Store
  Store
  Store
  Store
  Store
  Store

உங்களுக்கும் இந்த குழப்பம் உண்டா....?


  •      ய்யா எனக்கு ஒரு சந்தேகம் , ஒரு நாள் என்பது காலை 6 மணி முதல் மறுநாள் கலை 6 மணி வரையா, இல்லை நள்ளிரவு 12 மணி முதல் 12 மணி வரையா . எனது ஜாதக குறிப்பில் சனிகிழமை பின்னரவு 3.30 மணிக்கு பிறந்தேன் என உள்ளது. இதை எந்த நாளில் சேர்ப்பது . தங்களது விளக்கம் தேவை. தவறாக கேட்டு இருந்தால் மன்னிக்கவும்
Vijayakumar. R



   ந்த வாசகர் கேட்டிருப்பது சாதரணமான கேள்விதான் ஆனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாகும்

 பலருக்கும் இந்த மாதிரியான சந்தேகமும் குழப்பமும் இருந்து வருகிறது

 இதனாலேயே பலர் தான் பிறந்தது செவ்வாய் கிழமையா புதன் கிழமையா என தடுமாறி வருகிறார்கள்

 நமது தமிழ் மற்றும் இந்திய கணக்குப்படி ஒரு நாள் என்பது ஒரு சூரிய உதயம் துவங்கி இன்னொரு சூரிய உதயம் வரை ஆகும்

அதாவது காலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரைத்தான் ஒரு நாள்

 ஆனால் ஆங்கில கணக்குப்படி ஒரு நாள் என்பது நள்ளிரவு அல்லது அதிகாலை 1 மணிக்கு துவங்கி விடுகிறது


பஞ்சாங்கப்படி ஜாதகம் கணிப்பதற்கு தமிழ் முறையை பின்பற்றுவது தான் கால காலமாக நடந்து வருகிறது

 ஆங்கில வழி ஜோதிடமான எண் கணித முறைக்கு தமிழ் வழி கணக்கு சரியாக வராது

அரசாங்க நடைமுறைகளுக்கு ஆங்கில பாணியே பின்பற்ற படுவதால் ஒரு நாளின் துவக்கம் ஒரு மணி முதல் ஆரம்பமாவதாக வைத்துக் கொள்ளலாம் அதில் தவறு இல்லை

ஆனால் ஜோதிடம் கணிக்கும் போது நிச்சயம் தமிழ் முறையே பின்பற்ற பட வேண்டும்

 இந்த வாசகர் பிறந்தது சனி பின்னிரவு என்பது தமிழ் வழியில் சரி ஆங்கில வழியில் பார்க்கும் போது ஞாயிறு அதிகாலை என்பதே சரியான கணக்காகும்

 இதில் குழப்பம் அடைய ஒன்றும் இல்லை ஜாதக கணக்கெல்லாம் ஜோசியர்கள் பார்த்துக்கொள்ளட்டும்

 உங்கள் நடைமுறை கணக்குப்படி நீங்கள் பிறந்தது ஞாயிறு அதிகாலை என்பது உறுதி


Contact Form

Name

Email *

Message *