Store
  Store
  Store
  Store
  Store
  Store

பணத்துக்கு பலியாகும் தமிழன்


    டந்த முடிந்த சட்டமன்ற தேர்தல் பல அரசியல் கட்சிகளின் மனோதிடத்தை ஆட்டி வைத்திருக்கிறது என்பது யாரும் மறக்க முடியாத உண்மை.

 தாங்கள் தான் தமிழகத்தின் நிரந்தர சிம்மாசனவாசிகள் எனக் கனவு கண்டு கொண்டிருந்த பலரின் மண்டையில் ஓங்கி அறைந்திருக்கிறது. பெட்டிகடையில் இருந்து ஆகாய விமானம் வரை ஆட்டி படைத்த ஒரு குடும்பமே ஆட்டம் கண்டிருக்கிறது.

 அதிகாரம் கையில் உள்ளது. என தலைகால் புரியாமல் யார் ஆடினாலும் அவர்கள் மக்கள் சக்தியின் முன்னால் தூசி துரும்பாக தூக்கி எறியப்படுவார்கள் என்பது மீண்டும் நிறுபனம் ஆகியிருக்கிறது என்று எழுத எழுதியதை நம்ப ஆசையாகதான் இருக்கிறது.


 ஆனால் உண்மை நிலையை ஆராயும் போது அப்படி எதுவும் நல்லதாக நம் கண்ணில் தெரியவில்லை. இப்படி நான் சொல்வது சிலருக்கு வியப்பாகவும், இந்த மனுஷனுக்கு எதிலேயுமே திருப்தி ஏற்பாடாது போலிருக்கிறது என தோன்றும்.

ஆனால் உண்மை நிலையை எடுத்துக்காட்டினால் நான் சொல்வது சரிதான் என சிலருக்கு தலையாட்ட தோன்றலாம்.

  ஆளும் கட்சியாக அதிகாரம் செலுத்திய திமுக தனது சாதனைகளாக மலிவு விலை அரிசி, இலவச தொலைக்காட்சி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கான்கீரிட் வீடுகள் என நீள பட்டியலை மக்களின் முன்னால் வைத்தாலும் எதிர் கட்சியாக கூட அமரும் தகுதியை இழந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் மூலையில் கிடக்கிறது.

 63- இடங்கள் தரவில்லை என்றால் கழுத்தை நெறிப்போம் என்று மிரட்டிய காங்கிரஸ் இடுப்பொடிந்து வீதியில் கிடக்கிறது.

நாங்கள் இருக்கும்மிடம் வெற்றியின் இருப்பிடம் என வீராப்பு பேசிய பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் போன்றவைகள் ஓரளவுக்கு குப்பைக் கூடையில் வீசப்பட்டுவிட்டன.


   அருதி பெரும்பான்மை பெருமா என சந்தேகத்தோடு நடமாடிய ஆதிமுக முழு வெற்றி பெற்றுவிட்டது.

 நேற்று தான் பிறந்தது என ஏளனம் செய்யப்பட்ட தேமுதிக எதிர்க்கட்சியாக ஜம்மென்று உட்கார்ந்து விட்டது.

இவையெல்லாம் நல்ல விசயங்கள் தானே என்று நம்மால் சந்தோஷப்பட முடியவில்லை.

            படுதோல்வியடைந்த திமுக தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த வாக்காளர்களின் சுமார் 1 கோடியே 40 லட்சம் பேர்களில் வாக்குகளை பெற்றுள்ளது.

 எல்லாத் துறையிலும் ஊழலை மட்டுமே, அராஜகத்தை மட்டுமே துணையாக கொண்ட திமுக விற்கு இத்தனை பேர் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் அத்தனை பேருக்கும் தமிழகத்தில் நடைபெற்ற ஊழல் ஆட்சியை பற்றி எதுவுமே தெரியாது என்று சொல்வதா, அல்லது இப்படி நடப்பது தான் சரியான ஆட்சிமுறை என்று இவர்கள் நம்புகிறார்களா என்பதை சிந்திக்க வேண்டும்.


    ஏறக்குறைய ஒன்றரை கோடி முட்டாள்கள் பொறுப்பற்றவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வருவது கலப்படம் இல்லாத அறியாமையாகும்

 இத்தனை பேர் இன்னும் திமுக வின் விசுவாசிகளாக இருக்கிறார்கள் என்று சொல்வதும் அப்பாவி தனமாகும். பிறகு எப்படி இவ்வளவு ஓட்டு திமுக வால் பெறமுடிந்தது என்பதை அலசினால் கசப்பான ஒரு உண்மை தெரியவரும்.

