( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )வரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

உயிர்பலியிடுவதை இறைவன் ஏற்றுக் கொள்கிறானா?

யிர்பலியிடுவதை இறைவன் ஏற்றுக் கொள்கிறானா?
                                                                             மணிகண்டன்  பர்மா

   றைவன் எதையும் ஏற்பதுமில்லை. மறுப்பதுமில்லை,

   அவன் படைத்த பொருளையே அவனுக்குக் கொடுத்ததாக நாம் கற்பனை செய்து திருப்திபட்டுக் கொள்கிறோம்,

  இறைவனின் முன்னால் மாமிசமும். மலரும் ஒன்றுதான், நம்முடைய மனோபாவத்தில் தான் வேறுபாடு உள்ளது,

   நான் முன்பு கூறியது போன்று பலியிடுதல் விஷயம் தாந்திரீக வேள்விகளுக்கும் வேறுசில வேள்விகளுக்கும் மட்டும் உள்ளது, 
    அது வேறு விஷயம், ஆலயங்களில் பலியிடுவதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை,

 எனவே ஆலயத்தில் பலியிடுவது கடுமையாக எதிர்க்க வேண்டிய ஒன்றாகும், அந்த பலியிடுவதற்குப் பதில் மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்தி இறைவனின் அருளை நிச்சயம் பெறலாம்,

 
+ comments + 12 comments

நல்லகாரியம் ....எல்லா உயர்களுக்குமே வாழுகின்ற உரிமை நிச்சயமாக இருக்கின்றது இறைவனின் படைப்பில் ....பலிஇடுதல் எல்லாமதங்களிலும் ஆசையாக வளர்த்த (அன்புடனும் ) இறைவனுக்கு சமர்ப்பித்தல் மனதின் ஆசைகளையும் இறைவன்பால் கொண்டுள்ள பக்தியிணைக் வெளிபடுத்தும் முகமாகவே மதங்களில் அனுஷ்டிக்க பட்டுவர்கிறது..மற்று பல தாந்திரீக காரியமாகவும் செய்து வருவதும் நடைமுரெயில் காணக்கிடைக்கின்றது ஆனாலும் எதோவோ..... மனதில் நெருடுகின்றதே ..........தமிழ்மன்னன்

Anonymous
09:51

மற்ற உயிகளை பலியிடுவதில் என்ன பெருமை இருக்கிறது இந்த ஆடை அணிந்த மனித விலங்குகளுக்கு ?. தன்னை பலியிட துணிவு உள்ளவனே உயர்ந்த மனிதன். அவன் தான் இறைவனுக்கு, அறநெறிக்கு உகந்த மனிதனாக இருக்க முடியும்.. ஒரு பயன் கருதி மற்ற உயிர்களை மனிதன் பலியிடுவது சரி என்றால், மனித பலிகளும் , குழந்தைகளை பலியிடுவதும் தவறில்லை.. இறைவனும் மனிதனை பழிக்குப்பழி வாங்கிக்கொண்டுதான் இருக்கிறான்.. எப்படி?. நோய்கள், சுற்று சூழல் மற்றும் இயற்கை பேரழிவுகள் வழியாக.. புரிந்தவன் மனிதன்.. புரியாதவன் அறிவிலி...

11:24

இறைவன் யார் என்பது பற்றி இஸ்லாம் மிகத் தெளிவாக குர்ஆனில் கூறப்பட்டுள்ளது :

112:1 قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
112:2 اللَّهُ الصَّمَدُ
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
112:3 لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
112:4 وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

சரி. விசயத்திற்கு வருவோம். உலகில் ஓர் உயிர் வாழ, மற்றொரு உயிரை உண்ண வேண்டியது கட்டாயம். ஓர் உயிரை புசிக்காமல் மற்றொரு உயிர் வாழ முடியாது என்பது இறைவனின் படைப்பு.

உயிர் என்பதை நாம் எல்லோரும், நம் கண்ணுக்கு தெரியும், நம் கண் முன்னே நகரும் - நடக்கும் மிருகங்கள், பறவைகள் போன்றவைகளை மட்டுமே உயிர் உள்ளவை என்று (தவறாக) பொருள் கொள்கிறோம்.

நம் கண்ணுக்கு தெரியும், ஆனால், நம் கண் முன்னே நகர முடியாத - நடக்க முடியாத மரங்கள், செடிகள், கொடிகள் போன்றவையும் உயிர் உள்ளவையே. உதாரணாமாக, ஒரு செடியை பிடுங்கி எறியுங்கள். ஓரிரு நாட்களில் வாடி (செத்து) விடும்.

