Store
  Store
  Store
  Store
  Store
  Store

கொசுவை விரட்ட துப்பாக்கி எதற்கு...!

    த்தியாகிரகத்தின் ஆயுதம் என்பது நேர்மையும் மன துணிச்சலுமே ஆகும் இது பாபா ராம்தேவ் அறியாதது அல்ல

ஆனாலும் அவர் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுக்க போகிறேன் என சொல்வது எதன் அடிப்படையில் என்று நமக்கு தெரியவில்லை

 ஊழலை ஒழிப்பதற்காக பாபா கையில் எடுத்திருக்கும் சத்தியாகிரக ஆயுதம் நமது இந்தியாவில் பல முறை பயன் படுத்தப்பட்டு வெற்றி கண்டதே ஆகும்

 மகாத்மா காந்தி அடிகள் சோனியாவின் அரசை போல் பல மடங்கு பலம் கொண்ட ஆங்கில ஏகாதிப்பத்தியத்தை எதிர்த்து உலகமே வியக்கும் வண்ணம் வெற்றி பெற்றார்


  அவரின் அறப் போராட்டத்தில் பல முறை அரசு ஆயுத பிரயோகம் செய்து இருக்கிறது

 ஆயிரக்கணக்கான போராட்ட வீரர்களின் உயிர்கள் பறிக்கப் பட்டு இருக்கின்றன

 லச்சக்கனக்கான பேர் அடாவடி சட்டங்களால் வாழ்கையை தொலைத்து இருக்கிறார்கள்

 திரும்பி வரவே முடியாத அந்தமான் சிறைகளில் அடைப்பட்டு வதைப்பட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள்

அப்பொழுது எல்லாம் கூட காந்தி எந்த தொண்டரையும் பார்த்து திருப்பி தாக்கு என சொன்னது இல்லை

அவர் மட்டும் அப்படி ஒரே ஒரு வார்த்தையை சொல்லியிருந்தால் கையளவே உள்ள வெள்ளையர்களின் உடல்கள் சின்னாபின்னமாகி இருக்கும்


  1947 வரை சுதந்திரத்துக்காக கர்த்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது

ஆனால் எப்போதுமே மகாத்மா அறப் போராட்டத்தின் ஆத்ம தத்துவத்தை மறந்தது இல்லை

எதிரி உன்னை அடித்தாலும் மிதித்தாலும் துணிச்சலுடன் அதை தாங்கி கொள் திருப்பி தாக்க மனதாலும் நினைக்காதே

அவன் கொலையே செய்ய வந்தாலும் கம்பீரமாக எதிர் நில் உனது மரண துணிச்சல் அவனை நிலைகுலைய செய்து விடும் என்றார்

 வீரம் என்பது மற்றவரை தாக்குவதில் இல்லை தாக்குதலை தாங்குவதிலே இருக்கிறது என அடிக்கடி சொன்னார்

 இந்த வார்த்தைகளை காந்தி போலியாக மற்றவர்களிடம் மரியாதையை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக சொல்லியிருந்தால் கொலையாளி தன்னை நோக்கி சுடும் போது அவனை பிடியுங்கள் அடியுங்கள் என்று தான் கத்திருப்பாரே தவிர மரண வேதனையிலும் ஹே ராம் என சொல்லியிருக்க மாட்டார் 


 அத்தகைய வீர புருஷனின் வழியில் தான் நடப்பதாக ராம்தேவ் சொல்கிறார்

 பாபா ராம் தேவ் ஒரு சாதாரண மனிதர் அல்ல பதஞ்சலி முனிவர் சொல்லியிருக்கும் அனைத்து யோகா ரகசியங்களையும் கரைத்து குடித்த சிறந்த மனிதர்

யோகா என்பது வெறும் உடல் பயிற்சி அல்ல தசையும் எலும்பும் நரம்பும் கொண்ட சாதாரண மனித உடலை புடம் போட்டு அலை பாயும் மன குதிரையை கட்டுக்குள் அடக்கி மனிதரையும் தெய்வம் ஆக்கும் உயரிய கலை

 இதில் தற்போதைய நிலையில் பாபா ராம்தேவ் தான் உச்சத்தை தொட்டவர் என உலகில் பலரும் நம்புகிறார்கள்

அவர் இப்படி ஒரு வார்த்தையை சொல்லி இருப்பது லச்சக்கணக்கான சத்தியாகிரக அனுதாபிகளை வேதனை அடைய செய்துவிடும்

 ஊழலுக்கு எதிரான போரில் அரசாங்கம் தாக்கட்டுமே! நீண்ட குண்டாந் தடியால் போராட்டகாரர்களின் மண்டைகளை பிளக்கட்டுமே!


  அவர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் ஊழல்வாதிகளின் நெஞ்சை பிளக்கும் கோடாரிகளாகவே மாறுமே அல்லாது மதிப்பிழந்து போகாது

 அவர்கள் தாக்கினால் பதிலுக்கு பதில் நாம் தாக்க வேண்டிய அவசியம் இல்லை அப்படி செய்தால் அவர்களை போல் நாமும் ஒருவராக ஆகிவிடுவோம்

அவர்கள் தாக்க வரும் போது நாம் தப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை

 தப்பித்து ஓடுவது சமயோஜித உத்தியாக இருக்கலாமே தவிர நிஜமான அறப் போராட்டம் ஆகாது

 கத்தி இன்றி ரத்தம் இன்றி நடக்கும் இந்த யுத்தத்தில் சத்தியம் ஒன்று தான் ஆயுதமும் கேடயமும் ஆகும்

அதை தவிர வேறு ஆயுதங்களையோ தற்காப்பு பயிற்சிகளையோ இளைஞர்களுக்கு ராம்தேவ் போன்றவர்கள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை

 அதை அவரிடம் இருந்து உலகம் எதிர் பார்க்கவும் இல்லை

 உணர்ச்சி வேகத்தால் பேசுவது அரசியல்வாதிகளுக்கு சரியானதாக இருக்கலாம் 

 சத்தியாகிரகிகளுக்கு ஏற்புடையது அல்ல

அவசர நிலை காலத்தில் நடந்த அடக்கு முறைகளை கூட ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற மாபெரும் தலைவர்கள் அறவழியிலே சந்தித்து முறியடித்தார்கள்

 அறிவில் சிறந்த இந்திரா காந்தி அல்ல சோனியா காந்தி

 இவரை வீட்டிற்கு அனுப்ப ஊழல்வாதிகளை பரண் மீது மூட்டை கட்டி போட மக்கள் தயாராகி விட்டார்கள்

 உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் நேர்மை என்ற நெருப்பை ராம்தேவ் போன்றவர்கள் விசிறி விட்டாலே போதும் தானாக பற்றி கொள்ளும்

கொசுவை விரட்ட துப்பாக்கி பிடிக்க போவதாக சொல்வது பக்குவ பட்டதாக இருக்காது

 இதை பாபா ராம்தேவ் உணர்ந்தால் அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது


Contact Form

Name

Email *

Message *