( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )30 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846 

Share !
This Post

உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

இன்று அழுவது அழகிரி...! நாளை...?


   ற்ற கட்சி தலைவர்களுக்கு அந்த திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் திமுக தலைவர்களுக்கு அந்த திறமை எப்போதுமே அலாதியாக உண்டு

அதாவது கட்சி தொண்டர்களை எப்பாடு பட்டாவது சிந்திக்க முடியாமல் செய்வது ஆகும்

 திண்ணையில் படுத்தேனும் திராவிட நாடு வாங்கித் தீருவேன் என்றும் அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றும் மேடை தோறும் வாய்கிழிய பேசினார்கள்


  மத்திய அரசு பிரிவினை வாத தடுப்பு சட்டம் கொண்டு வந்ததோ இல்லையோ தங்களது திராவிட நாட்டுக் கொள்கையை தூக்கி உடப்பில் போட்டுவிட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று முழங்கினார்கள்

 தனிநாடு கோரிக்கை கைவிட பட்டது பற்றி தொண்டர்கள் யாரும் சிந்தித்து விட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தங்களது நாத்திக சிந்தனையை பற்றி கூட கவலை படாமல் திருமூலரை துணைக்கு அழைத்து கொண்டனர்

 அவசர நிலை காலத்தில் இந்திரா காந்தி அம்மையாரை வாய்க்கு வந்தப்படி பேசிவிட்டு எம்ஜியாரை தொற்கடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக நேருவின் மகளே வருக நிலையான ஆட்சியை தருக என பட்டு கம்பளம் விரித்து வாய்பந்தல் போட்டார்கள் 


    அப்போதும் தொண்டர்கள் சிந்தித்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மிக ஜாக்கிரதையாக எம்ஜியாரும் மொரார்ஜி தேசாயும் நாட்டை காட்டிக் கொடுக்க போகிறார்கள்

 தேசத்தையே காப்பாற்ற திமுக வால் தான் முடியும் என திருமதி காந்தி கெஞ்சி கூத்தாடி கேட்டதாகவும் அதற்காகவே காங்கிரசோடு தோழமை கொண்டதாகவும் கதை அளந்தார்கள்

 இப்படி எத்தனையோ மாயஜாலங்களை காட்டி தொண்டர்களை மதி மயக்குவதில் திமுக தலைவர்கள் பலே கில்லாடிகள்

  ஆனால் ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது போல எவ்வளவு தான் ஜிகுணா வேலைகளை நடந்து முடிந்த தேர்தலில் செய்தாலும் குடும்ப அதிகார போதையில் அடிமட்ட தொண்டன் வரைக்கும் கூட மறைக்க முடியாமல் போய்விட்டது


 குழந்தையின் வெள்ளி கொடியை அடகுவைத்து மனையின் தாலியை விற்று திமுக கொடி ஏற்றி ஊர்வலம் போன தொண்டன் தன்னை மிதித்து தனது ரத்தத்தை குடித்து வாழ்வது தான் கோபாலபுரத்து கோமகனின் வாடிக்கை என்பதை அழகிரி தயாநிதி கனிமொழி போன்றோரின் கழக பிரவேசத்தை வைத்து நன்றாக அறிந்து கொண்டான்

அதனால் தான் முடிந்த தேர்தலில் தனது முடிவை மாற்றி பதிவு செய்தான்

 இது பொறுக்குமா தாங்க முடியுமா திருகுவளையின் வாரிசுகளுக்கு

 நேற்றுவரை கைகெட்டி வாய்பொத்தி வளைந்து நின்ற தொண்டன் இன்று சிந்திக்க ஆரம்பித்து மார்பை நிமிர்த்தினால் எப்படி தாங்க இயலும் 


 அதனால் தான் அஞ்சாநெஞ்சன் அழகரி குடும்ப அரசியல் தான் திமுக தோல்விக்கு காரணம் என திமுகவினரே கூறி வருவது வருத்தம் தருவதாக உள்ளது என ஒரு திருமண விழாவில் அழாத குறையாக சொல்லியிருக்கிறார்

 அவரது ஆற்றாமையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது

 மனோன்மணியம் என்ற தமிழ் நாடக காப்பியத்தில் குடிலன் என்ற அமைச்சன் பொது ஜனங்களை பற்றி பிடித்தால் கற்றை விட்டால் கூளம் என்று சொல்வதாக ஒரு வசனம் வரும்

 திராவிட பரிவார கட்சிகள் அனைத்துமே மக்களை பற்றி இத்தகைய கணிப்புகள் தான் வைத்து இருக்கிறது


