Store
  Store
  Store
  Store
  Store
  Store

காங்கிரஸ் கொடிபிடிக்க நான் தயார்...!


   பொது வாழ்விற்கு வந்து விட்டாலே பலரும் கேள்வி கேட்பார்கள் அந்த கேள்வி மனதிற்கு சந்தோசத்தை மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை சங்கடத்தையும் கொடுக்கலாம் தாங்க முடியாத வலியையும் கொடுக்கலாம்

 அதற்கு பயந்தால் நாம் நினைப்பதை செயல் படுத்த முடியாது எதையும் சாதிக்கவும் முடியாது

 எனது 25 வருட பொது வாழ்வில் எத்தனையோ விதமான கேள்விகளை எதிர் கொண்டிருக்கிறேன்

ஆரம்ப காலத்தில் அந்த கேள்வி கணைகள் மனதை குத்தி காயப்படுத்தும் போது எனது நண்பர் அமரர் முருகவேல் IAS  அவர்கள் ஒரு கருத்தை சொல்லி என்னை ஆசுவாச படுத்துவார்


 மற்றவர்கள் கேட்கின்ற கேள்விகள் எல்லாம் உன்னை காயப்படுத்துவதாக உன் முயற்சியை முட்டுக் கட்டை போடுவதாக நீ நினைத்தால் அது சுத்தமான அறிவீனம்

 கல்லுக்குள் மறைந்திருக்கின்ற அழகான சிலையை தேவை இல்லாத பாகங்களை விலக்கி வெளிக்கொண்டு வரும் உளியை போல மற்றவர்கள் கருத்தை எடுத்து கொண்டால் நீயும் அழியாத கற்சிலை போல் வெளி வருவாய்

 உளியின் பிளப்பிற்கு பயந்து மறைந்து கிடந்தால் வெறும் கல்லாக தான் காலம் கழிக்க வேண்டும் என்று சொல்வார்

 என்னை நோக்கி புகழ்ச்சிகள் வரும்போதும் இகழ்ச்சிகள் வரும்போதும் அவர் வார்த்தையை நினைவில் கொண்டு வந்து சிந்தித்து பார்ப்பேன் அதன் உண்மையும் கம்பீரமும் எனக்கு புரிந்து சிலிர்ப்பை தரும்


 சமீபகாலமாக எனது பதிவுகளை படித்து விட்டு சில வாசகர்கள் தரும் கருத்துக்களை பார்க்கும் போது நாம் எதையோ நினைத்து கொண்டு எழுதுகிறோம் இவர்கள் எதையோ புரிந்து கொண்டு விமர்சிக்கிறார்களே என்று தோன்றும்

 ஒரு வேளை நாம் தான் யாரும் புரிந்து கொள்ள முடியாத விதமாக எழுதுகிறோமோ என்றும் தோன்றும்

 ஆனால் அத்தகைய பின்னூட்டங்களை தொடர்ச்சியாக படிக்கும் போது நாமும் புரிந்து கொள்ள முடியாத வாறு எழுத வில்லை இவர்களும் புரிந்து கொள்ளாமலே விமர்சிக்க வில்லை என்பது தெளிவாக தெரிய வந்தது

 வேண்டும் என்றே என்னையும் என் கருத்தையும் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்க வேண்டும் எனற ஒரே எண்ணம் இவர்களிடம் இருக்கிறதே தவிர வேறொன்றும் இல்லை என்பதை தெளிவாக உள்ளங்கை நெல்லி கனி போல உணர்ந்து கொண்டேன்


 இப்படி விமர்சனம் செய்பவர்கள் பலர் கிறிஸ்தவ சகோதரர்களாகவோ இஸ்லாமிய சகோதரர்களாகவோ இருப்பதை அறிந்து கொண்டேன்

 இஸ்லாமியர்களில் பலர் என்னை குரானை படித்தறியாத மூடன் என்கிறார்கள்

 கிறிஸ்தவர்களோ பைபிளின் வாசனையே அறியாத அசடன் என்கிறார்கள்

  அப்படி அவர்கள் சொல்வது சரியாகவும் கூட இருக்கலாம் ஏனென்றால் எனக்கு என் அம்மாவைதான் முழுமையாக தெரியம்

 என் சித்தியயோ பெரியம்மாவையோ தெரியுமே தவிர முழுமையாக தெரியும் என்று சொல்ல முடியாது 


 அப்படி இருக்க வீணாக எதற்கு அந்த மதங்களை விமர்சனம் செய்கிறாய் என்று சிலர் கேட்கலாம்

என் அம்மாவை காலம் காலமாக மற்றவர்கள் ஏசியும் பேசியும் துன்புறுத்தும் போது என்னால் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியுமா?

