Store
  Store
  Store
  Store
  Store
  Store

நிஜ மதத் தீவிரவாதிகள் யார்?

       முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், தீவிரவாதிகள் உருவாகுவதில்லை, உருவாக்கப்படுகிறார்கள், வாழ்க்கையில் “சகல கோணங்களிலும்” விரக்தியுற்ற இளைஞர்களை அதிகார வேட்கையும். சுயநலமும் கொண்ட ஒரு சாரார் தங்களது திட்டங்களுக்கு பலியிடுகிறார்கள், “கசாப்பு கடைக்காரனை நம்பும் ஆடுகள் போல்” பாவம் அந்த இளைஞர்கள் அந்த தீவிரவாத தலைவர்களை நம்பி ஏமாற்றப்படுகிறார்கள்


   எந்த குற்றவாளியையும மன்னிக்கலாம், தீவிரவாதத்தை தூண்டும் குற்றவாளிகளை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மன்னிக்கவே கூடாது, இறைசக்திக்கு எதிரான சாத்தான் அன்று முதல் இன்றுவரை தோன்றிக் கொண்டு இருக்கிறார்கள், இவர்கள் மனித குலத்திறக்கு மட்டும் விரோதிகள் அல்ல.தாவர ஜன்மங்கள் அனைத்திற்கும் விரோதிகள்.


      நீங்கள் குறிப்பிடுவதைப் போல் மததீவிரவாதம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் மதம் என்பது தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்டது, மதத்தின் பெயரால் தீவிரவாதம் நடத்துபவர்கள் அந்தந்த மதத்தின் விரோதிகள், எந்த மதமும் எந்த மதநூலும் பலாத்காரத்தையும். யுத்தத்தையும் ஆதரிக்கவில்லை

    மதத்திற்காக போராடினோம் என்பவர்களைப் பார்த்தால் “பூனையும் புலியும் சைவ உணவின் மேன்மையைப் பற்றி பேசுவது போல் உள்ளது”, இத்தகையவர்கள் தான் சாக்ரடீசுக்கு விஷம் கொடுத்தார்கள். இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். நபிகளை கல்லால் அடித்தார்கள். கருணைக் கடலான கண்ணபிரானை கயவன் என்றும் திருடன் என்றும் தூசித்தார்கள்        எனவே தீவிரவாதம் என்பது கயமைத்தனமானது, இத்தகைய கயவர்கள் நிச்சயம் இறைவனால் எக்காலத்திலும் தண்டிக்கப்படுவார்கள்.


Contact Form

Name

Email *

Message *