   தான் என்ன கூத்து அடித்தாலும் எத்தனை குட்டி கரணம் போட்டாலும் மக்கள் அதை கண்டுகொள்ள மாட்டார்கள் மறந்து விடுவார்கள் பாவம் அவர்களுக்கு சிந்திக்க தெரியாது என்று தான் நினைத்து கொண்டு இருக்கின்றன

 அந்த நினைப்பிற்கு நெத்தி அடி கிடைத்ததும் புலம்பி திரிகிறார்கள்

 இந்த இடத்தில் திமுக காரர்களும் மற்றய கட்சி காரர்களும் ஒரு உண்மையை உணரத் தலைப்பட வேண்டும்

 மக்கள் என்பவர்கள் ஆட்டு மந்தைகள் அல்ல நீங்கள் நினைத்தப்படி ஓட்டி சென்று விடலாம் என கனவு காண்பதற்கு

 இனி எங்களை யாராலும் விழ்த்த முடியாது நாங்கள் ஆலமரம் போல் விழுதுகள் விட்டு தளைத்து விட்டோம் ஆயிரம் அராஜகம் செய்தலும் தட்டி கேட்க ஆள் கிடையாது என வீராப்பு பேசிய ஒரு குடும்பமே இருந்த இடம் தெரியாமல் மக்கள் சக்தி முன்னால் போய் விட்டது


  இதே நிலைமை நாளை யாருக்கும் வராது என்று சொல்ல இயலாது

 தனிப்பெரும் வலிமை தனக்கு இருக்கிறதே என்ற தலைக்கனத்தில் வரம்பு மீர நிலைப்பவர்கள் இன்று அழகிரி வருத்தப்படுவது போல் வருந்த வேண்டிய நிலை உருவாகி விடும்

 இதை மனதில் வைத்து செயல் பட்டால் தான் நிம்மதியாக காலம் தள்ள இயலும்

 செருப்பு போட மாட்டேன் காலால் நடக்க மாட்டேன் கோவிலுக்கு போகாமல் கோட்டையில் தான் பூஜை செய்வேன் என்று துதிபாடும் கூட்டத்தாரின் புகழ் மாலைக்கு மயங்கினால்....

 நாம் எதுவும் சொல்ல தேவை இல்லை அவர்களுக்கே இது புரியும்!+ comments + 21 comments

ரொம்ப விளக்கமாகச் சொல்லாமல் சுருக்கமாக நடப்பாட்சிக்கு அறிவுரை. அருமை. நமது அனுபவங்கள் மட்டுமல்ல அடுத்தவர் அனுபவமும் நமக்கு பாடமாக வேண்டும்.

Anonymous
07:43

எனக்கு தெரிந்த வரை காமராஜரை போல் ஒரு நேர்மையான அரசியல்வாதி நமது இந்திய திருநாட்டில் யாருமே இல்லை.

காமராஜர் இறக்கும் போது அவருக்கு இருந்த சொத்து வெறும் இரண்டு வேஸ்டி சட்டை மட்டுமே,

ஒருமுறை அவர் மாநிலத்தில் சுற்று பயணம் மேற்கொண்டிருந்த போது அவருடைய மந்திரி கக்கரின் மாவட்டத்திற்கு வந்த அவர் கக்கரை காணவில்லை என்று கக்கரின் வீட்டிற்கு சென்றார்

அப்பொழுது கக்கர் தன்னிடம் இருந்த ஒரே ஒரு வேஸ்டி சட்டையை துவைத்து காய போட்டுவிட்டு காய்ந்தவுடன் போட்டு வரலாம் என்று காத்தி்ருந்தார் எவ்வளவு எளிமை !!!!!!!

இப்பொழுதெல்லாம் மந்திரியின் பதினட்டாவது கூத்தியாவிற்கு பின்னால் பத்து கார் போகி்றது.தற்போது பெரும்பாலான கோவில்களில் டைல்ஸ் ஒட்டபடுகிறது,அவற்றை கோவில் கருவறை முதல் அனைத்து பகுதிகளிலும் ஒட்டி விடுகிறார்கள் .

அது மட்டும் இல்லாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற கோவில்களிலும் துண்களுக்கு வார்னிஷ் அடித்து பல நுற்றண்டுகளாக இருந்துவந்த சிறப்பை கெடுத்து விடுகிறார்கள்.

கோவில்களில் பதிக்கப்பட்டுள கற்களில் நடப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகும்.

ஆனால் டைல்ஸ் மனிதனுக்கு உடல் நலனுக்கு தீமை தருகிறது.

அது மட்டும் இல்லாமல் பழங்காலத்தில் எந்த வசதியும் இல்லாதபோது பாறைகளில் இருந்து கற்களை எடுத்துவந்து நடப்பதற்கு பதித்துள்ளனர் .