நம் கண்ணுக்கு தெரியாமல், ஆனால், நகர்ந்து - ஊர்ந்து செல்லும் உயிர்களும் உள்ளன. உதாரணமாக, நாம் தினமும் குடிக்கும் குடிநீர் அல்லது பால் போன்றவற்றிலிருந்து ஒரு சொட்டு எடுத்து மைக்ராஸ்கோப் மூலம் பாருங்கள். ஆயிரமாயிரம் புழுக்கள், பூச்சிகள் போன்றவற்றை உயிருடன் நீந்தி, நெளிந்து செல்வதை மிகத்தெளிவாக பார்க்க முடியும்.

உயிரற்றவை என்றால்: கல், மண், ஆணி, பிளாஸ்டிக், கண்ணாடிப் பொருட்கள் போன்றவைதான்.

ஆக, உயிரைக் கொன்று சாப்பிடக் கூடாது - உயிர்ப்பலி கூடாது என்று பார்த்தோமானால், நாம் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்க முடியாது. கண்ணுக்கு தெரிந்தால் மட்டும்தான் உயிரா? கண்ணுக்கு தெரியாத உயிரை கொன்றாலும் உயிர் உயிர்தானே?!

"அந்த உயிர் பாவமில்லை. இந்த உயிர்தான் பாவம்" என்பதை தீர்மானிக்க நாம் யார்? அந்த அதிகாரத்தை நமக்கு கொடுத்தது யார்? எந்த உயிரை கொன்றாலும், உயிர் உயிர்தானே!!??

எனவே, இறைவனால் உணவுக்காக அங்கீகரிக்கப்பட்ட உணவுகளான தண்ணீர், பால், கீரை, காய்கறி, ஆடு, மாடு, கோழி, மீன் போன்ற உயிர்களை சாப்பிடுவதில் எந்தத் தவறும் கிடையாது. இவை இல்லாமல் நம்மால் உயிர் வாழவும் முடியாது.

12:50

மாட்டுக்கறி (பசு மாமிசம்) சாப்பிடக் கூடாது என்று எந்த ஹிந்து வேதங்களிலோ அல்லது புராணங்களிலோ சொல்லப்படவில்லை என்றாலும், ஏனோ சில (அல்லது பல) ஹிந்து சகோதரர்கள் பசு மாமிசம் சாப்பிடுவதில்லை.

இன்னும் சொல்லப் போனால், வால்மீகி எழுதிய ராமாயணத்தில் "ராமன் இறைச்சி உண்டார்" என்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. பிறகு, ராமனை வணங்குபவர்கள் ஏன் தங்களை சைவம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்? என்று ஒருபுறம் சர்ச்சை நடந்து கொண்டிருகிறது. இருப்பினும், அந்த சர்ச்சைக்குள் இப்போது இங்கு நாம் செல்லத் தேவையில்லை.

இருப்பினும், இன்றைய காலகட்டத்தில், பல ஹிந்து சகோதரர்கள் பசுவை ஒரு புனிதமாக (கோமாதா) கருதி வரும் சூழ்நிலையில், குறிப்பாக, கேரளா போன்ற பல மாநிலங்களில் ஹிந்து சகோதரர்கள் உட்பட, கிறிஸ்தவ, முஸ்லிம், மற்றும் பிற சமுதாயத்தவர்கள் பசுக்கறியை விரும்பி உண்ணும் சூழ்நிலையில், கட்டுரையாளரின் கட்டுரை தலைப்பிற்கு, அவர் தேர்ந்து எடுத்து இருக்கும் படம், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு முடிச்சு போடும் விதமாக இருக்கிறது -அல்லது- ஏதோ ஓர் உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது??

இப்படம் பல ஹிந்து சகோதரர்களின் மனதை புண்படுத்துவது போல் இருப்பதால், கட்டுரையாளர் இப்படத்தை மாற்றியமைத்தால், அவரது நடுநிலைமை பாராட்டப்படும்.

@Abdul Rahman

அன்பரே நீங்கள் விரும்பிய வண்ணம் தலைப்பு புகைப்படம் உடனடியாக மற்றப் பட்டுள்ளது இதனால் உங்களுக்கு ஏற்ப்பட்ட மன வருத்தத்திற்கு மன்னிக்கவும்

இப்படிக்கு
சதீஷ் குமார்

15:19

திரு. சதீஷ் குமார் அவர்களே!

வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுப்பதோடு மட்டும் நின்று கொள்ளாமல், அவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு அளித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த உங்களுக்கு மிகுந்த நன்றியும் பாராட்டுகளும்.

Anonymous
16:03

//நம் கண்ணுக்கு தெரியும், ஆனால், நம் கண் முன்னே நகர முடியாத - நடக்க முடியாத மரங்கள், செடிகள், கொடிகள் போன்றவையும் உயிர் உள்ளவையே.//
செடிகளுக்கு/ நுன் கிருமிகளுக்கு மூளை, நரம்பு மண்டலம் எல்லாம் கிடையாது . அதனால் அதற்கு வலியும் கிடையாது. உணரவும் முடியாது. மேலும் நெல் அறுவடை செய்வது அது காய்ந்த பின் தான். வெண்டை, கத்தரிக்காய் etc . செடியிலிருந்து எடுக்கும் போது செடி இறப்பது கிடையாது.
//"அந்த உயிர் பாவமில்லை. இந்த உயிர்தான் பாவம்" என்பதை தீர்மானிக்க நாம் யார்?// மனிதர்கள் தாம் தீர்மனிக்கவேண்டும். நமக்கு பகுத்தறிவு இருக்கிறது. அதைகடவுள் ஒன்றும் சொல்ல தேவை இல்லை.

Manusmrithi 5.51
Those who permit slaying of animals; those who bring animals for slaughter; those who slaughter; those who sell meat; those who purchase meat; those who prepare dish out of it; those who serve that meat and those who eat are all murderers.

Atharvaveda 6.140.2
O teeth! You eat rice, you eat barley, you gram and you eat sesame. These cereals are specifically meant for you. Do not kill those who are capable of being fathers and mothers.

Atharvaveda 10.1.29
It is definitely a great sin to kill innocents. Do not kill our cows, horses and people.

18:18

ANONYMOUS 16:03

நண்பரே! தயவுசெய்து மனுஸ்மிர்தியிலிருந்து உதாரணங்கள் காட்டாதீர்கள். எனக்கு அதில் சற்றும் உடன்பாடு கிடையாது. எனக்கு என்று இல்லை. இவ்வுலகில் யாருமே ஏற்றுக் கொள்ள முடியாத - ஏற்றுக் கொள்ள கூடாதவையெல்லாம் இருக்கின்றன.

அதே மனுஸ்மிர்திதான் "பெண்களை ஒரு போதும் நம்பாதே! ஒரு பெண்ணோடு தனித்து அமாராதே! அது உன் தாயாக இருந்தாலும் சரியே. அவள் உன்னை தகாத செயலுக்குத் தூண்டுவாள்(??!!). உன்னுடைய மகளோடு தனித்து அமராதே. அவள் உன்னைத் தூண்டுவாள்(!!??) உன்னுடைய சகோதரியோடு தனித்து அமராதே. அவள் உன்னைத் தூண்டுவாள்(!!??) (என்ன கொடுமை சரவணன் சார் இது??).

நுன் கிருமிகளுக்கு மூளை இல்லை. (நுன் கிருமிகளுக்கு மட்டும்தானா???) அதனால் அதற்கு வலியும் கிடையாது என்று கூறுகிறீர்கள். வலி இல்லாமல் ஒரு உயிரை எடுப்பதென்றால், ஒருவருக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்து, ஆழ்ந்த நிலை தூக்கத்தில் வைத்து, வலி தெரியாத நிலையில், அவரை கொன்று விட்டால் சரியென்று ஆகி விடுமா?

இங்கு "வலி" விவாதப் பொருள் அல்ல. "உயிரை பலி கொடுக்கலாமா?" என்பதே!