  என்னால் முடிந்த வரை என் தாயை காக்க முயற்சிப்பேன் அப்படி முயலும் போது என் கையோ காலோ எதிரியின் மீது வேகமாக படலாம்

 அப்படி படக் கூடாது என்று சொல்பவர்கள் உன் தாயை நீ காக்க கூடாது என்று சொல்பவர்களாகவே நான் கருதுவேன்

பகுத்தறிவுவாதிகளும் மாற்று மதத்தினரும் என் மதத்தை என் மத தத்துவத்தை என் வழிப்பாட்டு கடவுளை தாக்கி கொண்டே இருக்கும் போது அதை தாங்கி கொண்டே இருக்க வேண்டும் என்று யாராவது எதிர்பார்த்தால் அது அறிவுடைமை ஆகாது


  குரானை போல பைபிளை போல கீதையும் கடவுளின் மொழி என்று அவர்கள் ஒத்துக்கொள்ளும் வரை என்னை போன்றவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள்

 நான் தேவாலயம் சென்று ஜபம் செய்யவும் மசூதி சென்று தொழுகை நடத்தவும் தயாராக இருக்கும் பரந்த மனம் படைத்த பல்லாயிரக் கணக்கான இந்துக்களில் ஒருவன்

 என்னை போல என் இந்து சகோதரனை போல அவர்களும் பரந்த மனதோடு வந்தால் எந்த பிரச்சனையும் இல்லை

 ஆனால் அவர்கள் வர மாட்டார்கள் தங்கள் மதத்தை தவிர மற்றவை எல்லாம் மட்டமானவைகள் என்ற எண்ணம் அவர்களிடம் ஓங்கி இருக்கிறது

 அதனால் தான் நீங்கள் நினைப்பது போல உங்கள் மதம் மாசு மறுவற்றது அல்ல அதிலும் களங்கம் இருக்கிறது அசிங்கம் இருக்கிறது திருத்த வேண்டிய விஷயம் இருக்கிறது என்று சுட்டி காட்டவே அவர்களை விமர்சனம் செய்கிறேன்


 எனது விமர்சனங்களுக்கு  தத்துவார்த்த ரீதியாக அவர்களால் பதில் சொல்ல முடியாத போது புழுதி வாரி இறைக்கிறார்கள்

 சொல்லுக்கு சொல் என்பது தான் அறிஞர் உலகம் சொல்லுக்கு கல் என்பது அறிவில்லாத உலகம்

 நான் இரண்டாவது உலகத்தாரை பார்த்து பரிதாப படுவேனே தவிர பயப்பட மாட்டேன்

 மேலும் எனது பதிவுகளுக்கு பின்னூட்டம் தரும் பலரின் கருத்துக்களும் மொழி ஆளுமையும் என்னை மிகவும் கவருகிறது

குறிப்பாக கம்பதாசன் என்பவரின் கருத்தும் அறிவு தெளிவும் என்னை பிரம்மிக்க வைக்கிறது

அந்த சகோதரர்களுக்கு எனது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

 அவரை போலவே ஜெய் ரமேஷ் என்பவர் ஒரு அழகான மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்

 அதை அப்படியே ஒரு எழுத்து கூட பிசகாமல் கீழே தருகிறேன் 

  •   சுவாமிஜி,கடந்த பத்துனாட்களாகத்தான் நான் உஜிலாதேவியைப் படித்துவருகின்றேன்.மாறுபட்ட தலைப்புகளில் வெளியாகும் அனைத்து கட்டுரைகளிலும் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளும் அருமை.இத்தனை நாள் எப்படி உஜிலாதேவியைப் படிக்காமல் விட்டோம் என்று வருத்தப்படுகின்றேன்.

எனக்கு ஒரு சந்தேகம்.

