( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )30 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இல்லற வாழ்வைத் தரும் இனிய மூலிகை

     ல்யாணம் கட்டினாலும் கட்டினேன் என் சந்தோஷம் எல்லாம் கற்பூரம் போல கரைந்து போய்விட்டது. என் அப்பா கண்ணில் சிறு தூசி கூட விழ அனுமதிக்க மாட்டார். ஒரு கஷ்டம் எனக்கென்றால் பதறி போய் விடுவார். ஜல தோசம் ஜுரம் என்றால் கூட ராத்திரி முழவதும் உறங்காமல் அருகிலேயே உட்கார்ந்து நெற்றியை தொட்டு தொட்டு பார்ப்பார். என் உள்ளங்காலில் சூடு பறக்க தேய்த்து விடுவார்.

என் அம்மாவை பற்றி கேட்கவே வேண்டாம். வளர்ந்து பெரியவளாகி விட்டாலும் சாதம் பிசைந்து ஊட்டிவிடுவார். வீட்டில் தண்ணி இல்லையென்றால் நடந்து சென்று நான் குளிக்க குடம் குடமாய் தண்ணீர் கொண்டு வருவாள். வேளைக்கு ஒரு தாவணி கட்டி கை நிறைய வளையல் போட்டு நான் நடந்து செல்லும் அழகை மீண்டும் மீண்டும் பார்த்து ரசிப்பாள்.


   ஒன்ணாங்கிளாஸ் முதல் கூடவே படித்த சாந்தி இருக்கிறாளே தினம் என்னை பார்க்கவில்லை என்றால் உயிரையே விட்டுவிடுவாள். அவளும் நானும் ஆடிய ஆட்டம் கொஞ்சமா என்ன? தங்கராசு தோட்டத்தில் மாங்காய் திருடி வேலிதாண்டி ஒடியதை சொல்லவா? அய்யானார் குதிரை மேல் ஏறி புளியங்காயை காக்கா கடி கடித்ததை சொல்லவா? என்னை முதல் முறையாக கண்ணடித்த பையனை நானும் அவளும் சேர்ந்து ஓட ஓட விரட்டியதை சொல்லவா? இப்படி எத்தனையோ சந்தோஷங்களை பட்டியலிட்டு கொண்டே போகலாம்.

      ஆனால் இன்று மாமனாருக்கு வெந்நீர் போட்டு கொடுத்து முதுகு வலிக்கிறது. புருஷன் துணிகளோடு அவன் அம்மா அப்பா துணிகளையும் சேர்த்து துவைக்க வேண்டும். சத்திரம் மாதிரி கட்டிய வீட்டை அடுப்பங்கரையிலிருந்து வெளிவாசல் வரை தினம் மூன்று வேளை பெருக்கி துடைக்க வேண்டும்.

 மலை போல் குவிந்து கிடக்கும் பாத்திரங்களை தேய்த்து கழவி ஒழங்குப்படுத்த வேண்டும். இத்தைனையும் செய்தாலும் அத்தனையிலும் குறை கானும் மாமியார்


  வாரத்திற்கு இருமுறை தாய் தகப்பனுக்கு  போன் செய்யாமல் இருக்க முடியாதோ? உன் அம்மா எதற்கும் உதவாதவளவாக உன்னை வளர்த்து விட்டுயிருக்கிறாளே என்று நாக பாம்பாய் நாலு முறை சீறி விழகிறாள்.

கட்டியவனிடம் குறைகளை கொட்டித்தீர்கலாம் என்றால் என் அம்மா சொல் கேட்டு நடப்பதாக இருந்தால் வீட்டில் இரு முடியவில்லையென்றால் அப்பன் வீட்டுக்கு போ என்கிறான்.

அத்தோடு நிற்பானா? மாடு மாதிரி வளர்ந்து இருக்கிறாயே தவிர மண்டையில் மூளையே கிடையாது. ஊரில் அவனவன் பெண்டாட்டி எத்தனை நகையும் பணத்தோடு வருகிறாள் உன்னை கட்டிக் கொண்டு தலை தீபாவளிக்கு ஒரு மோதிரத்தை கூட பார்க்கவில்லை. சீர் செய்ய வக்கில்லாத உன் தகப்பன் உன்னை எதற்காக பெற்றான் என்று நெருப்பாய் பொழிகிறான்.