பகவத் கிதையில் பகவான் பல யோகங்களை பற்றி பேசுகிறார். இதில் மிக சிறந்த யோகம் பக்தி யோகம் என்று கூறுகிறார் . அகவே, இறைவனிடம் பக்தி செய்ய உயிர் பலி தேவையில்லை என்று என் கருத்து..மற்றபடி.. முஸ்லிம் நண்பர்களுக்கு நான் எந்த ஒரு விளக்கமும் கொடுக்க விரும்பவில்லை.. காரணம்.. நான் ஒரு வார்தையில் மிகவும் நம்பிக்கை கொண்டவன். கர்மா! இதுதான் அந்த வார்தை! ஒருவன் தன் பூர்வ ஜன்ம பாவ புண்ணிய செயல்களுக்கு ஏற்ப இந்த பிறவியில் பல தேசத்தில் பல மதத்தில் பிறவி எடுக்கிறான்.ஒருவன் பசுவை உண்கிறானோ, அல்லது நாயை உண்கிறானோ..எல்லாம் அவனின் கர்மா விதிப்படிதான் நடக்கிறது.நான் 20 வயது வரை அசைவம்.பிறகு சைவமானேன். இப்போது எனக்கு வயது 38 . இதுவும் என் கர்மம்தான். நான் சொல்லவருவது என்னவென்றால்.இறைவனுக்கு என் மிது அதிக கருணை! இந்த பிறவியில் பசு மாமிசம் மட்டும் இல்லை, மற்ற எந்த பிராணியின் மாமிசமும் உன்ன விருப்பம் இல்லாமல் என்னை செய்து..என் பாவங்களை போக்கி தன் வசம் என்னை அழைக்கிறான். அறிவுள்ள நண்பர்கள் புரிந்துகொள்ளுங்கள்.

Anonymous
14:10

புலிகளுக்கும் சிங்கங்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் "இறைச்சி உண்ணாதே" என்று அறிவுரை சொன்னால் கேட்குமா?. அவர் அவர் இயல்பு என்னவோ அதுவே அவர்குல்டைய நிலைப்பாடு .. மனிதர்கள் அவர்கள் இயல்பை பின்பற்றட்டும்.. விலங்குகள் அதனதன் இயல்பை பின்பற்றட்டும்..

Anonymous
04:29

இவ்வுலகம் அதில் உள்ள யாவும் நம்மால் அனுபவிக்க பட வேண்டியவை. அனுபவித்தல் என்பதற்கு பொருள் பரவசபடுதல் ஆனந்த படுத்தல் என்றும் அறிய வேண்டும். இதை ஒருவர் மற்றவர்க்கு சொல்ல இயலாது.
உணவு விஷயங்கள் நம் மன, வுடல் வளர்ச்சியை பொருத்து அமையும். சிறு குழந்தையாய் இருக்கும் பொது பாலை மட்டும் குடிக்கிறோம்.பெரியவர்கள் ஆன பின்னல் எல்லா வற்றையும் ஜமாய்கிறோம். நாம் பிரியாணியோ அல்லது இட்டிலியோ சாப்பிடுகிறோம் என்பதற்காக இன்று பிறந்த குழந்தைக்கு அவற்றை கொடுப்பதில்லை.நாங்கள் குழந்தையாய் இருந்தபோது கீழே விழுந்து முழங்காலில் ரத்தம் வந்தால் மண்ணை அப்பினோம்.பின்னர் இங்கை போட்டோம். பின்னர் டிஞ்சரை போட்டோம். இந்த கால குழந்தைகள் உடனே அண்டிபயொடிக் பௌடரை கொண்ட்டு வருகிறது. எங்கள் தாத்தா மண்ணை போட்டார், நானும் போடுவேன் என்று கூறுவதில்லை. ஆகா ராமன் பசு மாமிசத்தை சாப்பிட்டார் என்பதற்காக நாம் விருப்பம் இல்லாமல் சாப்பிடவும் முடியாது. அந்த காலத்தில் சாப்பிட்ட அவரை குறை கூறவும் முடியாது.
கடவுள் - கூறப்பட்ட விளக்கங்களில் சிறந்ததாக கருதப்படுவது நம்மாழ்வாரின் திருவாய் மொழியில் முதல் பத்தில் வரும் ஐந்தாம் பாசுரம் ஆகும்.

Sriram
09:51

புலால் உண்ணாமை வள்ளுவர் கருத்தைக் கொண்டால் "ஊன் உண்பவர் எப்படிப் பிற உயிர்களிடத்து அன்பு செலுத்தமுடியும்? இறைவன் பரமாத்வாக எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கின்றான். ஆனால் மனிதன் மட்டுமே தனது உள்ளுணர்வால் (பரமாத்மாவின் தூண்டுதலால்) எழும் எண்ணங்களைத் தானே மற்ற விலங்குகள் போல் செய்யாமல் சுயநலத்தோடு தனக்கு வேண்டுவனவற்றைச் செய்கிறான். ஒரு குழந்தைக்கு தன வீடு பிறர் வீடு என்னும் வேறுபாடு கிடையாது. ஆனால் அறிவு வளரும்போது (அனுபவத்தால்) அவ்வேறுபாடு உண்டாகிறது.


Next Post Next Post Home
 
Back to Top