  •   மதத்தின் பேரால் நாட்டைப் பிளந்த மதவெறி கட்சி காங்கிரஸ்.இவர்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கண்ணைமூடிக்கொண்டு ஆதரவு தெரிவிப்பார்கள் .இது மதசார்பற்ற நாடு என்று சொல்வார்கள்.ஆனால் ஹிந்துக்களை மூன்றாம் குடித்தனக்கார்கள் போல் ,அவர்களைப் புறக்கணிப்பார்கள்.இதற்க்கு இங்குள்ள கம்யூனிஸ்ட்கள் முழு ஆதரவு தெரிவிப்பார்கள்.சமீப காலமாக காங்கிரஸ் உலக மகா ஊழல்களை செய்துவருகிறது.நீங்கள் காங்கிரஸ்சை சாடுகிறீர்கள்.அதேசமயம் பாஜாகவையும் சாடுகிறீர்கள்.கருணாநிதியையும் சாடுகிறீர்கள் ஜெயலதாவையும் சாடுகின்றீர்கள்.அரசியலில் உங்கள் நிலைபாடுதான் என்ன?

என்று அந்த மின்னஞ்சலில் கேட்டிருந்தார்

இவர் மட்டும் அல்ல இவரை போன்று நிறைய பேர் நேரிலும் தொலை பேசியிலும் இதே கேள்வியை கேட்டிருக்கிறார்கள்

சிலரோ எல்லோரையுமே சகட்டுமேனிக்கு திட்டினால் உங்களை புத்திசாலி என மற்றவர்கள் நினைத்து கொள்வார்கள் என நினைக்கிறிர்களா என்று கேட்டும் இருக்கிறார்கள்

அவர்களுக்கெல்லாம் நான் தனித்தனியான பதிலை சொல்லி இருந்தாலும் எல்லோரும் அறியும் வண்ணம் என் கருத்தை வெளியிட்டால் நல்லது என நினைக்கிறேன்

 எனக்கு காங்கிரஸ்,பாஜாக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளில் சாதாரண தொண்டர்களில் இருந்து மேல் மட்ட தலைவர்கள் சிலர் வரை நண்பர்கள் உண்டு

 அதை போலவே அந்த கட்சிகளில் கொள்கைகளிலும் எனக்கு நல்ல பரிச்சயமும் உண்டு

 அவைகள் எல்லாவுமே சிறந்த கொள்கைகள் தான் அவற்றில் எனக்கு மாற்று கருத்து கிடையாது

 ஆனால் அந்த கொள்கைகளை செயல் படுத்துவதில் யாருக்குமே அக்கறை இல்லை

 தங்களை பற்றி கவலைப்படுவார்கள் தான் அதிகம் இருக்கிறார்களே தவிர நாட்டைப் பற்றி கவலைப் பட பலர் இல்லை

 அதனால் தான் இவர்கள் எல்லோரையுமே நான் வெறுக்கிறேன்

 நாளைக்கே சோனியா காந்தி மன்மோகன் சிங் போன்றோர்கள் மக்களுக்கு நன்மையை செய்தால் காங்கிரஸ் கொடிபிடிக்க நான் தயார் இதுவே தான் பாஜாக வுக்கும்

 கலைஞர் கருணாநிதி அவர்களை பல காலமாக பார்த்து வருபவன் நான் அவரிடமோ அவரின் கட்சியிடமோ உருப்படியான நல்ல திட்டங்கள் எதையும் இதுவரை நான் கண்டது இல்லை

அதிமுக கூட எம்ஜிஆர்  காலம் துவங்கி இன்று வரை நிரந்தரமான பலன் தரக்கூடிய திட்டங்கள் எதையும் தீட்டி இருப்பதாக நான் கருதவில்லை

 புகழ்பெற்ற சத்துணவு திட்டம் கூட காமராஜரின் மதிய உணவு திட்டத்தின் நகல் என்றே சொல்லலாம்

 கழகங்களின் ஆட்சியில் சிலைகளும் மணிமண்டபங்களும் உருவான அளவிற்கு கல்விசாலைகளோ அணைக்கட்டுகளோ உருவாக வில்லை

 இலவசங்களும் கவர்ச்சியான வாக்குறுதிகளும் தான் கலைஞராலும் ஜெயலலிதாவாலும் இதுவரை தமிழகத்திற்கு கொடுக்கப் பட்டிருக்கிறது

 இந்த நிலை மாறி இவர்களால் மக்களுக்கு உண்மையாகவே நன்மை ஏற்பட்டால் இவர்களை பாராட்டுவதில் நான் ஒன்றும் கெட்டுப்போக மாட்டேன்

 இறைவன் அருள் இருந்தால் இவர்களை என்றாவது ஒருநாள் நான் பாராட்டுவேன் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்

ஆனால் இந்த நம்பிக்கை மூடநம்பிக்கை என்று என் நண்பர்களில் சிலர் சொல்கிறார்கள்  



Contact Form

Name

Email *

Message *