Store
  Store
  Store
  Store
  Store
  Store

வால் உதிர்ந்த மனிதன்


   குரங்கிலிருந்து பரிணாம் பெற்று வந்தவன் மனிதன் என விஞ்ஞானம் சொல்கிறது

கிறிஸ்தவ மதம் அதை ஏற்க மறுக்கிறது

  நமது இந்து மதம் பரிணாம கொள்கையை ஏற்றுக் கொள்கிறதா? அல்லது ஏற்க வில்லையா என்று சிலர் குழம்புகிறார்கள்

தனது உடலுறுப்புகளால் செய்ய முடியாத காரியத்தை புறக்கருவிகளை வைத்து செய்து முடிப்பது அறிவு வளர்ச்சியின் மிக முக்கியமான காலக்கட்டமாகும்.

  கை விரல்களையும் நகங்களையும் மட்டுமே ஆயுதங்களாக பயன்படுத்தினால் தனக்கு தேவையான உணவை பூரணமாக பெற இயலாது என தெரிந்து கொண்ட ஆதி மனிதன் கற்களையும் மரக் கட்டைகளையும் ஆயுதமாக பயன்படுத்த ஆரம்பித்தான். 


  இது தான் மனித அறிவு வளர்ச்சியின் துவக்கமாகும்.

 இந்த அறிவை மனிதன் மட்டும் பெற்றிருக்கவில்லை.  சில பறவைகளும் விலங்குகளும் கூட பெற்றிருக்கின்றன.

  மர இடுக்குகளில் ஒழிந்திருக்கும் சிறிய புழுக்களை காக்கைகள் தங்கள் அலகுகளால் கொத்த முடியாத போது சிறு குச்சிகளை பயன்படுத்தி வேட்டையாடுகின்றன.

  சில வகை குரங்குகள் உடைத்து தின்ன முடியாத கொட்டைகளை கல்லால் நசுக்கி உண்ணுகின்றன.

 இதற்காக அவைகளும் மனிதனை போல அறிவு வளர்ச்சி அடைய துவங்கி விட்டது என சொல்ல முடியுமா? 

சார்லஸ் டார்வின் ஆதார பூர்வமாக நிரூபித்துள்ளார்.  அவரது கருத்துக்களை உலகில் பெரும் பகுதியினர் ஏற்றுள்ளார்கள் என்றாலும் அதில் ஏற்க முடியாத சில காரணங்கள் உள்ளன.


   நாம் காணுகின்ற இந்த உலகில் மிக தொன்மை காலத்தில் வாழ்ந்த சில உயினங்களின் படிவங்கள் கிடைக்கின்றன.

 அந்த படிவங்களையெல்லாம் பொதுவாக ஆராயும் போது அழிந்து போன உயினங்கள் தவிர மற்றவைகள் பல லட்சம் வருடங்களுக்கு முன்னால் எப்படியிருந்ததோ அப்படியே இன்று வரை இருக்கின்றன.

  உதாரணமாக பலகோடி ஆண்டுகளுக்கு முன்னால் யானை, நெருப்புக் கோழி போன்ற உயினங்கள் எப்படியிருந்ததோ அப்படியே தான் இப்போதும் உள்ளன

  இதிலிருந்து இது உருவாகியிருக்கலாம் என்பது எல்லாம் வெறும் அனுமானங்களே தவிர அவைகளுக்கு எத்தகைய ஆதாரமும் இல்லை.

 குரங்லிருந்து மனிதன் வந்தான் என்றால் இன்றைய குரங்குகள் எதுவும் மனிதர்களாக மாறவில்லையே ஏன்?

 பரிணாம தத்துவப்படி குரங்கு மனிதனாக வளர்ச்சி பெற்றது என்றால் மனிதனும் வளர்ச்சி பெற்று வேறொன்றாக ஆகியிருக்க வேண்டும்.  அப்படி ஏதும் நிகழவில்லையே. அது ஏன்?

  இப்படி எத்தனையோ கேள்விகளுக்கு டார்வின் தத்துவத்தால் பதில் சொல்ல முடியாது.

 ஆகவே பரிணாம தத்துவம் என்பது என்னை பொறுத்த வரை நிஜமாக தோன்றும் ஒரு அழகான கற்பனையே ஆகும்.  அதாவது இது என் சொந்த கருத்தாகும்

  இந்து மதத்தின் கருத்து இது அல்ல.

 நமது இந்து மதம் மனிதனுக்கும் விலங்கிற்கும் நடுவில் குரங்குகள் இருப்பதாக கருதுகிறது.

 அதனால் தான் குரங்கிற்கு வானரம் என்ற பெயரை அது தந்துயிருக்கிறது.

 வானரம் என்றால் அப்படியா என்று அர்த்தம்.  அதாவது இது மனிதன் தானா?  என்ற சந்தேக தொனி அமைந்த வார்த்தை இதுவாகும்.

  வானரம் என்பதற்கு வேறொரு அர்த்தத்தையும் சொல்லலாம். வா என்றால் வால் என்றும் நரம் என்றால் மனிதன் என்றும் பொருளாகும்.

 அதாவது வால் உள்ள மனிதன் என்று சொல்லலாம்.

இந்த வார்த்தையின் பொருளே டார்வின் தத்துவத்தை மிக நெருக்கமாக சுட்டிக்காட்டுவதை வைத்து கிறிஸ்தவ மதம் போல இந்து மதம் பரிணாம கொள்கைக்கு விரோதமானது அல்ல. என்று சொல்லலாம்



Contact Form

Name

Email *

Message *