ஆனால் தற்போது பத்துரூபாய்க்கும் இருபதுரூபாய்க்கும் டைல்ஸ் வாங்கி கற்களின் மீதும் கருவறைலும் ஒட்டி விடுகிறார்கள்

இவற்றை பாக்கும்போது வருத்தமாக உள்ளது . இதுபற்றி தாங்கள் கண்டிப்பாக ஒரு பதிவு போடவேண்டும்

ஹலோ யோகி ராமனந்தா ஐயரே! திமுக காரர்களுக்கு புல்லும் ஆயுதம். ஆனால் பாப்பானுக்கு கொன்டையே ஆயுதம் என்பது போல் உன்வாயில் வந்தது எல்லாம் பேசுவதை ஏதாவது அதிமுக காரன் கேட்டு சந்தோஷபடுவான் என்று விட்டு கட்டுறியா? ஜெயா ஆட்சியை விட திமுக ஆட்சியில் தான் பாப்பான் எல்லாரும் சந்தோஷமா இருந்தீர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. ஜெயேந்திர சரசுவதி சாமியை பிடித்து அவமான படுத்திய ஜெயாவுக்கு வக்காலத்தா வாங்குகிறாய் அறிவில்லா முன்டமே ஆட்சி மாறும் போது எல்லாம் நீ போட்டு இருக்கிற கொன்டையை ஆளுக்கு தகுந்ததுபோல் ஆட்டுவாய். இப்ப ஜெயாவுக்கு ஆட்டுகிறாயா? உன்னை விட ஜெயா பெரிய கொண்டை என்பதை மறந்துவிடாதே. உன்னையும் சுருட்டடி முடிந்து விடுவார் ஜெயா. எனவே ஜால்ராவை அடக்கி வாசிடா கலகமுட்டும் பாப்பானே.

@Briliant Kuranguபிரிலியன்ட் குரங்கு மிக சரியாக குரங்கு என்று காண்பித்து விட்டது.

Anonymous
12:05

Anonymous said...
//இப்பொழுதெல்லாம் மந்திரியின் பதினட்டாவது கூத்தியாவிற்கு பின்னால் பத்து கார் போகி்றது.//
ha ha ha super

Anonymous
13:18

தலைவனை ஏமாற்றிய‌ தொண்டன் கதை, அதுவும் தமிழகதில்.. புதிதாக உள்ள‌து..
எஜமான் எங்கே? யார் யாரோ பக்குவம் சொல்லுகின்றனரே...

தமிழகதில் மீண்டுமொரு பழப்பிரட்ஷனை தேவயடற்றது. தன்னை நம்பிய பக்தர்களை கடவுள் ஒரு போதும் கைவிட்டதில்லை. ஆனால் கடவுள் தந்தாலும் கோவில் பூஜாரிகள் விடுவதில்லை.

/* இப்பொழுதெல்லாம் மந்திரியின் பதினட்டாவது கூத்தியாவிற்கு பின்னால் பத்து கார் போகி்றது */

பதினெட்டு கூத்தியா வெய்த மந்திரியை விட, விடாமல் கூத்தியாவயும் அவர்களின் பின்னால் போகும் கார்களையும் எண்ணிக்கொன்டிருக்கும் அனாமிக்கா வயத்தெரிச்சல் புரிகின்ற‌து. வாய்ப்பு தனகில்லை என்கின்ற தாழ்புண‌ர்சியா? தனக்கமையவில்லை என்கின்ற வயத்தெரிச்சலா? இல்லை இவனுகெல்லாம் என்கின்ற தலைகண‌மா?

காரணம், மக்களின் பணதில் அவர்களப்படி ஆடிணால் அன்றிதிருவாலர் பொதுஜனம் பார்க்க வேண்டியது, மந்திரி தொகுதிக்கும், மக்களுக்கும் செயும் சேவை மட்டுமே தவிர அவர்களின் சொந்த வாழ்கையின் விருப்பு வெருப்புகலின் வயத்தெரிச்சலை அல்ல.

/* காய்ந்தவுடன் போட்டு வரலாம் என்று காத்தி்ருந்தார் */ஓ இது எளிமையா? சரி..மக்களின் தேவையை பூர்த்தி சேய்ய உழைக்க வேண்டிய தலைவர் முதல்வர் வந்ததும் சொல்லும் எளிமை வழி அருமை.

-/*நாம் எதுவும் சொல்ல தேவை இல்லை அவர்களுக்கே இது புரியும்*/
பலரின் தொடர்ஷியான பின்னோட்டம், கனவனிடம் வேண்டாம் வேண்டாம் என்னும் மனைவி போல உள்ள‌து.