இப்படி பல பெண்கள் காலகாலமாக எதற்கடா கல்யானம் செய்தோம் என்று புலம்பி கொண்டு திரிந்தாலும்.


  திருமணத்தன்று வளர்த்த நெருப்பில் என் சந்தோஷம் எல்லாம் பொசுங்கி விட்டது. உன் தங்கையோடு சிரித்து பேசாதே, உன் தமையனோடு சகஜமாக பழகாதே, நல்லவர்கள் போல் பேசி நடித்து உன்னிடம் இருப்பதை எல்லாம் பிடுங்கி வடுவார்கள்.

 உன் அம்மாவின் முகமே சரியில்லை எப்போது நீ ஏமாறுவாய் என்று பார்த்து கொண்டே இருக்கிறார்கள். நடுத் தெருவில் உன்னை விட்டுவிடுவார்கள் என்று தாலி கட்டிய நாள் முதலாய் வார்த்தைகளால் இடிக்கிறாள்.

 அது என்ன அந்த சங்கரனுக்கு வேறு வேலையே இல்லையா எப்ப பார் உன் பின்னாலையே சுற்றுகிறான் அவன் தொடர்பை என்று நீ விடுகிறாயொ அன்றுதான் உருப்படுவாய் என்று பால்யகால சிநேகிதனை வெட்டிவிட சொல்கிறாள்.

 பவானி ஜவுளிகடையில் புதுப்பது ரக சேலைகள் வந்துயிருக்கிறதாம். காலம் முழக்க உங்களை கட்டிக்கொண்டு அழவதை விட ஒரு நாலு சேலையாவது எடுத்து தாருங்கள் அதை கட்டிக் கொண்டு அழகிறேன்

இவ்வளவு அழகான கழத்தில் இரண்டே இரண்டு செயின்களை போட்டு நடமாடவே வெட்கமாக இருக்கிறது. பச்சை கல் பதித்த ஒரு நெக்லஸ் வட்டிக்கு பணம் வாங்கியாவது போட்டே ஆக வேண்டும்.  உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள் என்று அனுதினமும் வயிற்றில் புளியை கரைக்கிறாள்.


  நிம்மதியாக உட்கார்ந்து பேப்பர் படிக்கவில்லை, நண்பர்களோடு காற்றாட நடந்து போக முடியவில்லை, அவ்வளவு ஏன் என் சுயவிருப்படி ஒரு சட்டை கூட போட முடியவில்லை அவளுக்கு கட்டிய தாலியோடு என் சுகந்தரத்தையும் சேர்ந்து கட்டி விட்டேன் என் சிரிப்பு சத்தம் கெட்டிமேள சத்தத்தோடு பெட்டி பாம்பாக அடங்கி விட்டது

என்று பல ஆண்கள் புழங்கி கொண்டிருந்தாலும் யாரும் திருமணத்தை வேண்டாம் என்று வெறுப்பாரில்லை.
          
   பாலைவன கப்பல் என்று அழைக்கப்படும் ஒட்டகத்திற்கு கள்ளிச்செடி மிகவும் பிடித்தமான உணவு கள்ளியில் இருக்கும் முட்கள் நாக்கையும், வாயையும் குத்தி கிழித்து காயப்படுத்தினாலும் ரத்தம் சொட்ட சொட்ட மீண்டும் மீண்டும் கள்ளி செடியை தான் தின்னும்.

 சுவை உணரச்சிக்கே அடிமையாகி போன ஒட்டகம் போல் மனிதர்கள் திருமணத்தால் கஷ்டம் என்று தெரிந்தாலும் அந்த பந்தபாச சூழலுக்குள்ளேயே தங்களை தாங்களே அழுத்தி கொள்வதற்கு என்ன காரணம்? 


நிறைய பேரிடம் அதாவது இன்னும் தனக்கு திருமணம் நடக்கவில்லையே என்று கவலைப்படும் ஆண் பெண்களிடம் கல்யானம் என்பது அத்தியாவசிய தேவைதானா அது இல்லாமல் வாழ முடியாதா என்று கேட்டுருக்கிறேன்.
           
