Store
  Store
  Store
  Store
  Store
  Store

மனிதன் ஏன் பாவம் செய்கிறான்?


கேள்வி : மனிதன் ஏன் பாவம் செய்கிறான்?
பழனி குடியாத்தம்

இறைவன் படைப்பில் மனிதனுடைய செயல்கள் மட்டும்தான் பாவபுண்ணிய கணக்கில்வரும் மற்ற ஜீவன்களுக்கு அத்தகைய சூழ்நிலை இல்லை, மனிதன் தன் மனத்திற்கு இதமளிக்கக் கூடிய செயல்களையே விரும்பிச் செய்கிறான்,

இன்னின்ன பொருள்களால் தனக்கு சுகம் வரும் எனக் கருதும் போது ஆசைவயப்படுகிறான், இந்த ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ளவே தவறு எனத் தெரிந்தும் ஆணவத்தின் போக்கில் பல பாவச் செயல்களைச் செய்கிறான்,

அதனால்தான் கௌதம புத்தர் ‘ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஆசையை ஒழித்தால் இன்பம் அடையலாம்’ என்றார், 

ஆசையை ஒழித்து பாவத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டுமென்றால் மனம் எனும் வண்டியை நாம் ஓட்ட வேண்டும், அந்த வண்டி நம்மை ஓட்ட நாம் அனுமதிக்கக்கூடாது,




 

Contact Form

Name

Email *

Message *