Store
  Store
  Store
  Store
  Store
  Store

திமுக வெற்றி பெற விஜய்காந்த் முயற்சி!


  தொடை தெரியும் வண்ணம் தூக்கிக்கட்டிய வேஷ்டி பட்டன் போடாத சட்டையில் புரளும் சைக்கிள் செயின் கையில் உடைத்த சோடாப் பாட்டில் பீடிப்புகை கசியும் வாயிலிருந்து ஒழுகும் கெட்ட வார்த்தை இது அந்தக்காலத்தில் தெருவில் வலுச்சண்டைக்கு இழுக்கும் போக்கிகளைப்பற்றி வளக்கமாக செய்யப்படும் வர்ணனை

 இந்த வர்ணனை இன்று ரௌடிகளுக்கு பொருந்துகிறதோ இல்லையோ தங்களை வருங்காலத் தமிழத்தின் விடிவெள்ளி என அழைத்துக் கொள்ளும் தலைவர்களுக்கு நன்றாக பொருந்தி வருகிறது

 வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையில் இருக்கிறார்களே தவிற இவர்களின் செயல்பாடுகள் என்னவோ குப்பத்து வஸ்த்தாதுக்களின் வூடு கட்டுகின்ற லக்ஷ்சணமாகத்தான் இருக்கிறது


 போலிஸ்காரர்கள் ராணுவவீரர்கள் மின்சார ஊழியர் சுத்திகரிப்பு தொழிலாளிகள் போன்ற மக்கள் பணியாளர்களுக்கு காக்கி வண்ணத்தில் உடுப்பு கொடுப்பது அவர்களை சேவையாற்றுபவர் என்று பிரித்துக் காட்டத்தான்

 அதேப்போல வெள்ளை ஆடை என்பதே அரசில்வாதிகளின் சீருடை என்றாகி வெள்ளையை கண்டாலே பயமாக இருக்கிறது

காந்தியின் வெண்மைக் கதராடை இந்த அளவுக்கு தரம்கெட்டுப் போச்சே என்று வருத்தமாகவும் இருக்கிறது

 இன்று தமிழகம் எங்கும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுள்ள தலைவர்களைப் பார்த்தால் கண்ணுக்கு குளிர்ச்சியாகத்தான் உள்ளது

  ஆனால் அவர்கள் வாயிலிருந்து உதிரும் முத்துக்களை கேட்டால் நமக்கு செவிகளை கொடுத்த கடவுளைத் திட்டத் தோன்றுகிறது இதையெலாம் கேட்பதற்கு பதிலாக செவிடாகவே படைத்திருக்கலாமே  என்றும் தோன்றுகிறது


  சரியோ தவறரோ நல்லதோ கெட்டதோ கலைஞர் ஜெயலலிதாவுக்கு அடுத்தத் தரத்தில் சொல்லக் கூடியவராக விஜயகாந்த்தை மக்கள் பார்க்கிறார்கள்

 அவர் ஒரு நடிகர்தான் யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களை பேசிவிட்டு போகக்கூடியவர்தான்

அரசியலை பற்றியும் தமிழகத்தின் பண்பாட்டுச் செழுமை பற்றியும் முற்றிலுமாக அறிந்தவர் என்று யாரும் அவரைச் சொல்ல வில்லைத்தான்

 ஆயினும் அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்ட ஒரு கூட்டம் நாட்டில் இருக்கிறது

 விஜயகாந்த் தனக்காக இல்லையென்றாலும் தன்னை நம்பியக் கூட்டத்தார்களுக்காக வேண்டியாவது பண்பாட்டோடு நடந்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளார்



 பிரச்சாரக் கூட்டங்களில் முன்னுக்குபின் முரணாகப் பேசுவதும் தனது கட்சி வேட்பாளரேயே தாக்குவதும் தமிழக தேர்தல் வரலாறு முதல் முறையாகப் பார்க்கிறது

  கழுதையின் வாலில் தகர டப்பாவை கட்டி விடுவதும் கூட்டத்திற்குள் பன்றிகளை விரட்டி விடுவதுமாகிய காலாட்சார மறுமலர்ச்சியை உண்டாக்கிய திராவிடக்கட்சிகள் கூட இத்தகைய செயல்களை பகிரங்கமாக செய்ததில்லை

அரசியலுக்கு மிக இளையவரான விஜயகாந்த் இப்படி நடந்து கொள்வது தொடர்ந்தால் தமிழனின் மானம் மட்டுமல்ல அவரும் காணால் போகலாம்

தண்ணீல் விழுந்து மூழ்கியவனுக்கு கரையேற மூன்றுமுறை கடவுள் வாய்ப்புக் கொடுப்பாராம்

அதிலும் தப்ப முடியவில்லை என்றால்  கதை அவ்வளவுத்தானாம்  

விஜயகாந்தின் அறிவுத்திறனும் செயல் நுணுக்கமும் எப்படிப்பட்டதென்று ஊராரை விட அவருக்கு நன்றாக தெரியும்

இருந்தாலும் கடவுள் ஒரு மகத்தான வாய்ப்பை அவருக்கு கொடுத்திருக்கிறார்

அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவர்தான் தவறினால் தலைக்குப்புற விழுவது வேறு யாருமில்லை!

மனைவி மைத்துனன் போன்ற அனுபவமில்லாதவர்கள் மட்டும்தான் அவர் பக்கத்தில் உள்ளார்கள் என்றால் விஜயகாந்த்துக்காக வருத்தப்படலாம்

 ஆனால் தனது வாதத்திறத்தாலே ஐ. நா . மன்றத்தில் உலகத்தின் பார்வையை இலங்கைத் தமிழர்பால் திருப்பிய பண்ருட்டி ராமச்சந்திரனும் அவர் அறுகில்தன் உள்ளார்

இந்திராக்காந்தி எம். ஜி . ஆர். போன்ற அரசியல் ஜாம்பவான்களால் உருவானவர் ராமச்சந்திரன் அவரை பக்கத்தில் வைத்துக் கொண்டு  அநாகரீகமான செயல்களை கடைபிடித்தால் விஜயகாந்தின் அரசியல் தெளிவைப் பற்றி நிச்சயம் மக்கள் சந்தேகிப்பார்கள்

இப்போதுகூட அடித்தட்டு மக்களும் அதிகாரம் பெருவதற்கு முன்பே இப்படி நடக்கிறாரே பெற்றால் எப்படி நடந்துக் கொள்வார் என பேச ஆரம்பித்து விட்டனர்

  இது ஆட்சிமாற்றம் வேண்டுமென எதிர்பார்க்கும் பலரையும் சிந்திக்க செய்தால் தி.மு.க.வுக்கே சாதகமாகப் போகும்

ஒட்டுமொத்த பாசிச ஆட்சித் தொடர வழி செய்த பாவம் விஜயகாந்த் தலையின் மீதே விழுந்து வெடிக்கும்



Contact Form

Name

Email *

Message *