Store
  Store
  Store
  Store
  Store
  Store

இனி இந்தியா தான் வல்லரசு !




   சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த கதையாக போய்விட்டதே சீனாகாரன் பேச்சு வார்த்தை அது இதுவென்று சொல்லி பின்னுக்கு போனால் அந்த நேரத்தில் இந்த பிரதம மந்திரி வேறு லடாக் சென்று நிலைமையை முறுகலாக்கி விட்டாரே என்று சிலர் முனுமுனுப்பது நமது காதில் விழுகிறது இந்த முனுமுனுப்பு அமைதியை வேண்டுவதாக இருந்தால் பிரச்சனை இல்லை எதற்கெடுத்தாலும் பிரதமரை குறைகூற வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தால் அது சுத்தமான அறியாமையாகும் 


ஆதிகாலத்தில் நடந்த போர்களில் காலாட்படை தேர்படை யானைப்படை குதிரைப்படை என்ற சதுரங்க சேனைகள் பயன்படுத்தப்படும் இப்போதைய நவீன காலத்தில் விமானப்படை கப்பல் படை காலாட்படை போன்றவைகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் சமீப காலமாக எதிரிகளின் மீது மனோ ரீதியாக தாக்குதலை நடத்துவது கூட ஒருவித யுத்த தந்திரமாக இருந்து வருகிறது. 


எதிரிகளின் மன உறுதியை சிதைக்க வேண்டும் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும் உள்ளுக்குள் சிற்சில கலவரங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே மனோதத்துவ யுத்தத்தின் அடிப்படை விதியாகும். இதன் அடிப்படையில் நமது பிரதம மந்திரி லடாக் சென்று இராணுவ வீரர்களோடு கலந்துரையாடி இருப்பதும் ஒருவித ராஜ தந்திர யுத்தமே ஆகும். 


நமது இராணுவ வீரர்களுக்கும் சீன இராணுவ வீரர்களுக்கும் சில நாட்களுக்கு முன்பு கைகலப்பு ஏற்பட்டது அதில் நமது நாட்டு வீரர்கள் இருபது பேர் வீர மரணம் அடைந்தார்கள் பலர் படுகாயம் அடைந்தார்கள் நமது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் ஆறுதல் கூறியதும் நடந்தது இதை இந்திய தலைவர்கள் மட்டுமல்ல பாரத தேசத்தின் மக்கள் அனைவருமே மனம் நெகிழ்ந்து செய்தார்கள் 


ஆனால் சீன தரப்பில் இறந்து போன வீரர்கள் எத்தனை பேர் காயமடைந்தவர்கள் எவ்வளவு என்ற விபரங்கள் எதையுமே வெளியிட வில்லை இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் சம்ராதயங்கள் கூட அந்த நாட்டில் நடைபெறவில்லை சீன இராணுவத்தின் உயிரின் விலை இவ்வளவு தான் என்ற மாதிரியான சூழல் அங்கே நிகழ்ந்து வருகிறது. இதனால் அந்த நாட்டின் அதிபருக்கும் அரசாங்கத்திற்கும் எதிரான மனபோக்கு இராணுவத்தினர் மத்தியில் வளர்ந்து வருகிறது. இந்த நேரத்தில் நமது வீரர்களை உற்சாகப்படுத்தும் விதத்திலும் கெளரவபடுத்தும் விதத்திலும் நமது அரசு நடந்துகொள்ளும் போது சீன தரப்பில் கண்டிப்பாக சலசலப்பும் மன சோர்வும் ஏற்படும் இதை தான் நமது பிரதமர் தமது லடாக் பயணத்தில் முக்கிய நோக்கமாக கொண்டிருந்தார்.


ஆனால் இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாத இந்திய அறிவு ஜீவிகளில் சிலர் மோடியின் மேற்கொண்ட லடாக் பயணமே ஒரு விளம்பர யுத்தி உதாரணத்திற்கு காயப்பட்ட இராணுவ வீரர்கள் தங்கி இருந்த மருத்துவ மனையில் அறையை ஒரு செட்டப் அதில் உட்கார்ந்து இருப்பவர்கள் கூட இராணுவ வீரர்கள் அல்ல யாரோ சில மனிதர்கள் என்ற வகையில் எரிச்சல் ஏற்படுத்தும் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இது தான் வரம்பற்ற ஜனநாயகம் தரும் கட்டில்லாத சுகந்திரமாகும். இது நம்மை பிடித்திருக்கும் ஒரு வியாதி என்றே கூறலாம் 




கொரணா வைரசை உற்பத்தி செய்த சீன அரசாங்கத்தின் நயவஞ்சக போக்கால் உலக முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும் சீனாவில் அதன் உட்புறங்களில் வைரசின் பாதிப்புகள் மிக அதிகம் இறப்புகளின் எண்ணிக்கையில் கணக்கிலட முடியாததாகும். இத்தனை மக்கள் செத்து மடிந்திருந்தாலும் அதை பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாத சீனா அரசின் மீது அந்த மக்கள் கொதிப்பாக உள்ளார்கள் தற்போதைய அதிபர் மீது மக்கள் வைத்திருக்கின்ற வெறுப்பிற்கு அளவே இல்லை 


