிறேன் என்பதே இதன் விரிவான பொருள். எனவே “அன்னதா” என்று துவங்கும் நீங்கள் கூறும் வாசகத்தின் அர்த்தமும், எல்லோரையும் வாழ்த்திவிட்டு இறைவனையும் வாழ்த்துவதாக இருக்கிறதே தவிர, நீங்கள் நினைத்தபடி இல்லை என்பது என் கருத்து.








Contact Form

Name

Email *

Message *