Store
  Store
  Store
  Store
  Store
  Store

நிம்மதியான வாழ்விற்கு சில வழிகள்



கேள்வி : மனசு அசுத்தத்துடன் இறை வழிபாட்டில் ஈடுபடுவோர்க்கு பலன் உண்டா?

    சர்வ நிச்சயமாய் உண்டு, நல்லவன் கெட்டவன் என்பதை வெளித்தோற்றத்தால் கணக்கிடமுடியாது, பொதுவாக வெளித்தோற்றம் மூலம் குணாதிசயங்களை எடை போடுகிறோம், “ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள் மிருகமும் உண்டு. தெய்வமும் உண்டு” இறைவனின் படைப்பில் யாரும் தீயவர் அல்ல, ஒழுங்கீனமான வாழ்க்கை நடத்திக்கொண்டு இறைவனை வழிபட்டவர்கள் ஒழுங்கீனத்திற்கான தண்டனை பெறும்போது சர்வ நிச்சயம் திருந்திவிடுகிறார்கள், தவறுக்கு தண்டனை எப்படி நிச்சயமோ. அப்படியே திருந்தலுக்கு இறைவன் அருள் நிச்சயம் கொலைசெய்தவன் கூட நடிப்பிற்காக. இறைவனை வழிபட்டால் அவன் சிறந்த மனிதனாக முடியும், வால்மீகி ஓர் வழிப்பறிக் கொள்ளைக்காரன் என்று உங்களுக்குத் தெரியும், அவன் நாரதரிடம் ஸ்ரீராமன மந்திர உபதேசம் பெறும்போது மந்திரத்தின் பொருளுணர்ந்தா செய்தான், உணராமல் செய்த ஜபத்தின் விளைவே அவன் உலக போற்றும் உத்தமனாகி காலத்தால் அழியாத காவியத்தை படைக்கவில்லையா? எனவே அசுத்த மனம்  என்பது ஒரு பிரச்சினையே அல்ல “மாசு” என்ற அழுக்கை “இறைபக்தி” என்னும் சோப்பு எப்படியும் துவைத்தே விடும்,


கேள்வி : வாழ்க்கையிலும். ஆன்மீக மார்க்கத்திலும் முன்னேற எளிய வழிகள் சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதா? அவற்றை நாம் அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பது எவ்வாறு?
  
நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய 9 வழிகள் உள்ளன,

1.    அதிகாலையில் எழுந்து நீராடி 5 நிமிடம் கண்கணை மூடி இஷ்ட தெய்வத்தை புருவமத்தியில் நினைத்து தியானம் செய்யவúண்டும், அவ்வாறு இயலாவிடில் 108 முறையாவது இறைவன் நாமத்தை உச்சரிக்க வேண்டும், நாளடைவில் ஈடுபாடு நிச்சயம் வந்துவிடும்.

2.    தினமும் சிறிது நேரமேனும் நல்ல ஆன்மீக புத்தகங்களைப் படிக்க வேண்டும் () மனதிற்கு இதமளிக்கக் கூடிய பக்திப் பாடல்களை கேட்கவேண்டும்.

3,    நேரம் கிடைக்கும்போது எல்லா ஆலயத்திற்கும் சென்று மனமுருக இறைவனை ஒரு கண நேரமேனும் வழிபடுங்கள், பின்பு கோயில் பரகாரத்தில் அமைதியாக சிறிது நேரம் இருங்கள்.
4,    ஒரு நாளைக்கு ஒருவருக்காவது சிறு உதவி ஏதேனும் செய்யுங்கள், அன்றாட பணிகளை “இறைபணியாக” நினைத்து கடமையாற்றுங்கள்.

5,    வாரம் ஒரு வேளையாவது உப்பும். சர்க்கரையும் இன்றி சாப்பிடுங்கள், கூடுமான வரை காரம். எண்ணைகளைத் தவிருங்கள், கீரை. காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

6,  மற்றவர்களுக்கு நீங்கள் செய்த உதவியை மறந்துவிடுங்கள், மற்றவர்கள் உங்களுக்குச் செய்த உதவியை மறக்காதீர்கள், மற்றவர்கள் செய்த தீமையை மன்னிக்க கற்றுக் கொள்ளுங்டகள். மற்றவர்களைப் புரிந்து கொள்ள முயலுங்கள், இதனால் கோபம் என்பதே வாழ்வில் வராது.

7.  முடிந்தவரை உண்மையை பேசுங்கள், எதிராளிகளிடம் பேசும்போது சப்தமின்றி மென்மையாக பேசக்கற்றுகொள்ளுங்கள், “வாரத்தில் 2 மணி ” நேரமாவது மௌன விரதம் இருக்க பழகுங்கள்,

8. சத்துள்ள உணவை உண்ணுங்கள், அதை குறைவாக உண்ணுங்கள், எந்த உணவையும் இறைவன் பிரசாதமாக நினைத்து சந்தோஷமாக சாப்பிடவும்.

9.   கூடுமானவரை திரைப்படம். டி,வியை தவிருங்கள், “மாதத்தில் ௨ நாள் தவிர மற்ற நாட்களில் பிரம்மச்சரியத்தை கடைபிடியுங்கள்” திருமணமான ஆணும். பெண்ணும் பாலியல் சிந்தனையில் இருந்து விடுபட குழந்தைகளோடு பழகுங்கள், அவர்கள் செயல்களை ரசியுங்கள், இந்த 9 கருத்துக்களில் சிலவற்றையேனும் நாம் கடைபிடித்தால் ஆன்மீகத்திலும். வாழ்விலும் நாம் முன்னேற முடியும்.

இதற்கு உதாரணமாக என்னிடம் வரும் பலரை நான் காட்ட முடியும்.

Contact Form

Name

Email *

Message *