சீனாவுக்கு என்று ஒரு நரித்தந்திரம் இருக்கிறது இந்த தந்திரத்தின் பிதாமகர் மாசேதுங் ஆவார் அதாவது எதிரி நாட்டில் நிலத்தை மூன்றடி ஆக்கிரமிப்பு செய்வது எதிரி சுதாரித்து கொண்டு கூச்சல் போட்டால் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டடி பின்வாங்கி கொள்வது இதனால் ஒரு அடி நிலம் அவர்கள் ஆக்கிரமிப்பில் நிரந்தரமாக தங்கிவிடும். இப்படி தான் நேற்றுவரை அவர்கள் செயல்பட்டார்கள் ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது எப்போது ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் இந்தியாவையும் நிஜமான முதல் எதிரி சீனா என்று பகிரங்கமாக அறிவித்தாரோ அன்றே இந்தியா சுதாரித்து கொண்டிருந்தது. 


மேலும் தொண்ணூற்றி எட்டாவது வருடம் ஹாங்காங் நிலபரப்பை பிரிட்டன் சீனாவிடம் ஒப்படைத்த போது ஹாங்காங்கில் ஜனநாயகம் பாதுகாக்கபட வேண்டும் எந்த வகையிலும் மக்களில் கருத்து சுகந்திரம் பாதிப்படைய கூடாது என்ற நிபந்தனைகளை வைத்தே சீனாவிடம் ஒப்படைத்தது. ஆனால் நம்பிக்கை துரோகம் செய்வது சீனாவின் பரம்பரை குணம் என்பதை இப்போது பிரிட்டன் நன்றாக புரிந்து கொண்டு விட்டதால் ஹாங்காங்கில் இருந்து யார் வேண்டுமானாலும் இங்கிலாந்து குடியுறிமை வாங்கலாம் அதற்கு தடையில்லை என்று அறிவித்து விட்டது. சரியாக சொல்வதாக இருந்தால் சர்வதேச அரசியலின்படி ஹாங்காங் என்பது சீனாவின் மார்பில் பாய்ந்த ஈட்டியாகும். இதை வருங்காலம் அந்த நாட்டிற்கு உணர்த்தும். 




இரண்டாவது உலக போரின் போது ஜெர்மன் நாட்டு மக்கள் தங்கள் அரசாங்கத்தின் மீது எத்தகைய பயமும் நடுக்கமும் வெறுப்பும் கொண்டிருந்தார்கள் என்பதை வரலாறு நமக்கு தெளிவாக காட்டும் அந்த நிலை தான் இன்றைய நடைமுறை சீனாவில் இருக்கிறது சீன மக்கள் மட்டும் அந்த அரசு மீது பகைமை பாராட்டவில்லை ஒட்டுமொத்த உலகமே சீனாவை எதிர்கிறது பகைக்கிறது


நேற்றுவரை ரஷ்ய கரடியும் சீன பாம்பும் ஒட்டி உறவாடத பங்காளி போல பாவனை காட்டி வந்தார்கள் ஆனாலும் அவர்களுக்குள் மறைமுகமாக ஒரு நட்பு மான் ஓடிகொண்டே இருக்கும். அறுபத்தி இரண்டு யுத்தத்தில் கூட அமெரிக்காவின் உதவிகரம் இந்தியாவை நோக்கி வந்தபிறகே ஆசிய பகுதியில் அமெரிக்க குறிக்கிடு வந்துவிட கூடாது தனது ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக வேறு வழி இந்தியாவிற்கு உதவி செய்தார்கள் ஆயினும் சீன மஞ்சள் முகத்தின் மீது ரஷ்யர்களுக்கு தீராத காதல் இருந்தது 


பெற்றவளுக்கே விஷம் கொடுக்கும் சீனா காதலித்தவளை விட்டுவிடுமா என்ன சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நாலாயிரம் கிலோமீட்டர் எல்லை இருக்கிறது இப்போது சீனா அந்த எல்லை கோட்டை தாண்டி அதற்கு அப்பால் உள்ள சில ஆயிரம் சதுரகிலோமீட்டர் நிலபரப்பு சீனாவின் பகுதி அதை ரஷ்யா விட்டு விட்டு வெளியேற வேண்டும் என்று கூவ துவங்கி விட்டார்கள். இதனால் சீனாவின் நிஜ முகம் மாஸ்கோவிற்கு தெளிவாக தெரிந்துவிட்டது 