உண்மையை நல்ல மொழிநடையில் எழுதியிருக்கிறீர்கள்!

உஜிலா ஒரு வெறும் ஆன்மீக ப்ளாக், அதிலும் ஹிந்துத்துவா ப்ளாக், மட்டும்தான் என்று நினைத்து இருந்தேன்.

"என் பெண்ணை முட்டாளா வளக்கலை"
http://ujiladevi.blogspot.com/2010/07/blog-post_28.html?showComment=1309157816386#c6835215467701124095

என்ற மிக மிக அருமையான ஒன்றை சமீபத்தில்தான் படித்தேன். ஆனால், அது சென்ற வருட பதிவு.

இதுபோன்ற கதைகள் - கட்டுரைகள் நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய / வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால், இவைகள் இங்கு ஒளிந்து இருப்பது வருத்தமே!

எல்லா பிளாக்குகளிலும், அவர்களின் எல்லா பதிவுகளையும் தேதி வாரியாக தொகுத்து வைத்து இருக்கிறார்கள்.

ஆனால், உஜிலாவில் அதுபோன்று தொகுப்பாக இல்லை. ஒவ்வொன்றாக தேடிப்பிடித்துதான் பார்க்க வேண்டியதுள்ளது.

குறைந்தபட்சம், ஆன்மிகம் - உலகம் - அறிவியல் - கதைகள் - கட்டுரைகள் - அரசியல்..... என்றாவது தொகுத்து வைக்கவும்.

அவ்வாறு மாற்றியமைத்தால், ஆன்மிகம் என்பதை மட்டும் தாண்டி, பலருக்கும் பயனாக இருக்கும்.

நன்றி!!!

Anonymous
13:56

ஆவ்வ்வ்வ், கமண்டை டெலிட் பன்ன முடியலையே

Anonymous
14:19

பாஸ்கரன் விவகாரங்களை தமிழக மக்கள் நன்கு அரிவர்.

ரபீக்
16:01

திமுகவினரை சிந்திக்க வைக்காமல் இருக்க கருணாநிதி செயல் பாடுவார் என்பது உண்மையே !!

ஆனால் அதிமுகவினர் சிந்திக்கவே மாட்டார்கள் என்பது அதைவிட பெரிய உண்மை !!

வாய்மையே வெல்லும்!

chozhan
16:02

அரசியல்லா இதெல்லாம் சாதரணமப்பா...

உப்பு தின்னா தண்ணி குடிச்சு தானே ஆகனும்?

Anonymous
11:23

நல்லது சொன்னா ஜால்ராவா... தமிழ்நாட்டுல‌ எல்லோரும் முட்டாலில்ல.
ஆலுங்கட்சி மக்களே எதிர்கட்சியை குரைத்து குறைத்து மதிப்பிடாதே.

சுழியம்
13:17

தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !

[தலித்தான] கே. கே. ஸகட் என்பவரை ஓராண்டிற்கு சங்கராச்சாரியாரின் இருக்கையில் அமர்த்துங்கள். புனே நகரின் சித்பவான் என்ற தீவிரப் பிராமண வகுப்பினர் நூறுபேர் அவருக்குப் பாதபூஜை செய்யட்டும்.


இப்படி எல்லாம் அம்பேத்கர் பேசி இருக்கிறார் !! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

அம்பேத்கரின் இந்த கருத்து பற்றிய முழு விவரம் இங்கே: http://www.tamilhindu.com/2011/07/why_ambedkar_converted_to_buddhism-09/

நல்ல கருத்து - புரிய வேண்டியவர்கள் புரிந்து செயல் பட்டால் நல்லது தான்

thimuka kaaranin naaththam pidiththa vaay ithil nanRaaka therikirathu !! koor mazhungkiya ""paarpana ethirppu"" vaalai innum vidaamal thimuka, thika vinar kaiyil vaiththirukkiraarkal ! antho parithaapam !!!

Anonymous
19:07

NADAPATHEELAM NANMYIKU

Anonymous
00:34

பாப்பனுக தொல்லை தாங்கலப்பா

Anonymous
06:39

parppanargalai tharakguraivaaga pesuvathu thaan anthilum tharam ketta varthaigalaal archnai seyavathu thaan paugutharivuvathaamaa? vanthal ithu aanmeeigam patri eluthappadugirathu enbathai padikka athiga neram selvidaththevailillai , Pidikkavillaiyaa pesaamal othugingi pogavendiyathu thaane. padithuvittu mottai yaaga enna comment. ithu thaan ungal pagutharivvu arivujeevithanamaa?


Next Post Next Post Home
 
Back to Top