அதற்கு அவர்கள் உடம்பில் தெம்பு இருக்கின்ற வரை வாழ்கை துணையின் அவசியம் தெரியாது. சற்று வயாதாகி விட்டால் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் எத்தனை சொத்து பத்துக்கள் இருந்தாலும் உடம்புக்கு ஒன்று என்று படுத்துவிட்டால் கவனிப்பதற்கு நமக்கு என்று ஒரு துணை வேண்டும்.

 நமது ஆயுள் முழுவதும் பெற்றோர்கள் கூடவே வரமாட்டார்கள். உடன் பிறப்புகள், நண்பர்கள் இன்னும் எத்தனையோ உறவுகள் இருந்தாலும் அத்தனை பேரும் நம்மை கவனிக்க வேண்டுமென்று எதிர்பார்க்க முடியுமா? அல்லது அது சாத்தியம்தானா?

நல்லதோ கெட்டதோ உனகென்று நான் எனக்கென்று நீ என்று இருப்பது கணவன் மணைவி உறவுதான், பெற்ற பிள்ளைகள் கூட நம்மோடு இருப்பார்கள் என்று உறுதி தர முடியாது. ஆனால் கணவன் மணைவி உறவு என்று வரும் போது பரஸ்பரம் ஒரு கடமை இருக்கிறது, கட்டாயம் இருக்கிறது. அதனால் கல்யாணம் அவசியம் தான் என்கிறார்கள்.


   இவர்களின் பேச்சை கூட்டி கழித்து பார்த்தால் திருமண உறவு என்பது அல்பமான உடல் சம்பந்தப்பட்டது அல்ல என்பது நன்றாக புரிகிறது.

 எனக்கு ஒரு கஷ்டம் வந்தால் அதை பகிர்ந்து கொள்ள ஒரு உறவு இருக்கிறது என்ற நம்பிக்கை மனிதன் மனதில் உள்ள பயத்தை போக்கி விடுகிறது, நோயில் படுத்தால் கூட கஞ்சி கொடுக்க ஆள் இருக்கிறது என்று நம்புகிறவன் தான் நோயிலிருந்து மீண்டு வரமுடியும்.

 அய்யோ எனக்கு யாருமில்லையே என்ற எண்ணமே நோயின் கொடுமையை பலமடங்கு உயர்த்திவிடும். அதே நேரம் இயற்கையின் சட்டமே ஆணும் பெண்ணும் இணைந்திருப்பதாகதான் அமைத்து இருக்கிறது.

 அந்த இயற்கை விதியிலிருந்து மாறுபட்டு வாழ நினைப்பவன் தனது நம்பிக்கையின் ஊன்று கோலை வேறு எதிலாவது வைத்திருக்க வேண்டும். அப்படி வைக்கவில்லையென்றால் வாழ்கையில் பல தடுமாற்றங்கள் வந்துவிடும்.


  இல்லறம் வேண்டாம் துறவரம் தான் தேவையென்று ஆன்மிக வாழ்வை மேற்கொண்ட சாதுக்கள் தங்களது பற்றுதலை தெய்வத்தின் மீதோ தேசத்தின் மீதோ வைக்கவில்லையென்றால் நிச்சயம் ஒருநாள் ஓட்டை படகாகி ஆசை என்ற குளத்திற்குள் முழ்கி விடுவார்கள்.

 இத்தகைய பலரால் தேகாபிமானத்தை விட முடியாமல் தவிக்கும் போது தான் பொது வாழ்விலும் களக்கம் ஏற்படுகிறது. ஆனால் பிரம்மசரிய வாழ்கை என்பது சவால்மிகுந்ததாக இருந்தாலும் பல சாதனைகளை படைக்க துணை செய்கிறது.

 இதுவரை உலகத்தில் சிறந்த மனிதர்கள் என்று கருதப்படும் பலருடைய வாழ்கையை எடுத்து பார்த்தோம் என்றால் ஒன்று அவர்கள் குடும்ப வாழ்கை சோபிதம் இல்லாததாக இருந்திருக்க வேண்டும் அல்லது அவர்கள் குடும்பத்தை கவனிக்காதவர்களாக இருந்திருக்க வேண்டும்.