சீனாவில் உள்ள மங்கோலியர் பிரேதச மக்கள் தாங்கள் அநியமான முறையில் சீனாவோடு இணைக்கபட்டோம் எங்களுக்கு முழு சுகந்திரம் வேண்டுமென்று போராட துவங்கி இருக்கிறார்கள் சீனாவில் உள்ள இஸ்லாமிய மக்களும் தங்களுக்கு மத சுதந்திரம் வேண்டுமென்று கேட்க துவங்கி விட்டார்கள் சர்வதிகாரமான சட்டத்தை எதிர்த்து ஹாங்காங் வீதியில் போராட்டகாரர்கள் லட்ச கணக்கில் குவிந்து வருகிறார்கள் தைவானை பற்றி கேட்கவே வேண்டாம் எங்களுக்கு அனுமதி தாருங்கள் ஆதாரவு தாருங்கள் சீனாவின் மார்பை பிளந்து காட்டுகிறோம் என்று கூச்சலிடுகிறார்கள் 


மலேசியா, இந்தோனேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள் ஆரம்பத்தில் சீனாவின் பாட்டிற்கு தாளம் போட்டாலும் இப்போது எதிர்பாட்டு பாட ஆரம்பித்து விட்டார்கள். ஜப்பான் இந்தியாவோடு இணைந்து கூட்டு இராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கிறார்கள். 


ஆஸ்ரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உளவு அமைப்புகள் ஒருங்கிணைந்து சீனாவுக்கு எதிராக தகவல்களை திரட்டி சர்வதேச ரீதியில் நெருக்கடி கொடுக்க வேண்டுமென்ற நிலை உருவாகி வருகிறது. நேற்றுவரை இந்தியாவிடம் தயக்கம் காட்டிய ரஷ்யா நமது பாதுகாப்பு அமைச்சர் அங்கு சென்று வந்தபிறகு சீனாவின் போக்கிற்கு எதிர்ப்பு காட்ட துவங்கியதோடு அல்லாமல் இராணுவ தளவாடங்களை இந்தியாவிற்கு கொடுக்கவும் சம்மதித்து இருக்கிறார்கள். அதே போலவே இஸ்ரேல் நாடும் பலவித இராணுவ ஒத்துழைப்புகளை இந்தியாவுக்கு செய்ய முன்வந்திருக்கிறது அமெரிக்காவை பற்றி கேட்கவே வேண்டாம் இந்தியா சீனாவை நோக்கி ஒரு அடி எதிராக எடுத்து வைத்தாலும் பத்தடி நெருங்கி வர ஒத்துழைப்பு தர சீனாவை கூண்டோடு அழிக்க காலம் பார்த்து கொண்டிருக்கிறது ஏறக்குறைய அரபு நாடுகளில் நிலையும் அப்படி தான் ஒட்டுமொத்தமாக சொல்வதாக இருந்தால் சீனாவுக்கு எதிராக இந்தியாவுக்கு ஆதரவாக சர்வதேசமே அணிவகுத்து நிற்கிறது. 


இந்த நேரத்தில் தான் நாம் சர்வ ஜாக்கரதையாக இருக்க வேண்டும் அனைவுறம் நமக்கு கைகொடுக்க வருகிறார்கள் ஒரு ஆட்டம் தான் ஆடி பார்க்கலாமே என்று அசட்டு தனமாக அவசரப்பட்டு விட கூடாது காரணம் எப்போதுமே யுத்தம் என்பது நிரந்த தீர்வை தராது இன்றுநாம் நமது பொருளாதார வளர்ச்சிக்கு பலவிதமான முன்முயற்சிகளை எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் இந்த நேரத்தில் யுத்தம் வந்தால் அதை உடனடியாக முடிவுக்கு வராது. சில வருடங்கள் கூட இழுத்தடிக்கலாம் எனவே போர் என்பதை நாம் இறுதி ஆயுதமாக மட்டும் தான் வைக்க வேண்டும். மற்றப்படி ராஜதந்திர அடிப்படையிலும் அரசியல் ரீதியிலும் தீர்வு காண முயல வேண்டும். அவைகள் தோற்றால் வேறு வழி இல்லை யுத்தம் தான் ஒரே வழி ஆனால் அந்த யுத்தம் சீனாவை ஒரு நூற்றாண்டிற்கு எழும்ப முடியாத அளவிற்கு முதுகெலும்பை உடைப்பது போல் அமைய வேண்டும் 


சீனாவோடு யுத்தம் நடந்தாலும் சரி சமாதானம் ஏற்பட்டாலும் சரி வருங்காலம் என்பது இனி சீனாவுக்கு இல்லை இந்தியா தான் உலகின் இரண்டாவது வல்லரசாக வரபோகிறது ரஷ்யாவும் ஐரோப்பாவும் கடந்த காலத்தில் எப்படி சர்வதேச அரசியலை தீர்மானம் செய்ததோ அந்த நிலை இந்தியாவிற்கு வரும் இந்தியா உலகத்தை ஆளும் அதற்கு இது தான் முதல்படி முதல்வழி... சீன பூனை இந்திய யானையின் கால்களில் வீழ்ந்தே தீரும்.



குருஜி







Contact Form

Name

Email *

Message *