 ஒட்டுமொத்த தமிழர்களுகமே ஊழலாட்சிக்கு எதிராக ஆர்ப்பரித்து வாக்களித்தார்கள் என்பது உண்மை என்றால் காங்கிரஸ் பாமக போலவே திமுக வும் ஒற்றை இலக்க எண்களில் தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

 ஆனால் அப்படியேதும் நடக்காமல் போனதை வைத்து பார்க்கும் போது பணத்திற்கு மயங்கி ஓட்டுபோட்டவர்களின் எண்ணிக்கையாக தான் நமக்கு படுகிறது.

அலைக்கற்றை ஊழலில் கலைஞர் தரப்பார் பெற்ற பணம் இந்த தேர்தலில் கணிசமாக விளையாடியது பல இடங்களில் 100, 200 என்றும் வேறு சில இடங்களில் 500, 1000 என்றும் அதற்கு மேலும் பட்டுவடா செய்யப்பட்டதை நாம் அறிவோம்.

 நான் கூட ஒரு பதிவில் அதை சுட்டிக்காட்டியிருந்தேன். எங்கெல்லாம் 100, 200, மட்டும் விநியோகம் செய்யப்பட்டதோ அங்கெல்லாம் திமுக மிகக் குறைவான வாக்குகளை பெற்றது. ஆயிரமும் அதற்கு மேலும் பட்டுவடா செய்யப்பட்ட இடங்களில் திமுக வென்றிருக்கிறது.

          இன்னொரு முக்கியமான விசயமும் தமிழகத்தில் நடந்தது டீக்கடை தொடங்கி, தொலைக்காட்சி நிலையங்கள் வரை திமுக தோற்றுவிடும் என்று பரபரப்பாக பேசப்பட்டதனால் கட்சியின் மேலிடத்தில் இருந்து வந்து குவிந்த பணமூட்டைகளை பல திமுக பிரமுகர்கள் வீட்டை விட்டே வெளியே கொண்டு வரவில்லை

 எப்படியும் தோற்கப்போகிறோம் அதற்கு எதற்காக பணத்தை வாரி இறைக்க வேண்டும் என்று கருதிய அவர்கள் வரப்போகும் ஐந்து வருடத்திற்கு தங்களது சொந்த வறட்சி நிவாரணத்திற்காக வைத்து கொண்டார்கள். இதனால் கூட வாக்காளர்களை வாங்க முடியாமல் போய்விட்டது.

   பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்க முடியாது என்று இப்போது கூட எந்த அரசியல்வாதியும் நினைக்கவில்லை தமிழன் இன்றைய காலகட்டத்தில் சில நூறுகளுக்கு தன்னை விற்க தயாராகயில்லை. ஆயிரக்கணக்கில் விலை கொடுத்தால் நான் தன்னை வாங்க முடியும் என்று கருதுகிறான் என்று தான் எல்லா அரசியல்வாதிகளும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

 இதுதான் நடந்து முடிந்த தேர்தல் நமக்கு காட்டும் நிதர்சனமான உண்மையாகும். எனவே தமிழக மக்கள் எல்லோரும் பணத்தை வெறுத்து காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்று பட்டினத்தார் போல ஞானம் பெற்றுவிடவில்லை நீ மட்டும் கோடிகோடியாக சம்பாதிக்கலாம் எனக்கு வெறும் நூறும் பீரும் தானா என்ற நிலையிலேயே பெறுவாரியான பேர்கள் இருக்கிறார்கள்.

          கருணாநிதி குடும்பத்தார் சம்பாதித்தது பாவப்பணம் அவர்களிடம் அதை வாங்கி ஓட்டுப்போடுவது மகாபாவம் என எல்லா மக்களும் நினைத்திருந்தால் வரலாற்றுப் பக்கங்களில் திமுக விற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம்.

 நிலைமை அந்த அளவு இன்னும் வளர்ச்சியடையவில்லை என்று தான் நமக்கு காட்டுகிறது. சன்மானம் பெற்று ஓட்டுபோடுகின்ற வழக்கத்தை மக்கள் எப்போது கைவிடுகிறார்களோ அப்போது தான் இந்த நாட்டில் நிஜமான ஜனநாயகம் மலரும்.

 ஆனால் துரதிஷ்ட வசமாக விடுதலைக்கு பிறகு நடைபெற்ற முதல் பொது தேர்தலிலேயே காங்கிரஸ் கட்சி ஓட்டுக்காக மக்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவாகிவுள்ளது.

 அந்த மரபு இன்று வரை தொடர்கிறது. கோஷம் போட்டு கொடிபிடிப்பதை தடை செய்யவும் சட்டத்தால் பணம் கொடுப்பதை தடுக்க முடியாது என்று சொல்ல இயலாது

 செய்ய வேண்டும். என்ற மனவுறுதி இருந்தால் எல்லாம் சாத்தியமே. அது சாத்தியப்படும் வரை ஜனநாயகம் என்பது கோமாளித்தனம் தான்.

Contact Form

Name

Email *

Message *