 மகாத்மா காந்தி  போன்றவர்கள் திறமசாலியான குடும்ப தலைவர்களாக இருந்திருந்தால் நல்ல குழந்தைகளின் தந்தையாக இருந்திருக்கலாமே தவிர தேசதந்தையாக உயர்திருக்க முடியாது. 


எனவே தான் பொது வாழ்விலும் ஆன்மிக வாழ்விலும் ஈடுபடுபவர்களுக்கு குடும்பம் என்பது பெரிய விலங்காகவே இருந்திருக்கிறது.

 நமது கலைஞர் கருணாநிதி அவர்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் அவருக்கு இருக்கும் திறமைக்கும் அறிவுக்கும் குடும்பம் என்பது ஒன்று மட்டும் இல்லாது இருந்திருந்தால் கர்மவீரர் காமராஜர், அடல்பிஹாரி வாஜ்பாய் போன்ற தலைவர்களின் அளவிற்கு உயர்ந்தவராக மதிக்கப்பட்டு இருப்பார்.

 ஆனால் பாவம் அவரது குடும்பம் அவரை சேற்றில் போட்டு உருட்டி எடுப்பதோடு மட்டுமல்லாமல் பாறையிலும் மோதுகிறது. எப்பேர்பட்ட தலைவர் என்று வியந்து பார்பதற்கு பதிலாக இப்படியும் தலைவரா? என்று முகம் சுளித்து பார்க்கும் அளவிற்கு போனதற்கு குடும்பம் தான் காரணம் என நமக்கு நன்றாக தெரியும்.

         உலக விஷயங்கள் இருகட்டும் மதங்களில் திருமண வாழ்கையை பற்றி என்ன சொல்லப்பட்டுருக்கிறது என்பதை பற்றி சிறிது சிந்தித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.


  இந்துமதம், கிறிஸ்த்துவ மதம் ஆகிய இருபெறும் மதங்களும் மனிதர்கள் குடும்பம் நடத்த கூடாது என்று சொல்லவில்லை என்றாலும் கடவுளை நோக்கிய பயணத்திற்கு இல்லறம் தடையாகவே இருக்கும் துறவறம் தான் சரியாக இருக்குமென்று சொல்கின்றனர். அதுவும் குறிப்பாக மத போதகர்களும், குருமார்களும் நிச்சயம் பிரம்மசரியத்தை கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்துகின்றன. அதே நேரம் சாதாரன மனிதர்கள் குடும்ப வாழ்விற்கு தடை போடுவது கிடையாது.

  ஆனால் கிறிஸ்த்துவ மதத்தில் ஒரு பிரிவினராகிய பிராட்டஸ்செண்டுகள் மத குருமார்களும் இல்லரவாசிகளாக இருக்கலாம் என சொல்கிறார்கள் இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மனிதடமுள்ள இயற்கையான காம உணர்வு கடடுபடுத்த கூடியது அல்ல இயற்கைக்கு விரோதமாக அதை தடுக்க நினைத்தால் மனிதனது புத்தி குறுக்கு வழியை தேர்ந்தெடுத்து ஒழுக்கமற்ற நிலைக்கு அழைத்து செல்லும். இதனால் கடவுளை நோக்கிய பயணம் தடைப்பட்டு போகலாம். என்று சொல்கிறது. இஸ்லாமிய மதமும் எறக்குறைய இதே கருத்தை தான் சொல்கிறது. சந்நியாச வாழ்கையில் இருக்கும் சில மனிதர்கள் நடந்து கொள்ளும் விதங்களை பார்த்தால் இது சரியான கருத்து தானோ என்று நமக்கு தோன்றும்.

