Store
  Store
  Store
  Store
  Store
  Store

இது கண்டணத்துக்குரியது!

  • தற்போது பெரும்பாலான கோவில்களில் டைல்ஸ் ஒட்டபடுகிறது,
  • அவற்றை கோவில் கருவறை முதல் அனைத்து பகுதிகளிலும் ஒட்டி விடுகிறார்கள் .
  • அது மட்டும் இல்லாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்ற கோவில்களிலும் தூண்களுக்கு வார்னிஷ் அடித்து பல நுற்றண்டுகளாக இருந்துவந்த சிறப்பை கெடுத்து விடுகிறார்கள்.
  • கோவில்களில் பதிக்கப்பட்டுள கற்களில் நடப்பதால் உடலின் ரத்த ஓட்டம் சீராகும்.
  • ஆனால் டைல்ஸ் மனிதனுக்கு உடல் நலனுக்கு தீமை தருகிறது. அது மட்டும் இல்லாமல் பழங்காலத்தில் எந்த வசதியும் இல்லாதபோது பாறைகளில் இருந்து கற்களை எடுத்துவந்து நடப்பதற்கு பதித்துள்ளனர் .
  • ஆனால் தற்போது பத்துரூபாய்க்கும் இருபதுரூபாய்க்கும் டைல்ஸ் வாங்கி கற்களின் மீதும் கருவறைலும் ஒட்டி விடுகிறார்கள் இவற்றை பாக்கும்போது வருத்தமாக உள்ளது .
  • இதுபற்றி தாங்கள் கண்டிப்பாக ஒரு பதிவு போடவேண்டும் .
பெயர் சொல்ல விரும்பாத வாசகர்





  ன்புள்ள நண்பரே முதலில் உங்களது இந்த கருத்துக்கு தனி பதிவு தான் போட நினைத்தேன் ஆனால் மனிதனை அவசரமும் பணிசுமையும் பற்றி கொள்ளும் போது நினைத்ததை செய்ய முடியாமல் போகிறது

 அதனால் தான் இதை உங்களது கேள்வியாக எடுத்து கொண்டு பதில் சொல்கிறேன்

  ஆரம்ப காலத்தில் நமது பாரத திரு நாட்டில் ஆலயங்கள் வழிப்பாட்டு கூடங்கள் என்பது மலை அடிவாரமாகவோ மலை முகடாகவோ கடல் மற்றும் நதிக்கரை ஓரமாகவோ தான் இருந்தது

  ரம்யமான வனப்பகுதிகளும் மக்களின் வழிப்பாட்டிற்கு ஏற்ற இடம்மாக கருதப்பட்டது

  ஆதி காலத்தில் வாழ்ந்த புராண புருஷர்கள் தங்கள் வாழ்நாளில் பல சாதனைகள் செய்ததாக படித்திருப்பிர்கள் ஆனால் அவர்களால் ஆலயங்கள் எதுவும் கட்டப்பட்டதாக படித்திருக்க முடியாது


 உதாரணமாக ராமர்,கிருஷ்ணர்,தர்மர்,கர்ணன் போன்ற யுக புருஷர்கள் யாராவாது கோவில் கட்டினார்கள் என்று மகாபாரதத்திலோ ராமாயணத்திலோ எந்த ஆதாரமும் சொல்லப்பட வில்லை

  வேதங்களில் கூட ஆலயங்கள் உருவாக்கப் பட்டதாக தகவல் இல்லை

  புராண காலத்திற்கு பிறகு தான் ஆலயங்கள் உருவானதாக தெரிகிறது

  அதாவது ஆகம காலத்தில் தான் முறைப்படியான கோவில்கள் உருவானதாக சொல்லலாம்

  ஆரம்ப காலகட்டத்தில் மக்கள் செம்மண்ணை குழைத்தே கோவில் கட்டி இருக்கிறார்கள்

  அதன் பிறகு தான் சுட்ட செங்கல்கள் கொண்டு கட்டப்பட்டு இருக்கிறது


  கருங்கல்லை செதுக்கி ஆலய கட்டுமானதிற்கு பயன்படுத்தியது சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தான்

  நமது தமிழகத்தில் அப்போது இருந்த பல சிவாலயங்களும் பெருமாள் கோவில்களும் செங்கல்கள் கொண்டே கட்டப்பட்டு இருந்ததாக சங்க இலக்கியங்கள் பல சான்று தருகின்றன

  மாமன்னன் ராஜா ராஜா சோழனின் காலம் தொட்டே ஆலய நிர்மாண பணிகளுக்கு முழுக்க முழுக்க கற்கள் பயன்படுத்த பட துவங்கினர்

  வடக்கத்திய கட்டிட கலை தமிழகத்தில் வந்த பிறகு கோவில் பணிகளுக்கு கிரானைட் மற்றும் மார்பல் கற்கள் பயன் பட துவங்கி இருக்கிறது

 வடமாநிலங்களில் பல கோவில்கள் பளிங்கு கற்களாலேயே எழுப்ப பட்டிருப்பதை காணலாம்


  அதாவது ஆலய நிர்மாணம் என்பது காலம் தோறும் பல மாற்றங்களுக்கு உள்ளாகியே வளர்ந்து வருகிறது

 எனவே புதியதாக கட்டப்படுகின்ற கோவில்களில் பக்தர்களின் விருப்பப்படி டைல்ஸ் பதிக்கப்படுவதை நான் எதிர்க்க வில்லை

  ஆனால் பழைய புராதான ஆலயங்களில் புதுமையை புகுத்துகிறேன் என்று யாராவது செயல் பட்டால் அது கண்டணத்துக்குரியது

  அதுவும் பழைய கோவில்களில் கருவறைகளில் மாற்றம் செய்ய நினைப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்

 இதை அரசும் மக்களும் கண்டிப்பாக தடுக்க வேண்டும்

 மேலும் புதிய கோவில்களில் கருவறையில் டைல்ஸ் பதிப்பது தவறு என எனக்கு தோன்றவில்லை


   காரணம் ஆகமங்களில் ஒரு கருவறை இத்தனை அடி நீளத்தில் இத்தனை அடி அகலத்தில் இத்தனை அடி உயரத்தில் கட்டப்பட வேண்டும் என்ற நியதி வகுத்து சொல்லப்பட்டிருக்கிறதே தவிர கருவறை சுவர்கள் இதனால் தான் கட்டப்பட வேண்டும் என்று எதிலும் சொல்லியிருப்பதாக நான் அறிய வில்லை

 மேலும் நவீன முறைப்படி ஆலயங்களை கட்டுவதினால் இறை சானித்துவம் கிடைக்குமா என்று சிலர் யோசிக்கலாம்

  இறை சானித்துவத்தை கோவிலுக்குள் ஈர்ப்பது கோபுர கலசங்களும் விக்ரக பீடத்தில் ஸ்தாபிக்க பட்ட மூல சக்கரத்தின் வீரியமே ஆகும்

 இவை இரண்டும் சரியாக இருந்து விட்டால் நேற்று கட்டிய ஆலயமாக இருந்தாலும் ஆயிரம் வயதுடைய கோவிலாக இருந்தாலும் கடவுள் அருள் ஒன்றாகவே கிடைக்கும்

   எனவே நாம் புதுமையை வரவேற்கலாம் எந்த சூழலிலும் பழமையை அளித்து அதன் மேல் எழும்பும் புதுமையை ஏற்கவே முடியாது

  இதற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது நமது கடமை

Contact Form

Name

Email *

Message *