          சாதாரணமாக அறிவை கொண்டு பார்க்கும் போது இந்த கருத்தில் எந்த குற்றமும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் நமது அறிவை தீட்சன்யப்படுத்தி பார்க்கும் போது புலனடக்கம் என்பது இல்லையென்றால் கடவுளை அடைவது என்பது சாத்தியம் இல்லாமலேயே போய்விடும் என்பது தெரியும்


  இந்துமதத்தில் ஒரு பிரிவான பதஞ்சலி முனிவரின் யோகமார்கம் புலன்களை அடக்குவதற்கு பல வழிவகைகளை சொல்கிறது. அந்த வழியில் நடந்தால் பிரம்மசரியம் என்பது சாத்தியம் இல்லாத விஷயமல்ல  இன்று கூட பலர் அந்த வழியில் சென்று ஒழுக்கம் தவறாத உயரிய வாழ்கை நடத்தி கொண்டு இருக்கிறார்கள். யோகாசாரம் என்றால் என்னவென்று தெரியாதவர்களும், தெரிந்து இருந்தாலும் கூட நடைமுறையில் செய்ய  தவறியவர்களும் புரிகின்ற குற்றத்தால் பிரம்மசரிய வாழ்கை பலராலும் விமர்சிக்கபடுகிறது.

  ஆன்மீக வாழ்கையென்பது சந்நியாசத்தாலும், பிரம்மசரியத்தாலும் தான் நடத்த முடியுமென்ற கருத்தில் உறுதியாக இருக்கும் பௌத்த ஜெயின மதங்கள் சம்சார வாழ்கையானது கடவுளிடம் சேர்காது என்று சொல்வது போல இந்து மதம் சொல்லவில்லை.

 புலன்களை அடக்கி ஒரு ஆன்மீக சாதகன் எந்த லட்சியத்தை அடைவானோ அதே லட்சியத்தை சிறிதும் குறையாமல் ஒழக்க நெறியும் கடமை உணர்வும் கொண்ட இல்லறத்தாலும் பெறலாம் என்று சொல்கிறது. குடும்ப வாழ்கையை பற்றி மதங்களிடையே கருத்து வேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் இல்லறத்தான் துறவறத்தான் ஆகலாம். ஆனால் எந்த நிலையிலும் துறவறத்தான் இல்லறத்தானாக மாறவே கூடாது என்று இந்திய மதங்கள் எல்லாம் வலியுருத்துகின்றன.


  இந்த கட்டுரையின் நோக்கம் சம்சார வாழ்கை சிறந்ததா, சந்நியாச வாழ்கை சிறந்ததா என்று மத கருத்துகளை ஆராய்வது அல்ல, திருமண வாழ்க்கைக்கு சாதாரண மக்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை சமயங்கள் கொடுக்கின்றனவா என்பதை தொட்டு பார்க்கத்தான் மத விவகாரங்களுக்குள் புகுந்தோம். இனி நாம் பேசிக் கொண்டிருந்த சாமான்ய மக்களின் சிந்தனைக்கு வருவோம்.

பொதுவாக கிராமங்களில் ஊர் பொது விஷயங்களை விவாதிக்கும் போதோ அல்லது முக்கியமான பஞ்சாயத்தின் போதோ திருமணமானவர்களின் கருத்துக்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். திருமணமாகதவர்களின் கருத்துகளை பெரிது படுத்தமாட்டார்கள். அவனுக்கு கல்யாணமாகி குடும்பத்தை நடத்துகின்ற பொறுப்பு இருந்தால் நல்லது கெட்டது தெரியும். ஒரு சிக்கலை தீர்க்கும் திறமை இருக்கும் என்ற எண்ணத்தில் விட்டு விடுவார்கள்.

   பல திருமண நிகழ்ச்சிகளில் கூட திருமணமாகாத ஆணுக்கோ பெண்ணுக்கோ மரியாதை இருப்பதில்லை. கிராமத்து பரிபாஷையில் பிரம்மசாரிகளை மொட்டைகள் என்றே அழைப்பார்கள். நகரங்களில் வேறுவேறு பெயர்கள் இருக்கலாம். ஆனால் விஷயம் என்னவோ ஒன்றுதான்


  இதனால் தான் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கால காலத்தில் திருமணம் செய்து வைத்து விட வேண்டுமென்று துடியாய் துடிக்கிறார்கள். பிள்ளைக்கு திருமணம் முடியவில்லை என்ற கவலையில் மனம் பேதலித்து போன பல தாய்மார்களை நானறிவேன். சில பிள்ளைகளும் தனக்கு திருமணமாக வில்லையே என்ற ஏக்கத்தில் தற்கொலை வரை சென்றுவிடுகிறார்கள்.

  இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தின் பாதிப்பு இன்னும் கூட என் மனதில் இருக்கிறது. தினகரன் என்ற ஒரு நண்பர் எனக்கு வெகுநாள் பழக்கம். அவர் சொந்த ஊர் திருவண்ணாமலை என்றாலும் வாரத்தில் இரண்டு நாளாவது என்னை பார்பதற்காக வந்து விடுவார்.

 என்னை விட ஐந்து வயது பெரியவர் என்றாலும் வயது வித்தியாசம் பாராமல் பழகுவார். போக்குவரத்து துறையில் கௌரவமான உத்தியோகம். கை நிறைய சம்பளம், உடன் பிறந்த தங்கை மற்றும் பெற்றோரை  தவிர பெரியளவில் உறவுகள் கிடையாது.

அவருக்கு ஒரே கவலை, தனக்கு எந்த பெண்ணும் சரிவர அமையவில்லை என்பது தான். பெண் பார்க்க மேலுருக்கு போகிறேன். ஆற்காடு போகிறேன் என்பார் கடைசியில் ஒன்றும் சரிவரவில்லை என்று சோகத்தில் உட்கார்ந்து விடுவார். இவர் எதிர்பார்ப்புக்கு தகுந்த பெண் அமையவில்லையா? அல்லது முயன்று பார்த்தும் எல்லாம் தட்டி கழித்து போனதா என்று எனக்கு அப்போது தெரியாது.


  ஆனால் எல்லா நேரமும் திருமணத்தை பற்றியே பேசுவார். அதையே தான் சிந்திப்பார், பல நேரங்களில் அழகான மணைவி, அறிவான குழந்தை என்று கற்பனை விரிய பேசிக்கொண்டே போவார். எனக்கு அது சலிப்பாக கூட இருக்கும். அவர் மனதை புண்படுத்த கூடாது என்று பூம்பூம் மாடு போல தலையாட்டடி கொண்டு இருப்பேன்.

 இந்த எண்ணங்களே அவருக்கு மாறி மாறி வலுவாக தாக்க நாளாவட்டத்தில் மனநோயாளியாகி விட்டார். வேலை போனது வீட்டில் உள்ளவர்களின் நிம்மதியும் போனது. ஒரு நாள் தனது உடம்பெங்கும் மண்ணெய் ஊற்றிக் கொண்டு எரிந்து சாம்பலாகி விட்டார்.

   அவரது மரணம் மனதில் ஆறாத வடுவாக பதிந்து விட்டாலும் இவரை போல் இன்னும் எத்தைனையோ மனிதர்கள் இருப்பார்கள். அத்தனை பேருடைய கஷ்டங்களை நிவர்த்திக்க எதாவது வழிவகை இருக்கிறதா என்று பலமுறை யோசித்தேன். ஆன்மீக வாழ்வையும் மந்திர பயிற்சிகளையும் மேற்கொண்ட நாள் முதல் திருமண தடையை விலக்கும் தாந்ரிக வழி ஏதாவது கிடைக்காதா என்று தேட ஆரம்பித்தேன் அப்போது தான் சுயம் பார்வதி ஹோமத்தை பற்றியும் அஞ்சனத்தை பற்றியும் விவரங்கள் எனக்கு கிடைத்தது.


    சுயம் பார்வதி அஞ்சனம் என்பது மலையத்துவஜ மகாராஜா தனது மகள் மீனாட்சியின் திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்பதற்காக அரண்மனை மாந்திகர்களை கொண்டு உருவாக்கியதாக ஐதீகம் இருக்கிறது. இந்த அஞ்சனத்தை பயன்படுத்திய பிறகு மீனாட்சி சொக்கநாதரை சந்தித்து திருமணம் நடந்ததாக மதுரை ஸ்தலபுராணங்களில் ஒன்று சொல்கிறது. அந்த காலத்தில் இந்த அஞ்சனத்தை மிக சுலபமாக செய்து இருக்கிறார்கள். இப்போது அந்த மூலிகைகள் உற்பத்தி மிகவும் குறைந்து விட்டதினால் ஒவ்வொன்றையும் தேடிப்பிடித்து செய்வது மகா கடினமாக இருக்கிறது.

    தாழைமடல், கருந்துளசி வேர், மதிமயக்கி, பூனை மயக்கி, தண்ணீர் விட்டாங் கிழங்கு, திகைப்பூண்டு, சிகப்பு கற்றாழை போன்றவைகளை முறைப்படி காப்பு கட்டி அந்த அஞ்சனம் தயாரிக்க வேண்டும். பிறகு அவற்றில் உருவேற்றுவதற்குய மூல மந்திரம் தனியாக உண்டு. இதை நிறைய செய்து வைத்து பலருக்கு பிரித்து கொடுக்க இயலாது. தனிப்பட்ட ஒருவருக்கென்று பிரத்யேகமாக ஒரு மண்டல காலம் பொறுமையுடன் செய்ய வேண்டும்.

 இப்படி செய்து பயன்படுத்த ஆரம்பத்தால் அதிகபட்சமாக ஆறு மாத காலத்திற்குள் எத்தனை தடையுடைய ஜாதகமாக இருந்தாலும் அத்தனை தடைகளையும் நீக்கி நல்லபடியாக திருமணத்தை நடத்தி முடித்து விடலாம்.மேலும் கணவன் மனைவி பிரிந்து இருந்தால் அவர்களை இணைக்கவும் இது பயன் படும் இதை எனது அனுபவத்தில் பலருக்கு பயன்படுத்த கொடுத்து இறைவன் அருளால் வெற்றி கிடைத்திருக்கிறது. 

அன்று பார்வதி சொக்கநாதர் திருமணத்தை நடத்தி வைத்ததினால் தான் இதற்கு சுயம் பார்வதி அஞ்சனம் என்ற பெயர் வந்தது. அன்று நடந்த தெய்வீக திருமணம் இன்றும் இந்த அதிசய மூலிகைகளால் நடைபெறுவது ஆச்சர்யம் அல்ல ஆனந்தம்  

+ comments + 8 comments

அன்புள்ள தோழர்களே,


சிவயசிவ - என்று ஒரு பிளாகரை துவங்கியுள்ளேன்...


அதை படிக்க இங்கே http://sivaayasivaa.blogspot.com கிளிக்குங்கள்

படித்துவிட்டு தங்களது மேலான ஆலோசனையை பின் ஊட்டமிடுங்கள்


நன்றி .....

ஆச்சரியமாக இருக்கிறது ஐயா...

இன்று எத்துணையோ ஆண்களும் பெண்களும் உரிய காலத்தில் திருமணம் ஆகாமல் பரிதவிக்கிறார்கள் ..

அவர்களுக்கெல்லாம் இந்த சுயம் பார்வதி அஞ்சனம் கிடைத்தால் ?

நன்மையே - திருவருள் துணை செய்யட்டும்

very nice!!!!!!!!!!!!!

thanks for this useful message...

sir,
very useful service. i search visakam 4 patham girl 0r kettai natchatiram girl.this two star match 9 more than other stars.it is very difficult to search horoscope match girl, is this anjanam help to find suitable girl then i need this one.

முகம்மது சந்நியாசத்தை ஆதரிக்கவில்லை என்ற கருத்து பல இடங்களில் படிக்கக் கிடைக்கின்றது. எனது வழி சம்சார வாழிவே என்று உறுதியாகச் சொன்ன முகம்மது தனது மனைவிமாரகள் அனைவரும் முஸலீம் ஜமாத்தின் தாய்மார்கள்.எனவே அவர்கள் யாரும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று தனது மனைவிகளுக்கு மட்டும் சந்நியாசம் அளித்துவிட்டு இறந்து விட்டாா்.ஆயிசா என்ற மனைவிக்கு அப்போது வயது 18 இருக்கலாம். மற்றும் ரேகானா , சல்மா போன்றவர்களும் வயதில் மிகவும் இளமையானவர்களே. பத்துக்கும் மேற்பட்ட மனைவிகளுடன் ஏராளமான குமுஸ் பெண்களுடன் காம சுகம் திகட்ட திகட்ட அனுபவித்து வாழந்த முகம்மது தனது மனைவிகளுக்கு மட்டும் சந்நியாசம் அளித்தது புதிர் தானே ?


Next Post Next Post Home
 
Back to Top